மகரம்:
உழைப்பிற்கு அதிபதியான சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. கிரக நிலைகள் மகர ராசிக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் மாதம் இது.
ஒரு முக்கிய பலனாக சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள்.
பனிரெண்டில் இருக்கும் சனி, கேதுவால் சில மகர ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி குருவின் வீட்டில் விரயத்தில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு நிலையான வேலை அமைப்புகளும், குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.
2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம்தேதி மாலை 5.21 மணி முதல் 10-ம்தேதி இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
ஐயா, கோச்சாரப்படி ஒரு ராசிக்கு பலன் சொல்லுவதிலும் பி.ஜாதகப்படி ஒருவருக்கு பலன் சொல்லுவதிலும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக கிரக சேர்க்கை பலன்கள் மாறுபடுமா?
ReplyDeleteஉதாரணமாக, கோச்சாரப்படி குரு 4 இல் வந்தால் நல்லதில்லை என்றும் பி.ஜாதகப்படி குரு 4 இல் இருந்தால் நல்ல பலன்கள் என்றும் கேள்வி பட்டிருக்கிறேன். please விளக்கவும்.
ReplyDelete