ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி:8870998888
மிதுனம்:
மிதுனநாதன் புதன் மாத
ஆரம்பத்தில் தனது அதிநட்பு ஸ்தானத்திலும், மாதம் முழுவதும்
உச்சவீட்டிலும் இருக்கப் போவதால் இது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மைகள்
தரும் மாதமாக இருக்கும். புத்தகம், கணக்கு, கம்ப்யூட்டர், பத்திரிக்கைத்துறை, அஞ்சல்துறை, வியாபாரிகள், பச்சைநிறம்
சம்பந்தப்பட்டவர்கள், சொல்லி கொடுப்போர்கள் போன்ற
துறையினருக்கு இந்த மாதம் சிறந்த நல்ல பலன்களும், பணவரவுகளும்
இருக்கும். வெகு நாட்களாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இப்போது கிடைக்கும்.
ராசிநாதனின் வலுவால்
உங்கள் தைரியம் பளிச்சிடும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள்.
நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.
சிலர் உல்லாச பயணம் செல்ல முடியும். வெகு நாட்களாக ஆரோக்கியக்குறைவு இருந்து வந்த
மிதுனராசிகாரர்கள் குணம் அடைவீர்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம்
போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்
பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
தாயார்வழியில் நல்ல
விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு
ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு. இளைஞர்களுக்கு பிடித்தமான
வேலை கிடைக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து
கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு
அனுசரணையானவர் வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு
திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும்
விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான
வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.
2,4,6,8,9,10,17,19,20,21,22
ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ந்தேதி மாலை 5.22 மணி முதல் 22-ந்தேதி காலை 6.11
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது.
ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.
No comments :
Post a Comment