Saturday, July 28, 2018

துலாம் : 2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள்,


ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யாகுருஜி

கைபேசி எண் :8870998888

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள் என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களின் குணநலன்களுக்கு ஏற்ப நன்மைகளை மட்டும் தரும் மாதமாக இருக்கும். உங்களை சந்தோஷப்படுத்தும் மாதம் இது. துலாத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் என்று சொல்ல எதுவுமே இல்லை. இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வீட்டிற்குள் வரும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் எதையும் சாதிப்பீர்கள். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால்  நன்மைகள் உண்டு. பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு.

1,2,4,7,11,16,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 8.45 மணி முதல் 7-ம் தேதி இரவு 11.49 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment