ஜோதிடக்கலைஅரசு
ஆதித்யாகுருஜி
கைபேசி எண் :8870998888
ஆகஸ்ட் மாதம் விருச்சிக
ராசிக்கு ஆனந்த மாதமே. வருமானமும், எதிர்பாராத பண வரவும், திருப்தியாக வரும். வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு பணஉதவிகளும்
தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள்.
நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை
ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு திருத்தலங்களுக்கு
செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை
வைப்பது நல்லது. அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் கசப்புக்கள் வரும்
என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.
இளைஞர்களின்
மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை இனிமேல் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப்
பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள்
உண்டு. வெளியூர் மாறுதல்,
செக்சன் மாறுதல் இருக்கும்.
புதிய முயற்சிகளை சிலவாரங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது. பெண்களுக்கு இது
உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள்
பேச்சைக் கேட்பார்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில்,
வியாபாரம்
போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு
கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின்
மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவுவார்கள். வீட்டில்
சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள்
வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள்
கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை
இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். விருச்சிகத்திற்கு நல்லவைகள் நடக்க
ஆரம்பிக்கும் மாதம் இது.
3,8,11,12,13,14,21,22,23,24
ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி இரவு 11.49 மணி முதல் 10-ம் தேதி அதிகாலை
12.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள்
எதையும் செய்ய வேண்டாம். மேற்கண்ட தினங்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது
என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.
No comments :
Post a Comment