ஜோதிடக்கலைஅரசு
ஆதித்யாகுருஜி
கைபேசி எண் :8870998888
கும்ப ராசிக்கு
எதிர்மறை பலன்கள் எதுவும் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள்
இந்த மாதம் ஆரம்பிக்கும். உங்களின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் கை
கொடுக்கும். முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான்
ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் கைவிட மாட்டார் என்பது
இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.
கும்பத்திற்கு எப்போதோ
ஒருமுறை நன்றாக அமையும் கோட்சார கிரகநிலைகள் இப்போது நன்றாக அமைந்திருக்கின்றன.
ஆனாலும் பிறந்த ஜாதகப்படி நன்மை தரும் தசாபுக்தி அமையாத சிலர் இன்னும்
கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ராசிப்படி பலன் சொல்வது இன்றைய கிரக
நிலையான கோட்சார நிலையை கணித்து சொல்லப்படுவது. ஆனாலும் நீங்கள் பிறந்த ஜாதகத்தின்
படி என்ன தசா,
புக்திகள் நடக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியம். தசா, புக்தி அமைப்பு சரியில்லை என்றாலும் கோட்சார நிலைகளை வைத்து ஓரளவிற்கு
சமாளிக்க முடியும். எனவே கும்பத்திற்கு கெடுதல் சொல்வதற்கு இல்லை. நல்ல தசாபுக்தி
அமையப் பெற்ற கும்ப ராசிக்காரர்கள் இந்தமுறை மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது
குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும்
அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.
நீண்டநாட்களாக
இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல்
நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில்
உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும்
கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு
சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள்.
இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும்
இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான
போக்குகளும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில்
சந்தேகம் எதுவும் இல்லை.
3,5,6,11,13,14,21,22,23,30
ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி அதிகாலை 12.39 மணி முதல் 16-ம் தேதி
அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது
நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய
முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment