Saturday, July 28, 2018

மீனம்: 2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள்,


ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யாகுருஜி


கைபேசி எண் :8870998888


தொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடனும், வரவுடன் இருக்கும் என்பதால் மீனராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதமாக இது இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இடைஞ்சல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும்.

அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. 

இளைய பருவத்தினருக்கு திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.

1,8,9,10,15,16,19,21,22,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை  3.55 மணி முதல் 18-ம் தேதி காலை 10.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment