ரிஷபம் :
ஜூலைமாதம் ரிஷப ராசிக்கு சிறப்புகளைச் சேர்க்கும் மாதம்தான். குருவின் பார்வை
படும் ஜீவன ஸ்தானத்தின் பலத்தினால் வருமானத்திற்கு எந்தக் குறையும் இருக்காது.
தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் இந்த மாதம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். அஷ்டமச்
சனி நடப்பதால் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை
விரயம் செய்வீர்கள் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன்
ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.
சனி எட்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம்
கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும்
என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம்
பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும்
சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும்
காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அந்தக் காதல்
அடுத்த வருடம் மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும். சுக்கிரன் ராகு இணைவதால்
உங்களில் சிலர் இந்த மாதம் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள்.
சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள்
நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள்
இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். கணவன், மனைவி உறவுகள்
பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால்
பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம்.
பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப
வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக
போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு
இரண்டுமுறை யோசித்து செயல்படுவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாகும். பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள்
அதிகம் இருக்கும்.
5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும் 24-ந்தேதி மதியம் 3.28
மணி முதல் 27-ந்தேதி அதிகாலை 4.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட
தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment