Saturday, February 3, 2018

கன்னி: 2018 பிப்ரவரி மாத பலன்கள்

கன்னி:

மாத ஆரம்பத்தில் பவுர்ணமி சந்திரனின் பார்வையில் ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் இருக்கும் நல்ல மாதம் இது. 5-ம் இடத்தில் ஒன்று கூடும்
சூரியன், புதன், சுக்கிரன், கேது நால்வரும் கன்னி ராசிக்கு யோகத்தை தருபவர்கள் என்பதால் இந்த மாதம் கன்னிக்கு உற்சாகத்தை கொடுக்கின்ற ஒரு மாதமாக இருக்கும். எனக்கு ஒன்றும் சரியாக நடக்கவில்லையே என்று மனதிற்குள் குழம்பி கொண்டிருப்பவர்கள் கூட இந்த மாதம் முயற்சிகளை செய்து வெற்றி காணும் மாதம் இது.


எதையும் சாதிக்க முடியும் மாதம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடும் நேரம் இது. தெய்வ அனுகூலம் கிடைக்கும். செவ்வாய், குரு வலுவாக உள்ளதால் சிலருக்கு திடீர் பணவரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.

சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் விற்ற லாபம் எங்கே என்று கல்லாவில் தேடுவீர்கள். பணம் இருக்காது. வேறு வழியில் செலவழிந்து போய்விடும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம்தான்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 6.29 முதல் 20-ம் தேதி மதியம் 2.02 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment