Saturday, February 3, 2018

சிம்மம்: 2018 பிப்ரவரி மாத பலன்கள்


சிம்மம்:

பிப்ரவரி மாத முன்பகுதியில் சிம்ம ராசிக்கு சுணக்கமான பலன்கள் இருந்தாலும் 15-ந்தேதிக்கு பிறகு ராசிநாதன் சூரியன் 7-ம் இடத்திற்கு
மாறி ராசியை பார்ப்ப போவதால் முதலில் சற்று சறுக்கியது போல தெரிந்தாலும் பிற்பகுதியில் நீங்கள் சுறுசுறுப்பாகி அனைத்தையும் சாதிக்கின்ற மாதமாக இது இருக்கும். ஒரு சிலருக்கு 20-ம் தேதிக்கு மேல் நல்ல மாற்றங்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடப்பதும் இருக்கும்.


மாத ஆரம்பத்தில் எதுவும் சரியாக இல்லாதது போலத் தெரிந்தாலும் எதிர்ப்புகளைக் குறிக்கும் கிரக அமைப்புகள் வலுவிழப்பதால் உங்களுடைய உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது. தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்டநாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும்.

சிலருக்கு கையில் இருந்த சேமிப்பு கரையும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தமாதம் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வருமானம் விரயமாகும். வேறு இன மொழி மதக்காரர்கள் உதவியாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானம் வலுவாக இருப்பதாலும் முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் குரு இருப்பதாலும் எவ்வித சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள். எனவே கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள் கலக்கும் மாதம்தான் இது.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி இரவு 8.83 முதல் 18-ம் தேதி காலை 6.29 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

No comments :

Post a Comment