Saturday, February 3, 2018

கும்பம்: 2018 பிப்ரவரி மாத பலன்கள்


கும்பம்:

யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் பனிரெண்டாம் வீட்டில் சுபத்துவ அமைப்பில் சந்திரனுடைய பார்வையில் இருப்பதால் குடும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்து தேவைகளும் நிறைவேறுகின்ற மாதமாக இது இருக்கும். அவரவர் தகுதிக்கேற்ப நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த உபயோகமான பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். விரயஸ்தானம் என்று சொல்லப்படும் பனிரெண்டாமிடம் சுபத்துவ அமைப்பில் இருப்பதால் செலவு செய்து நல்லவைகளை நீங்கள் அடையும் மாதம் இது. 


ராசியோடு செவ்வாய் தொடர்பு கொள்வதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். செவ்வாய் ஆட்சியாக இருப்பது தொழில் ஸ்தானத்தை வலுப்படுத்தும் நல்ல அமைப்பு என்பதால் ஜீவன விஷயங்களில் மாற்றங்கள் உள்ள மாதமாக இது அமையும். மஞ்சள்நிற தொழில், வட்டிக்கு விடுதல் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு.

உங்களுடைய சிந்தனை செயல்திறன், தைரியம் ஆகியவை சிறப்பாக செயல்படும் மாதம் இது. உடன் வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும். சிலருக்கு வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். சிலர் திருமண உறுதி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் இந்த மாதம் எதிர்கால வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி உண்டு.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். பிப்ரவரி 1-ம் தேதி மதியம் 3.06 முதல் 3-ம் தேதி மாலை 5.06 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

No comments :

Post a Comment