Saturday, February 3, 2018

மீனம்: 2018 பிப்ரவரி மாத பலன்கள்

மீனம்:

பதினொன்றாம் இடத்தில் கூடியிருக்கும் சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகிய நான்கு கிரகங்களும் லாபஸ்தானத்தில் நன்மைகளை தரும்
கோள்கள் என்பதோடு, மாத ஆரம்பத்தில் இவர்கள் நால்வரும் பவுர்ணமிச் சந்திரனின் பார்வையில் இருப்பதால் மீன ராசிக்காரர்கள் எதிலும் லாபத்தை அடைகின்ற மாதம் இது. அந்த லாபம் என்பது பண வரவாகவோ, பொருள் வரவாகவோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆதாயமாகவோ இருக்கும் என்பதால் மீனத்தினருக்கு உயர்வுகள் உள்ள மாதம் இது.


ஆன்மிகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் குலதெய்வ வழிபாட்டில் குறை வைத்திருப்பவர்கள் குலதெய்வத்தை தேடிச் செல்வீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும். பத்தில் சனி இருப்பதால் வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் இரண்டு மாதம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் இரண்டு மாதம் தவிர்க்கலாம். அலுவலகங்களில் சுமுகமாக சூழ்நிலை இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாகவே நடக்கும். எந்த வழக்கும், வம்பும் இனிமேல் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள்.

தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் இப்போது கை கொடுக்காது. யாரையும் நம்ப வேண்டாம். பணம் எடுத்துப் போகும்போது கவனம் தேவை. உயரதிகாரிகளாக இருப்பவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தங்கள் வரலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றே சிலர் திரிவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி மாலை 5.06 முதல் 5-ம் தேதி இரவு 10.29 வரை சந்திராஷ்டம்ம் தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment