Friday, June 30, 2017

கன்னி : 2017 ஜூலை மாத பலன்கள்

கன்னி :

ஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் ஆட்சிபெற்ற நிலையில் தனது நண்பரான சூரியனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நன்மைகளை தரும் மாதமாகத்தான் இருக்கும். சுக்கிரன், புதன் இருவரும் ஆட்சியாக இருப்பது உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு. பனிரெண்டாமிடத்து அதிபதி சூரியனுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில கன்னி ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்.

நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்தமாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள்.

கன்னி ராசிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவு உள்ள மாதமாகவும் இது அமையும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.

1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி அதிகாலை 12.24 மணி முதல் 19-ம்தேதி அதிகாலை 3.17 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment