Friday, June 2, 2017

தனுசு: 2017 ஜூன் மாத பலன்கள்

தனுசு :

யோகக்கிரகங்கள் குரு, சூரியன் செவ்வாய் மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டு செவ்வாய் ராசியையும் பார்ப்பதால் ஜூன் மாதம் எவ்வித தொல்லைகளும் இல்லாத மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும். இருந்தாலும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு இளைய பருவத்தினர் சனியின் தாக்கத்தை உணர்வீர்கள் என்பதால் இப்போதிருந்தே எதிலும் அகலக்கால் வைக்காமலும் அடுத்தவர்களை நம்பாமலும் தேவையற்ற கடன் விவகாரங்களில் சிக்காமலும் இருப்பது நல்லது.


மூலம் நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு சனியின் ஆதிக்கத்தினால் வேலை, தொழில் விஷயங்களில் மாற்றங்களும் குறைபாடுகளும் இருக்கும். நான்கிற்குடையவன் ஆறாம் அதிபதியின் பார்வையில் இருப்பதும், ஒன்பதிற்குடையவர் ராசிக்கு ஆறில் மறைவதும் தாய்-தந்தையர் விஷயத்தில் கருத்து வேற்றுமைகளும் மனச்சங்கடங்களும் இருக்கும் அமைப்பு என்பதால் பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து அவர்களின் மனதைக் குளிரவைப்பது நல்லது. வயதான பெற்றோர்களின் உடல்நலத்திலும் இந்தமாதம் அக்கறை தேவைப்படும்.

இளையவர்கள் ஒரு சிலருக்கு அலுவலகங்களில் வேலையை விட்டு விடும்படி நிர்ப்பந்தங்கள் இருக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருங்கள்.. அதேநேரத்தில் நடப்பவைகள் அனைத்தும் உங்கள் எதிர்கால நன்மைக்காகவும் சனி முடிந்த பிறகு உங்களை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நல்லவிதமாக நிலை கொள்ள வைக்கும் என்பதாலும் கவலைகளுக்கு இடமில்லை. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

1,4,5,11,12,13,19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 25-ம்தேதி அதிகாலை 6.01 மணி முதல் 27-ம்தேதி இரவு 7.57 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment