Friday, June 2, 2017

விருச்சிகம்: 2017 ஜூன் மாத பலன்கள்

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்கு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது. ஒரு சிறப்புப் பலனாக அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகி இதுவரை இருந்த துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சனிபகவான் இந்த மாதம் மீண்டும் உங்கள் நட்சத்திரத்திற்கு வர இருப்பதால் மன உளைச்சல்களைத் தரக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

எதுவாக இருந்தாலும் நடக்கும் ஜென்மச்சனி வரும் அக்டோபர் மாதம் விலகியதும் உங்களிடமிருந்து தற்போது பறித்துக் கொண்டிருக்கும் நிம்மதி உட்பட அனைத்தையும் சனிபகவான் இரட்டிப்பாகத் தருவார் என்பதால் எவ்விதமான கலக்கத்திற்கும் இடம் கொடாமல் தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டிய மாதம் இது. ஜென்மச்சனியின் முடிவில் நீங்கள் இருப்பதால் ஏற்கனவே கிடைத்த கடுமையான அனுபவங்களினால் சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றத்தில் இருப்பீர்கள். பக்கத்தில் வைத்திருந்தால் ஆபத்துத்தான் என்று தெரிந்தும் ஒருவரை விலக்க முடியாத அவஸ்தையிலும் இருப்பீர்கள். இது போன்றவர்களுக்கு நல்ல தீர்வுகள் மற்றும் சாதகமான முடிவுகள் ஜூன் மாதம் இருக்கும் என்பதால் விருச்சிகத்திற்கு துன்பங்கள் தீரும் மாதம் இது.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

1,2,3,9,11,12,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி மாலை 6.18 மணி முதல் 25-ம்தேதி மாலை 6.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment