Friday, June 2, 2017

துலாம்: 2017 ஜூன் மாத பலன்கள்

துலாம் :

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அதன்பிறகு எட்டாமிடத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். ஜூன் மாதம் துலாம் ராசிக்கு இதுவரை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இப்போது வீட்டுக்கனவு நனவாகும். ஹவுசிங் லோன் போட்டு வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.

சிலருக்கு மறைமுகமான வழிகளில் இந்த மாதம் வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் இப்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

1,2,7,8,9,14,15,16,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம்தேதி மாலை 6.48 மணி முதல் 23-ம்தேதி மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் உச்சமாக குருபார்வையில் இருப்பதால் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

No comments :

Post a Comment