Monday, May 1, 2017

மேஷம்: 2017 மே மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் மே மாதம் மேஷராசிக்கு மேன்மையை தருகின்ற ஒரு மாதமாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் மனஅழுத்தம் தரும் நிகழ்வுகளை எதிர் கொண்டவர்கள், கடன்தொல்லை, வழக்கு போன்றவைகளால் நிம்மதி இழந்தவர்களுக்கு இந்த மாதம் நிம்மதி அடைகின்ற மாதமாக அமையும்.

ராசிநாதன் வலுவுடன் உள்ளதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில் அமைப்புகளிலும் மறைமுகமான எதிரிகள் உருவாகி கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். மேஷத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை. இந்த மாதம் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் மேலோங்கிய நிலையில் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளும் சிறப்பாக நடைபெறும். ஆறாமிடத்தில் குரு இருப்பதால் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். குறிப்பிட்ட சிலர் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

1,2,3,5,6,15,19,20,26,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 11ம் தேதி காலை 10.37 மணி முதல் 13ம் தேதி இரவு 11.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment