Tuesday, April 25, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் -132 (25.4.2017)

அருணாச்சலம், மதுரை – 3.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. எனது மகன்களின் திருமண விஷயத்திற்காக நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசி மகனுக்கு 33 வயதாகியும் திருமணம் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக ஜோதிடர்கள் சொன்ன அனைத்துப் பரிகாரங்களையும் செய்தும் பலன் இல்லை. ஜோதிடர்கள் பொருத்தமான ஜாதகம் என்று சொன்னாலும் பெண்வீட்டார் பொருந்தவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். தயவு செய்து மகனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்று சொல்லும்படி கேட்டு கொள்கிறேன்.

சூ,பு
சு,ரா
ராசி
குரு சந் செ,சனி

பதில்:

(கும்ப லக்னம், விருச்சிக ராசி. 4-ல் சூரி, புத, சுக், ராகு. 9-ல் செவ், சனி. 11-ல் குரு.)

கேட்டை மற்றும் அனுஷம் நட்சத்திரங்களில் பிறந்த விருச்சிக ராசியின் இளைய பருவத்தினருக்கு கடந்த நான்கு வருடங்களாக எந்த நன்மைகளும் நடக்கவில்லை என்பதை ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவருக்கு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். வாரா வாரம் வருகின்ற கடிதங்களில் விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகளே அதிகம் இருக்கும் நிலையில், ஒவ்வொருவருக்கும் நான் தனித்தனியே பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அது தேவையும் இல்லை.

என்னுடைய அனைத்துக் கட்டுரைகளையும் கேள்வி-பதில்களையும் படிப்பதாக சொல்லும் உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால், விருச்சிக ராசிக்காரருக்கு சொல்லும் ஒரு பொதுவான பதில் உங்கள் மகனுக்கும் பொருந்தும் என்பது தெரியாதா? மகனுக்கு ஒன்பதாமிடத்தில் செவ்வாய், சனி இணைந்திருப்பது தோஷம் என்பதாலும், சுக்கிரனுடனும், ஏழுக்குடையவனுடனும் ராகு இணைந்து, ராசிக்கு ஏழாமிடமும், லக்னத்திற்கு ஏழாமிடமும் பலவீனமாகி இருப்பதாலும் 33 வயது முடிந்த பிறகுதான் திருமணம் நடைபெறும்.

எல். பத்மநாபன், வாணியம்பாடி.

கேள்வி :

நல்ல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த என் மகனுக்கு கடந்த சில ஆண்டுகளாக எதுவும் சரியாக இல்லை. வேலை போய்விட்டது. 2015 ஆண்டு ஒரு ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது. மகனுக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் எவரும் கொடுக்கவில்லை. வீடு கட்ட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. எல்லா முயற்சியும் தோல்வியில் முடிகிறது. என்னுடைய மகனின் பெயர்தான் இத்தனைக்கும் தடையா? நீங்கள் ஒரு தீர்வு கூற வேண்டும்.


சு ல,கே
குரு
ராசி
சந்,
சனி
சூ,செ
பு ரா


பதில்:

(மேஷ லக்னம், கடக ராசி. 1-ல் குரு, கேது. 4-ல் சனி. 9-ல் புதன். 10-ல் சூரி, செவ். 12-ல் சுக். 4.2.1977, காலை 11.45, வாணியம்பாடி)

சில ஜாதகங்கள் மேம்போக்காக யோகமாக தெரிந்தாலும் சில சூட்சும நிலைகளில் நல்ல பலன்களைத் தருவது இல்லை. 2013-ம் ஆண்டில் இருந்து மகனுக்கு சூரிய தசை நடக்கிறது. மேஷ லக்னத்திற்கு சூரியன் யோகாதியாக இருந்தாலும் அவர் செவ்வாயுடன் இணைந்து சனியின் பார்வையை பெறுகிறார். சனி, செவ்வாய் இருவரின் தொடர்பையும் சேர்ந்தாற்போல ஒரு பாவமோ, ஒரு கிரகமோ பெறுமாயின் அது சுப வலுவிழக்கிறது என்று பொருள்.

மகனின் ஜாதகப்படி செவ்வாயுடன் இணைந்து சனி பார்வை பெறும் சூரியன் நல்ல பலன்களைத் தர மாட்டார். அதிலும் சூரியனும், சந்திரனும் நேருக்கு நேராக இரண்டு டிகிரிக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் நல்ல பவுர்ணமி யோகம் கூட உங்கள் மகன் ஜாதகத்தில் இருவருக்கும் இருக்கும் சனி, செவ்வாய் இணைவால் பயனற்று போய் விட்டது.

ஆயினும் ஒரு ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் திக்பலமாக இருந்தாலே நல்ல வாழ்க்கை உண்டு என்பது ஜோதிட விதி. உங்கள் மகனுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு என நான்கு கிரகங்கள் திக்பலத்துடன் இருக்கின்றன. ராசிக்கு ஏழில் உச்ச செவ்வாய், லக்னத்திற்கு ஏழில் ராகு என களத்திர தோஷமும், குருவுடன் சர்ப்பக் கிரகங்கள் இணைவு என புத்திர தோஷமும் இருப்பதால் திருமணமும் தாமதமாகிறது. அடுத்த வருடம் தைமாதம் ஆரம்பிக்கும் சூரிய தசை, சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். அதன்பிறகு அனைத்து வித யோகங்களும் மகனுக்கு உண்டு. பெயரை மாற்றி வைப்பதால் ஒன்றும் நடந்து விடாது.

டி. எல். சண்முகசுந்தரம், சவுக்கார்பேட்டை.

கேள்வி :

மதிப்பிற்குரிய குருஜி... ஒருமுறை கூட தவறாமல் மாலைமலரில் தங்களின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். 46 வயதாகியும் எனது திருமண முயற்சிகள் எதுவும் கை கூடவில்லை. 10 வருடங்களுக்கும் மேலாக அனைத்து பரிகார ஸ்தலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் மலர்மாலையை இறைவனிடம் சமர்ப்பித்துக் கொடுத்தல். குங்குமக் கவர் அச்சிட்டு கொடுத்தல் போன்ற சேவைகளை ஞாயிறுதோறும் மனப்பூர்வமாக செய்து கொண்டிருக்கிறேன். இந்த கோவிலின் திருக் கல்யாண உற்சவத்தில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் கல்யாண விஷயத்தில் இறைவனின் ஆணை என்னவென்று புரியவில்லை. தயவு செய்து வழிகாட்டுங்கள்.


சனி
ல,ரா
ராசி
செவ் கே
சூ,பு
சுக்
குரு சந்


பதில்:

(கும்ப லக்னம், கன்னி ராசி. 1ல் ராகு, 3 ல் சனி, 9 ல் குரு, 10 ல் சூரி, புத, சுக், 12 ல் செவ், 4.12.1969, பகல் 12.30, சென்னை)

லக்னம், லக்னாதிபதி, ஏழாமிடம் போன்றவை வலுப்பெற்ற ராகு,கேதுக்களின் பிடியில் இருக்கின்றன. சனி நீச வக்கிரமாகி பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். சனியும் உச்ச செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதும் கடுமையான தார தோஷம். குருவும், சனியும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வது அதீதமான ஆன்மீக ஈடுபாட்டைக் குறிக்கும்.

தற்போது குரு தசையில், ராகு புக்தி நடப்பதால் ஸ்ரீ காளஹஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாங்காடு வெள்ளீஸ்வரன் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். தொடர்ந்து இருபது வாரம் வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது சிறிது வெள்ளை மொச்சையை தலைக்கடியில் வைத்துப் படுத்து கடைசி வாரம் மொத்தமாக ஒரே பொட்டலமாக்கி நிற்கும் நீரான கிணறு, அல்லது குளத்தில் போடுங்கள். நல்லது நடக்கும்.

ஜெ. மணிகண்டன், சரண்யா. சேலம்.

கேள்வி :

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை எங்களுக்கு குழந்தை இல்லை. எப்போது குழந்தை பிறக்கும் என்ற ஒரு நல்ல பதிலை தருமாறு வேண்டுகிறோம்.


சந்
கே
ராசி
செவ்
குரு,ரா
சனி
சு,பு ல,சூ

செவ் குரு
சந்,ரா
ராசி
கே
சனி சூ பு சுக்

பதில்:

கணவன்: கன்னி லக்னம், மேஷ ராசி. 1-ல் சூரி. 2-ல் சுக், புத. 11-ல் செவ், 12-ல் குரு, சனி, ராகு. 7.10.1979, காலை 5.45, சேலம்.

மனைவி: மிதுன லக்னம், கும்ப ராசி. 4-ல் சுக். 5-ல் புத. 6-ல் சூரி. 7-ல் சனி. 9-ல் ராகு. 10-ல் செவ். 12-ல் குரு. 17.11.1988, இரவு 8.15, நெய்வேலி.

கணவனின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்துக்குடைய சனியும், புத்திரகாரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் இணைந்ததும், ஐந்தாமிடத்தை நீச செவ்வாய் பார்ப்பதும் புத்திர தோஷம். மேலும் ராசிக்கு ஐந்திற்குடைய சூரியனும், ராசிக்கு ஆறில் மறைந்து, ராசிக்கு ஐந்தில் சனி, ராகு இருப்பதும் தோஷத்தைக் கடுமையாக்குகிறது. மனைவியின் ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதியான சுக்கிரன் நீசமானதோடு அல்லாமல், அவரை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதும், புத்திரகாரகன் குரு பனிரெண்டில் மறைவதும் கடுமையான புத்திர தோஷம்.

ஆயினும் மனைவி ஜாதகத்தில் நீச சுக்கிரன் பரிவர்த்தனையும், வர்க்கோத்தமும் அடைந்து, நவாம்சத்தில் குரு ஆட்சி பெற்றிருப்பதாலும், சனி, செவ்வாய், சுக்கிரன் மூன்றும் திக்பலம் அடைந்திருப்பதாலும் முறையான பரிகாரங்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை உண்டு. ஏற்கனவே நான் மாலைமலரில் எழுதியிருக்கும் ராகு மற்றும் புதனுக்கான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

வேற்று மதக்காரரை திருமணம் செய்யலாமா?

யாஸ்மின், திருப்பூர்.

கேள்வி :

எப்படி வாழப் போகிறோம் என்று வழி தெரியாது கடுமையான மன உளைச்சலில் முழித்துக் கொண்டிருக்கிறேன். தந்தை இறந்து சரியாக ஒரு வாரமாகிறது. ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் உங்களின் தீவிர ரசிகர். எப்பொழுதும் உங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். உங்களிடம் ஜாதகமும் பார்த்திருக்கிறார். நீங்கள் அவரை ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்வாய் என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களிடம் பேசிய உரையாடலை போனில் பதிந்து வைத்து, சோதனை வரும் போதெல்லாம் நீங்கள் சொன்ன தன்னம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்டு நான் நன்றாக இருப்பேன் என்று குருஜி சொல்லியிருக்கிறார் என்று கூறுகிறார். என்னுடைய கவலை எல்லாம் என் தந்தை இருக்கும் வரை அவரிடம் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இவரை தேடிப் போய்க் காதலித்தேன். ஆனால் இன்று அப்பா இல்லை. குடும்ப சூழ்நிலை சரியில்லை. இவரையும் மறக்க முடியவில்லை. என்னை உங்கள் மகளாக நினைத்து நல்ல முடிவு சொல்லுங்கள். நான் இவரை திருமணம் செய்வேனா? அல்லது சொந்தக்காரர்கள் சொல்வது போல எங்கள் மதத்தில் திருமணம் செய்வேனா ? எனக்கு இவரைப் பிடித்திருக்கிறது. ஆனால் இப்போது குடும்ப சூழ்நிலை சரியாக இல்லை. இவரை திருமணம் செய்தால் என்னுடைய குடும்பத்தைக் கவனிப்பாரா என்று பல குழப்பங்கள் மனதில் ஓடுகிறது. உங்களை என் தந்தையாக நினைத்துக் கேட்கிறேன். உங்கள் மகளுக்கு என்ன அறிவுரை சொல்வீர்களோ அதனை எனக்கு மாலைமலர் வழியாகச் சொல்லுங்கள்.


சனி,
கே
சூ,பு ல,சு
ராசி
குரு சந்
செவ்,
ரா


குரு,
ரா
ராசி
சந்
சு
சூ,பு
சனி
ல,
செவ்
கே


பதில்:

(பெண்; மிதுன லக்னம், சிம்மராசி. 1 ல் சுக், 4 ல் செவ்,ராகு, 8 ல் குரு, 10 ல் சனி, 12 ல் சூரி,புத, 13-6-1997 காலை 6.30 திருப்பூர். ஆண்: விருச்சிக லக்னம், கடக ராசி, 1 ல் செவ், 2 ல் சூரி,புத,சனி 3 ல் சுக், 5 ல் குரு,ராகு 6-1-1988 அதிகாலை 3.21 சாத்தூர்)

மகளே... ஒரு தந்தையாக பதில் சொல்லுங்கள் என்று நீ சொல்லி விட்ட பிறகு இங்கே ஒரு ஜோதிடனை விட தகப்பனாகத்தான் உனக்கு அறிவுரை சொல்லியாக வேண்டும். இத்தனை தெளிவாக சிந்தித்து, விபரமாக எழுதியிருக்கும் நீ உன் குடும்பத்தின் மூத்த பெண்ணாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஆணாகப் பிறந்தாலும், பெண்ணாகப் பிறந்தாலும் குடும்பக் கடமைகள் என்று சில இருக்கின்றன. அதிலும் தலைவன் இல்லாத குடும்பத்தில் உள்ளவருக்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். உனக்கு இருபது வயது தான் நடக்கிறது. விளையாட்டுத்தனமான பருவம் என்பதால்தான் அவரை தேடிப் போய்க் காதலித்தேன் என்று சொல்கிறாய்.

இது முடிவுகள் எடுக்கும் வயதல்ல. பொறுமையாக இரு. பதினாறு வயது முதல் உனக்கு ராகுவுடன் இணைந்த செவ்வாய் தசை நடக்கிறது. தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் அதிபதியான சனிபகவானுக்கு, செவ்வாய் மற்றும் கேதுவின் தொடர்பு ஏற்பட்டதால் செவ்வாய் தசை, சனி புக்தியில் இத்தனை சிறுவயதில் தகப்பனை இழந்து விட்டாய்.

மிதுன லக்ன பாவியான செவ்வாய் அந்நிய மதத்தைக் குறிக்கும் ராகுவுடன் இணைந்து தசை நடத்துவதால், ஒரு இஸ்லாமியப் பெண்ணான உனக்கு ஒரு இந்து வாலிபனின் மேல் ஆர்வத்தைத் தருகிறார். இன்னும் மூன்று வருடங்களுக்கு நடக்க இருக்கும் செவ்வாய் தசையில் நீ எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறாகப் போகும் என்பதால் திருமண விஷயத்தில் அவசரப்படாதே. இருபத்தி மூன்று வயதாகட்டும். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை வேலைக்குப் போ. குடும்பத்தைக் காப்பாற்று. உடன்பிறந்தவர்களுக்கும், பெற்ற தாய்க்கும் உண்மையாக இரு.

லக்னாதிபதி பரிவர்த்தனையாகி லக்னத்தில் அமர்ந்த ஜாதகத்தைக் கொண்ட புத்திசாலிப் பெண் நீ. ஆறு, எட்டுக்குடையவர்களின் சம்பந்தத்தைப் பெற்ற ராகு என்ன செய்வார் என்று ராகுவின் சூட்சுமங்களில் நான் எழுதியுள்ள அனைத்தையும் உன் கடிதத்தில் பிரதிபலித்திருக்கிறாய்.

இன்னும் மூன்று வருடங்களுக்குப் பிறகு உனக்கு நடக்க இருக்கும் நான்காமிடத்து ராகுவின் தசை உனது தாயை மனக்கஷ்டத்திற்கு உள்ளாக்கி, உனக்கு ஒரு அந்நிய வாழ்க்கையை அமைத்துத் தரும். ராகுபகவான் மிதுன லக்னத்திற்கு யோகர் என்பதாலும், அவர் கன்யா ராகுவாகி, நீச குருவின் பார்வையில் இருப்பதாலும் உன் இஷ்டப்படியான வாழ்வு அமையும். அதுவரை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு பொறுமையாக இரு.

No comments :

Post a Comment