Tuesday, January 3, 2017

திருவாதிரை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

திருவாதிரை:

வருட ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வலுவாக உள்ளது. நல்ல இடத்தில் வேலையும் கிடைக்கும்.

எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்தவருடம் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

உங்கள் நட்சத்திர நாதன் ராகுபகவான் பலம் பெறுவதால் வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். ஆன்மிகம், மருத்துவம், மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாட்டு விஷயங்கள் மிகவும் நன்மை தரும்.

No comments :

Post a Comment