Tuesday, January 3, 2017

மிருகசீரிடம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

மிருகசீரிடம்:

இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். செலவுகளும் அதிகமாக செய்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்டநாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு நல்ல உதவிகள் இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் சுபபலம் பெறுவதால் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள ஆண்டு இது.

இந்த ஆண்டு பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப் பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

No comments :

Post a Comment