Tuesday, January 3, 2017

ரோஹிணி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்


ரோஹிணி: 

இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அபாரமான ஆண்டு இது. தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

உங்களின் நட்சத்திரநாதன் சந்திரன் வருட ஆரம்பத்தில் குருவின் பார்வையைப் பெறுவதால் இந்த வருடம் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

சிறப்பு நற்பலன்களும் நல்ல லாபங்களும் இப்போது உண்டு. சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார் என்பதால் அவர் வலுவாக இயங்கும் நாட்களிலும், குருவுடன் இணையும் நேரங்களிலும் மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

குருபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில் ஐந்தில் இருப்பதால் பணம் சம்பாதிப்பதில் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத வருடமாக இருக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.

No comments :

Post a Comment