Tuesday, January 3, 2017

கிருத்திகை: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

கிருத்திகை:

இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். வருமானம் வந்தால்தானே செலவு செய்ய முடியும்? எனவே பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். உங்களின் நட்சத்திரநாதன் சூரியன் வருட ஆரம்பத்தில் சுபத்துவமாக இருப்பதால் இந்த வருடம் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது.

சில மறைமுகமான வழிகளில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களில் மேஷராசிக்காரர்களுக்கு மட்டும் வருட ஆரம்பத்தில் சுணக்கமான பலன்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டும் 2017 ம் வருடத்தின் பிற்பகுதியில் தான் நல்ல பலன்கள் நடக்கும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

ராகுபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கும் வருடத்தின் இறுதிப் பகுதி உங்களுக்கு மேன்மையைத் தரும். ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.

No comments :

Post a Comment