Tuesday, January 3, 2017

பரணி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

பரணி:

இந்த ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி முதல் தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். தற்போது வேலை தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல் உண்டாகி குழப்பங்களில் இருப்பவர்களுக்கு வருடத்தின் பாதியிலிருந்து மிகவும் நல்ல பலன்கள் உண்டு. எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் நீங்கள் என்பதால் இந்த வருட ஆரம்பமும் பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. கையில் இருக்கும் சேமிப்பை கரைய வைக்கும். அவ்வளவுதான். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்த வருடம் நடக்கும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் உங்களின் ஜன்ம நட்சத்திரத்தில் சூரியன் செல்லும்போது உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் கேது செல்லும் வருட பிற்பகுதியில் தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

No comments :

Post a Comment