Tuesday, January 3, 2017

அசுவினி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

அசுவினி: 

உங்களின் நட்சத்திரநாதன் கேது வலிமையுடன் இருப்பதால் 2017 ம் வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

வருடத்தின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வலுவாக உள்ளது. நல்ல இடத்தில் வேலையும் கிடைக்கும்.

வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறக்கும். சிலர் வெளிநாடு போவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

உங்கள் நட்சத்திரநாதன் சூரிய, சந்திரர்களின் கடும்பகைவர் என்பதால் அவிட்டம் நட்சத்திரத்தில் கேது செல்லும்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தாய் வழியில் ஆதரவு குறையும். அதேநேரத்தில் உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

No comments :

Post a Comment