Tuesday, January 3, 2017

புனர்பூசம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

புனர்பூசம்: 

பகவான் ஸ்ரீ ராமபிரானின் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வருடம் பாதிப்புகள் எதுவும் இருக்காது. நன்மைகள் மட்டும்தான் நடக்கும். அதே நேரம் கையில் இருக்கும் சேமிப்பு கரையும் வருடமாக இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும்.

எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது நடக்கும். இந்த ஆண்டு பணவரவு இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். ஆண்டின் முற்பகுதியில் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள்.

இளையவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. வருங்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும். இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். பிறந்த ஜாதகத்தின்படி குருதசை, குரு புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள்.

No comments :

Post a Comment