Tuesday, November 1, 2016

சிம்மம்: 2016 நவம்பர் மாத பலன்கள்

சிம்மம்:

மாதத்தின் பாதிநாட்கள் ராசிநாதன் சூரியன் நீசமாக இருப்பதும், அதன்பிறகு நான்காமிடத்தில் சனியுடன் சேர்ந்து அமர்வதும் பலவீனமான அமைப்பு என்பதால் நவம்பர் மாதம் சிம்மராசிக்கு சுமாரான மாதமாகத்தான் இருக்கும். ராசிநாதன் வலுவிழந்து சனியுடன் சேர்வதால் சிலருக்கு எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள். ராசிநாதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமடைவதால் எதுவும் கைமீறிப் போகாமல் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இது இருக்கும்.

இளையபருவத்தினருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத்தடையும், சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். குருபகவான் நல்ல இடத்தில் இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.

ராசியை செவ்வாய் வலுப்பெற்றுப் பார்ப்பதால் எதற்கெடுத்தாலும் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். வியாபாரிகளுக்கு தேக்க நிலை இனி மாறி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

1,2,3,7,8,11,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 9 மணி முதல் 12-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment