Thursday, September 1, 2016

தனுசு: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

தனுசு: 

தனுசுநாதன் குருபகவான் பத்தாமிடத்தில் அமர்ந்து ராசியின் எதிர்த்தன்மை உடைய கிரகமான நீச சுக்கிரனுடன் இருக்கிறார். ஆறுக்குடைய எதிரிக்கிரகம் வலுவிழப்பதால். தனுசுவிற்கு இந்த மாதம் முழுதுமே எல்லா விஷயங்களும் நன்மையில் முடியும் மாதம்தான். தனுசுவிற்கு இப்போது வளர்பிறை காலம். எனவே சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.

மாதம் பிற்பகுதியில் செவ்வாய் ராசிக்கு வருவதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். அதனால் கோபம் வரும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கிரகநிலைகள் உங்களை கோபக்காரனாக்கி அதன்மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள்.

பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. மாமியார் உங்கள் பேச்சை கேட்பார். கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், போன்ற அனைவருக்கும் நல்ல மாதம் இது. அரசு தனியார்துறை ஊழியர்கள் கலைஞர்கள் சுயதொழில் செய்பவர்கள், விமான நிலையங்களில் பணிபுரிவர்கள், இன்ஜியர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் நடைபெறும்.

1,2,9,10,11,17,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ந்தேதி காலை 9 மணி முதல் 27-ந்தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கடகராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும்.

No comments :

Post a Comment