கேள்வி:
சந்
|
செவ்
|
சுக்
|
சூ
குரு |
ராசி
|
பு
கே |
||
ரா
|
|||
சனி
|
ல
|
பதில்:
(விருச்சிக லக்னம், மீன ராசி, இரண்டில் சனி, ஆறில் செவ், ஏழில் சுக், எட்டில் சூரி, குரு. ஒன்பதில் புத, கேது)
ஜாதகம் எழுதியது சரியாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி நோய்ஸ்தானமான ஆறாமிடத்தில் ஆட்சிபெற்று கடந்த காலங்களில் அஷ்டமாதிபதி
புதன்தசையும் தற்போது புதனுடன் சேர்ந்த கேதுதசையும் நடப்பதால் கிட்னியில் கல் இருக்கிறது. லக்னத்தை இயற்கைச்சுபரான சுக்கிரன் பார்த்து சுக்கிரதசையும்
நடக்கவிருப்பதால் 2018ல் நோய் முற்றிலுமாகத் தீரும்.
சி
.ஜெயபிரதீஷ், நாகர்கோவில்.
கேள்வி
:
எண்ணிலடங்கா மனிதர்களுக்கு வழிகாட்டும் குருஜியின் கடைக்கண் பார்வை என் கடிதம் மீதும் விழாதா என்ற நப்பாசையில் எனது ஜாதகத்தை அனுப்புகிறேன்
. ரெயில்வேயில் J.E ஆக வேலை செய்த நான் எனது தவறான நடத்தைகளால் ஒன்றரை ஆண்டுகளாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஒருகாலத்தில் என்னை வியந்து பார்த்த
உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தலைகுனிந்து நிற்கிறேன். அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் வருகின்றன. வேலையைத் திரும்பப் பெற கடும் முயற்சி செய்கிறேன்.
நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் வேலை கிடைக்குமா? எப்போது? பதிலுக்கு நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறேன்.
பதில்:
நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் மீனலக்னத்திற்கு பதில் கும்பலக்னம் என தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த இடத்தைக் குறிப்பிட்டு மறுபடியும் எழுதி
அனுப்புங்கள். பதில் தருகிறேன்.
நரிமுகன் என்கிற சந்தானகிருஷ்ணன்
, காரமடை
கேள்வி
:
இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிகநாட்டம் இருந்து வருகிறது
. அதே சமயம் காமஉணர்வுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. முதல் மனைவியின் தவறான நடத்தையின் காரணமாக 14 நாட்களுக்குள் பிரிவு ஏற்பட்டு ஏழு வருடங்களுக்குப்
பிறகு இரண்டாவது திருமணம் செய்தேன். இதுவரை பத்துக்கும் மேற்பட்டமுறை கருத்தங்காமல் கலைந்துள்ளது. இல்லற வாழ்க்கையிலும் மனைவிக்கு நாட்டம் இல்லாமல்
போய்விட்டது. இவளும் என்னை விட்டுப்பிரிந்து போவதாக மிரட்டி வருகிறாள். எனக்குக் குழந்தை பிறக்குமா?
பதில்:
ஜாதகத்தை கட்டம் வாரியாக விவரித்து எழுதிய நீங்களும் பிறந்த இடத்தைக் குறிப்பிடவில்லை. லக்னசந்தியில் நீங்கள் பிறந்துள்ளதால் உங்கள் லக்னத்திலும் சந்தேகம்
உள்ளது. தவிர குழந்தைபாக்கியம் என்பது கணவனும், மனைவியும் இணையும் அமைப்பு என்பதால் கணவரின் ஜாதகத்தை மட்டும் வைத்து துல்லியமான பதில் சொல்ல முடியாது. மனைவியின்
ஜாதகத்தையும் பிறந்த இடத்தையும் குறிப்பிட்டு மீண்டும் அனுப்பவும்.
எம்
.பாலசுப்பிரமணியன், முசிறி.
கேள்வி
:
பு,சூ
ரா |
சுக்,
செவ் சனி |
||
ராசி
|
ல
|
||
சந்
|
குரு
|
||
கே
சு |
மகன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான் . பிரீ-கேஜி முதல் தற்போதுவரை இங்கிலீஷ் மீடியம்தான் படிக்கிறான். படிப்பு சரியாக வரவில்லை. படித்தது எதுவும் ஞாபகம் வரமாட்டேங்கிறது என்கிறான். டியூஷனுக்கும் போகிறான். என் அப்பா பள்ளிக்கூடமே போகாதவர். நானும் ஐந்தாம்வகுப்பு வரைதான் படித்தேன். என்பையனாவது ஒரு டிகிரிவரை படித்தால் பின்வரும் தலைமுறையாவது படிக்கும் என்று ஆசைப்படுகிறேன். எனது மகன் நன்றாகப் படிப்பானா? அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்? ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா? பரிகாரம் எதாவது செய்யவேண்டுமா?
பதில்:
(கடகலக்னம், மகரராசி. இரண்டில் குரு. பத்தில் சூரி, புத, ராகு. பனிரெண்டில் சுக், செவ், சனி.)
மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்து சந்திரகேந்திரத்தில் சூரியன் உச்சமாகி சூரியனைக் குரு பார்த்த யோகஜாதகம். புத்திக்கும் அறிவிற்கும் காரகனான
புதபகவான் கேந்திரத்தில் அமர்ந்து வர்க்கோத்தமம் பெற்றுள்ளதும் சிறப்பு. ஒரு குழந்தை ஏழாவது வகுப்பில் படிப்பில் தடுமாறுவது ஒன்றும் குறையோ, குற்றமோ அல்ல. சில
குழந்தைகள் ஆரம்பத்தில் படிப்பில் தடுமாறினாலும் போகப்போக சுகாரித்துக்கொண்டு பத்தாவது படிக்கும் சமயங்களில் மேலான நிலையை அடையும்.
உங்கள் மகன் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் சூரியன் உச்சம் பெற்று ராசிக்கு பத்தாமிடத்தைப் பார்ப்பதாலும் அந்த சூரியனைக் குரு பார்த்து அடுத்து உச்சசூரியனுடன்
இணைந்த ராகுதசையும் உச்சசூரியனின் வீட்டில் அமர்ந்த குருதசையும் வர இருப்பதால் உங்கள் மகன் நிச்சயம் அரசாங்க உயரதிகாரி ஆவார். புதன் வலுவாக இருப்பதால் ஒன்றுக்கு
இரண்டு டிகிரி வாங்குவார். மகனால் உங்களுக்குப் பெருமை இருக்கும். மகனுக்குப் பின்னால் உங்கள் தலைமுறையே நன்கு படித்த தலைமுறையாக ஆகும். கவலை வேண்டாம். கல்வி
சம்பந்தமான தோஷம் எதுவும் இல்லாததால் பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.
கே
.சிவசங்கர், கன்னியாகுமரி.
கேள்வி
:
சந்
சுக் |
சூ
பு |
||
ராசி
|
ரா
|
||
கே
|
குரு
சனி |
||
ல
|
செவ்
|
குருஜி அவர்களுக்கு வணக்கம் . 2013-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடனேயே அந்தப்பெண் ஒருவரைக் காதலிப்பதாகவும், அவனுடனேயே வாழப்போகிறேன் என்று சொன்னதும் சந்தோஷமாக இரு என்று வாழ்த்தி அனுப்பி விட்டேன். மொத்தம் மூன்று நாள்தான் அந்த பந்தம். இப்போது எனக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. எனக்கு என்ன தசை நடக்கிறது? இனிமேல் எனக்கு முதல் தாரம் அமையுமா? அல்லது விதவை போன்ற பெண் அமையுமா? என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(விருச்சிகலக்னம், ரிஷபராசி. ஏழில் சுக். எட்டில் சூரி, புத. ஒன்பதில் ராகு. பத்தில் குரு, சனி. பதினொன்றில் செவ்.)
பாதகாதிபதி வலுப்பெறும் பாவம் ஏதேனும் ஒரு பாதகத்தைச் செய்யும் என்பது ஜோதிடவிதி. உங்களுக்கு ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற பாதகாதிபதி சந்திரன் ஏழுக்குடைய
சுக்கிரனுடன் இணைந்ததால் ராகுதசை சுக்கிரபுக்தியில் இது போன்ற ஒரு திருமண அமைப்பை உருவாக்கி அது கைவிட்டுப் போகவும் செய்தார்.
சுக்கிரனைக் கெடுத்து சுக்கிரனின் வலுவை சந்திரன் வாங்கியதால் அடுத்த வருடம் பிற்பகுதியில் ராகுதசை சந்திரபுக்தியில் நிலையான திருமணம் நடக்கும். தாரதோஷம்
எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் போல திருமணமாகாத கன்னிப்பெண்ணே உங்களுக்கு மனைவியாக அமைவாள். அடுத்து நடக்க இருக்கும் குருதசையில் முதல்குழந்தை பிறந்த பிறகு
வாழ்க்கை எவ்வித சிக்கலும் இன்றி மேன்மையுடன் இருக்கும்.
ஆர்.கதிர்வேல் சென்னை – 23
கேள்வி:
சந்
|
ல,சூ
கே |
||
ராசி
|
குரு,பு
செவ் |
||
சனி
|
சுக்
|
||
ரா
|
மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மாப்பிள்ளை சொந்தமா அசலா? உள்நாடா வெளிநாடா? இந்த வேலையில் பதவி உயர்வு கிடைக்குமா? வெளிநாடு செல்வாளா? இந்த வேலை நிலைக்குமா? அரசு வேலை கிடைக்குமா?
பதில்
(மிதுனலக்னம் மீனராசி லக்னத்தில் சூரி இரண்டில் குரு செவ் புத மூன்றில் சுக் ஏழில் ராகு எட்டில் சனி )
மகளுக்கு இரண்டில் செவ்வாய் எட்டில் சனி ஏழில் ராகு என களத்திர தோஷ அமைப்பு இருப்பதால் தாமத திருமணம் நல்லது. தற்போது குடும்பாதிபதியான சந்திரனின் புக்தி
நடப்பதால் திருமணம் செய்ய அமைப்புகள் கூடி வரும். செய்ய வேண்டாம். செய்தால் அடுத்துவரும் செவ்வாய்புக்தியில் கசப்புகள் வரும். மிதுன லக்னத்திற்கு இரண்டில்
நீசபங்க வலுவுடன் அமரும் செவ்வாய் எப்படா குடும்பத்தைக் கெடுக்கலாம் என்றே இருப்பார். எனவே இருபத்தியெட்டு வயதில் புதன் தசை ராகு புக்தியில் திருமணம் அமைவதே
நல்லது.
மாப்பிள்ளை அசல்தான். வெளிநாடு தொடர்புடையவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு மகளும் வெளிநாடு செல்வாள். லக்னாதிபதி சரராசியான கடகத்தில் அமர்ந்து
எட்டுக்குடையவன் வலுப்பெற்று சரத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதால் மகள் நீடித்து வெளிநாட்டில் வசிப்பாள். இந்த வேலையில் உயர்வு உண்டு. நீடிக்கும்.
பச்சை இங்க்கில் கையெழுத்து போட முடியவில்லையே... ஏன்
?
ஏ
.கோபி, சிதம்பரம்.
கேள்வி
:
சந்
|
|||
குரு
|
ராசி
|
செவ்
ரா |
|
சனி
கே |
|||
சுக்
|
ல
|
சூ
பு |
சுமார் 35 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். இதுவரை மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., எம்.பி. கிடைக்கவில்லை. பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட முடியவில்லை. காரணம் என்னவென்று குருஜி அவர்கள் கணித்துச் சொல்ல வேண்டுகிறேன்.
பதில்:
(துலாலக்னம், ரிஷபராசி. இரண்டில் சுக். நான்கில் சனி, கேது. ஐந்தில் குரு. பத்தில் செவ், ராகு. பனிரெண்டில் சூரி, புத)
ஒருவர் அரசியலில் அதிகாரப்பதவியை அடையவேண்டும் என்றால் சூரியனும், செவ்வாயும், குருவும், சிம்மமும் வலுவாக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் பத்தாமிடத்தோடு
தொடர்பு கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு ராசிக்கு பத்தில் குரு அமர்ந்து சிம்மத்தை வலுப்படுத்தியதாலும் லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் அமர்ந்ததாலும் அரசியல்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் லக்னத்தை குருபார்த்து லக்னாதிபதியை உச்ச சந்திரன் பார்த்ததால் நீங்கள் தகிடுதத்தம் செய்யாதவராகவும் கடினமனம் இல்லாதவராக
இருப்பீர்கள்.
நல்லவராக இருப்பதை விட வல்லவராக இருப்பதே அரசியலுக்கு மிகப்பெரிய தகுதி. உங்கள் ஜாதகப்படி அரசியல் அதிகாரத்தை நேரிடையாக அனுபவிக்க வைக்கும் அதாவது உங்களின்
கருத்துப்படி பச்சை மையில் கையெழுத்து போட வைக்கும் சூரியன் ஜாதகத்தில் பனிரெண்டாமிடத்தில் மறைந்தது பலவீனம். அதைவிட கடந்த பதினாறு வருடங்கள் துலாம்
லக்னத்திற்கும், ரிஷபராசிக்கும் கொடிய பாவியான குருவின் தசை நடந்தது அவயோகம்.
எனவே பாவிதசை நடந்ததால் கடந்தகாலங்களில் உங்களுடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கும். துலாம் லக்னத்திற்கு யோகாதிபதியான சனியின் தசை அடுத்த
வருடம் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்பிறகு உங்கள் ஜாதகத்தில் யோகங்கள் செயல்பட ஆரம்பிக்கும். லக்னாதிபதி ராசியிலும், அம்சத்திலும் பகைவீட்டில் அமர்ந்து
லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசமாகி வலுவிழந்ததால் லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் பச்சை இங்கில்
கையெழுத்துப் போட முடியும்.
No comments :
Post a Comment