கேள்வி
:
செவ்
ரா |
|||
குரு
|
ராசி
|
சந்
|
|
சூ
பு |
|||
சுக்,ல
சனி |
கே
|
இந்தமுறை என் பிறந்த,
தேதி,
விவரங்களை சரியாக எழுதி உள்ளேன்.
நிச்சயித்த திருமணம் நின்றுவிட்டது.
ஒரு பெண்ணை காதலித்தேன் அதுவும் நின்று விட்டது.
திருமணம் எப்போது அமையும்?
பதில்:
நடக்கும் கேதுதசை, சனிபுக்தியில் 2017-ம் ஆண்டு முற்பகுதியில் திருமணம் நடக்கும்.
எஸ். கருப்பையா, பேராவூரணி
கேள்வி:
ரா
|
|||
ராசி
|
|||
கே
|
ல
செவ் |
சூ,சந்
குரு சனி |
பு
சுக் |
நியூஸ் பேப்பர் முகவராக இருக்கிறேன். திருமணஞ்சேரி, திருவீழிமலை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய கோவில்களுக்கு சென்றும் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே
இருக்கிறது. எப்பொழுது திருமணம்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
பதில்:
(விருச்சிக லக்னம், துலாம் ராசி, திருக்கணிதப்படி லக்னத்தில் செவ், இரண்டில் கேது, பதினொன்றில் புத, சுக், பனிரெண்டில் சூரி, குரு, சனி)
லக்னத்திற்கு ஏழாம் வீட்டை செவ்வாயும் ராசிக்கு ஏழாம் வீட்டை சனியும் பார்த்து ராசிக்கு இரண்டில் செவ்வாயும், லக்னத்திற்கு இரண்டில் கேதுவும் அமர்ந்து கடுமையான
தாரதோஷம் ஏற்பட்டுள்ள ஜாதகம். தாம்பத்யசுகத்தை தரும் ஏழுக்குடைய சுக்கிரனும் நீசம் அடைந்ததோடு புத்திரகாரகனான குருபகவானும் பனிரெண்டில் மறைந்து களத்திர புத்திர
தோஷங்கள் இணைந்து ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது நடைபெறும் அஷ்டமாதிபதி புதன் தசை முதல்பாதியில் எட்டுக்குடைய பலனைத்தான் செய்யும் என்பதாலும், ஏழரைச்சனி நடந்து வருவதாலும் கடந்த ஆறு வருடங்களாக
உங்களுக்கு எவ்வித நல்ல பலன்களும் நடக்கவில்லை. நடைபெறும் சந்திரபுக்தியில், சந்திரன் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் அடுத்த வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதம்
திருமணம் நடைபெறும். ராகுவிற்கான பரிகாரங்களை ஸ்ரீகாளகஸ்தியில் ஒரு இரவு தங்கி செய்யுங்கள்.
எஸ். கீதா, பவானி
கேள்வி:
செவ்
|
சனி
கே |
||
ராசி
|
|||
குரு
ல |
|||
சுக்
ரா |
சூ
சந் |
பு
|
சந்
|
சுக்
கே |
சூ
|
|
சனி
|
ராசி
|
பு
|
|
செவ்
|
|||
ரா
ல |
குரு
|
யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமலேயே உறவினர்களாலும், நண்பர்களாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். தனிமையில் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. உதவி
செய்தாலும் சங்கடங்களே ஏற்படுகிறது. எப்பொழுது நல்ல நிலைமைக்கு வருவோம்? மகளுக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமணம் எப்பொழுது? அவளது எதிர்கால
வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
பதில்:
உங்களுக்கு விருச்சிகராசி, அனுஷம் நட்சத்திரமாகி மகளுக்கும் மீனராசியாகி இருவருக்கும் ஏழரை அஷ்டமச்சனி நடந்ததால் கடந்த காலங்களில் நிம்மதி இல்லாத நிலை
ஏற்பட்டது. அனுஷ நட்சத்திரக்காரர்களின் நிலையைப் பற்றி ராசி பலன்களில் எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். உங்களுக்கு சனி முடிந்தவுடன் மனஉளைச்சலும் சங்கடங்களும்
காணாது போகும். நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
மகளுக்கு விருச்சிகலக்னமாகி, சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் அமர்ந்து லக்னாதிபதி செவ்வாய் பத்தில் உள்ளதால் வரும் சுக்கிர தசை
சூரியபுக்தியில் அரசு வேலை கிடைக்கும். அதற்கடுத்த சந்திரபுக்தியில் திருமணம் நடக்கும். மகளுக்கு லக்னாதிபதி லக்னத்தை பார்த்து ராசியைக் குரு பார்த்த யோகஜாதகம்
என்பதாலும் யோகதசைகள் நடைபெற உள்ளதாலும் எதிர்கால வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
டி. மணி, சங்ககிரி
கேள்வி:
சந்
|
சுக்
|
சூ
கே |
பு
சனி |
குரு
|
ராசி
|
செவ்
|
|
ல
|
|||
ரா
|
ல
|
கே
|
||
சந்
|
ராசி
|
செவ்
|
|
குரு
|
|||
ரா
|
சூ
பு |
சுக்
|
சனி
|
ஜோதிடத்தின் சூப்பர் ஸ்டாரே... ஈரோட்டில் தங்களை நேரில் சந்தித்த போது நீங்கள் சும்மா இருந்தாலும் சினிமா உங்களை சும்மா விடாது என்றும் மூத்த மகன்
எம்.பி.பி.எஸ் என்றும், இளைய மகன் ஐ.ஏ.எஸ் என்றும் சொன்னீர்கள் ஆனால்
15.09.2015
மாலைமலரில் தாங்கள் எனக்கு அளித்த பதில் வேறு விதமாக உள்ளதே... எனக்கு நல்லதொழில் அமைய பரிகாரம் ஏதேனும் இருந்தால் சொல்லி இளையவனின் எதிர்காலத்தை பற்றி
நல்வாக்கு தந்து எனது சந்தேகத்தை தெளிவுப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
எழுதுவதிலும் பலன் சொல்லுவதிலும் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவன் நான். ஒரு ஜாதகத்தை கொடுத்து நள்ளிரவு தூக்கத்தில் எழுப்பிக்
கேட்டாலும், நான்கு வருடம் கழித்துக் கேட்டாலும் ஒரே பலனைத்தான் சொல்லுவேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிலிலும் அதைத்தான் சொல்லி இருக்கிறேன்.
சினிமா உங்களை விடாது என்று நான் சொன்னதை கடிதத்திலும் ஒத்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்? மூத்தமகனைப் பற்றிய பதிலிலும் இறுதியாக பரம்பொருள் என்ன
நினைத்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்?. நீங்கள் நினைப்பதை மகன் ரூபத்தில் சாதித்துக்கொள்ள முடியும் என்றுதான் சொல்லி இருக்கிறேன் தவிர தவறாக எதுவும்
சொல்லவில்லையே? ஒரு ஜோதிடன் என்பவன் கணிப்பவன் மட்டும்தான் ஜாதகனின் கர்மவினைகளின்படி அதை நடத்திக்காட்டுவது கடவுள் ஒருவர் தான்.
இளையமகனுக்கு ரிஷப லக்னம், கும்பராசியாகி லக்னத்திற்கு பத்தில் சந்திரன் அமர்ந்து ராசிக்கு பத்தில் சூரியன் அமர்ந்து செவ்வாயும் வலுவாக இருப்பதால் அவன் நிச்சயம்
அரசாங்கத்தில் உயரதிகாரியாக வருவான். இதை ஆட்சி பெற்ற சுக்கிரனும் உறுதி செய்கிறார்.
உங்கள் ஜாதகப்படி பத்தாம் வீட்டில் கேது இருப்பதால் மெடிக்கல் ரெப்பாக இருக்கிறீர்கள். சிம்மலக்னமாகி சுக்கிரதசை நடப்பதால் சினிமாவின் மீது தீராத மோகம்
இருக்கிறது. மனைவிக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் அவயோகதசை அமைப்பில் நீங்கள் உள்ளதாலும் இப்பொழுது கிரகங்களால் தவறாகவே வழிநடத்தப்படுவீர்கள். பரிகாரங்கள் செய்வதும்
இப்பொழுது பலன் தராது. தற்போது பார்க்கின்ற வேலையிலேயே நீடித்து செய்யுங்கள் சூரியதசையிலிருந்து இருந்து வாழ்க்கை மிகவும் பிரகாசமாக மாறும் அப்போது வாருங்கள்
தொழிலுக்கான பரிகாரங்களை சொல்கிறேன்.
திருமணம் நடக்க சுக்கிரனுக்கான பரிகாரங்கள்...!
கே. குமரேசன், திருச்சி
கேள்வி:
கே
|
|||
ராசி
|
குரு
|
||
சந்
|
சனி
|
||
செவ்
பு |
சூ,ல
சுக் |
ரா
|
வயது தான் கூடிக்கொண்டே இருக்கிறது. 37 ஆகியும் திருமணம் ஆகவில்லை. தம்பியின் திருமணமும் தள்ளிப்போகிறது. உறவினர்கள் மத்தியில் பதில் சொல்ல இயலவில்லை.
மிகுந்த மன உளைச்சலில் அவதிப்படுகிறேன். எனக்கு திருமண வாய்ப்பு உண்டா? எப்பொழுது நடக்கும்? சொந்தத் தொழில் அமையுமா?
பதில்:
(துலாம் லக்னம், மகரராசி, இரண்டில் செவ், புத, ஆறில் கேது, பத்தில் குரு, பதினொன்றில் சனி)
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு இரண்டை செவ்வாய் சனி இருவரும் பார்த்து ராசிக்கு எட்டில் சனி அமர்ந்த கடுமையான தாரதோஷ அமைப்புள்ள ஜாதகம்.
தாம்பத்ய சுகத்தைத் தரும் லக்னாதிபதியான சுக்கிரன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருந்தாலும் சூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து வக்ரமும் பெற்று பலவீனமாகி
சனிபார்வையும் பெற்றதால் இதுவரை தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லை.
அனைத்திலும் மேலாக லக்னாதிபதி சுக்கிரனின் ஜென்மவிரோதியான குரு பகவான் உச்சம் பெற்று அவரது தசையும் நடக்கிறது. லக்னாதிபதி வலுவிழந்து அவரது எதிரியான
ஆறுக்குடையவன் வலுப்பெற்று தசை நடத்தினால் நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை சுகங்கள் கூட கிடைக்காமல் போய்விடும் என்று அடிக்கடி எழுதிக்
கொண்டுதான் இருக்கிறேன். சுக்கிரன் உங்களுக்கு எதையும் தருவதற்கு சக்தியற்று வக்ரம் மற்றும் அஸ்தமனம் ஆகிவிட்டதால் சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான
பரிகாரங்களைச் செய்வதன் மூலமாக உங்களுக்குத் திருமண அமைப்புகள் கூடி வரும்.
ஜென்மநட்சத்திரமன்று கும்பகோணம் அருகில் உள்ள சுக்கிர ஸ்தலமான கஞ்சனூரில் வழிபட்டு ஒரு ஜாமம் எனப்படும் இரண்டரை மணிநேரம் அந்தக் கோவிலுக்குள் இருக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் வழிபட்டு ஆலயத்தினுள் ஒரு முகூர்த்தம் எனப்படும் 48 நிமிடம் உள்ளே இருப்பதும் இன்னொரு வெள்ளிக்கிழமை சென்னை மாங்காடு
வெள்ளீஸ்வரன் ஆலயத்தில் வழிபட்டு ஒரு நாழிகை எனப்படும் 24நிமிடம் உள்ளே இருப்பதும் சுக்கிரனை வலுப்படுத்தும்.
மிக முக்கியமாக வெள்ளிக்கிழமை இரவு இருபது வாரம் தொடர்ந்து சிறிதளவு மொச்சையை தலைக்கடியில் வைத்துப் படுத்து கடைசி வாரம் முடிந்தவுடன் அனைத்தையும் மொத்தமாகச்
சேர்த்து நிற்கும் நீர்நிலையான கிணறு அல்லது குளத்தில் போடுங்கள். ஓடும் நீரில் இதைப் போடக்கூடாது என்பதோடு ஒருவாரம் கூட விட்டு விடாமல் தொடர்ந்து
படுக்கவேண்டும் என்பதும் முக்கியம். வலதுகை சுண்டுவிரலில் சுக்கிரனின் உலோகமான வெள்ளிவளையம் ஒன்று எப்போதும் அணிந்து கொள்ளுங்கள். பொருளாதாரம் இடம் கொடுத்தால்
உச்சாடனம் செய்து உருவேற்றிய சுக்கிரனுக்கான ராசிக்கல்லை அணிந்து கொள்வதும் நன்மை தரும்.
ஒரு வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதுள்ள இளம் கன்னிப்பெண்ணை கிழக்குப் பார்த்து
நிற்க வைத்து ஒரு புதிய எவர்சில்வர் தட்டில் ஒரு தூய வெள்ளைநிற பேன்சி டிரஸ், ஒரு வெள்ளிக்காசு, ஒரு லிட்டர் தயிர், ஒரு சென்ட்பாட்டில், ஒரு ஜிர்கான் கல் வைத்து
தானம் செய்யுங்கள். உடனடியாக வரும் தைமாதம் நிச்சயமாகி ஏப்ரல், மேயில் திருமணம் நடக்கும்.
No comments :
Post a Comment