Tuesday, 17 November 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 63 (17.11.2015)

எஸ். கோவிந்தராஜன், சேலம்.

கேள்வி :

சந்
பு,சுக்
சூ
ரா
செவ்
ராசி
குரு
சனி
கே
குரு
ரா
ராசி
சந்
சுக்
சூ,பு
சனி
செவ்
கே


மகனுக்கு திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. குழந்தை இல்லை. இருவரின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். குழந்தை பாக்கியம் எப்பொழுது?

பதில்:

(கணவருக்கு சிம்மலக்னம், மீனராசி. நான்கில் சனி. ஆறில் குரு. எட்டில் புத, சுக். ஒன்பதில் சூரி, ராகு. பத்தில் செவ். மனைவிக்கு ரிஷப லக்னம், மகர ராசி. ஆறில் செவ். எட்டில் சூரி, புத, சனி. ஒன்பதில் சுக். பதினொன்றில் குரு, ராகு)

மகனுக்கு புத்திரஸ்தானாதிபதியும் புத்திரகாரகனுமான குருபகவான் ஆறில் மறைந்து நீசம். புத்திரஸ்தானத்திற்கு செவ்வாய் பார்வை. மருமகளுக்கு புத்திர ஸ்தானாதிபதி புதன் எட்டில் மறைந்து சூரியனுடன் ஒரே டிகிரியில் அஸ்தமனமாகி சனியுடன் இணைவு. புத்திரஸ்தானத்தில் கேது அமர்ந்து காரகன் குருவுடன் ராகு இணைவு. இருவருக்குமே கடுமையான புத்திர தோஷம் இருப்பதால் குழந்தை பிறக்க தாமதமாகிறது.

இது போன்ற கடுமையான தோஷங்களுக்கு ராகுவிற்கு ஶ்ரீகாளகஸ்தியிலும், இருவரின் லக்னாதிபதியும் வலுவிழந்திருப்பதால் அவர்களை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களும் செய்யப்படவேண்டும். பரிகாரங்களுக்கு பின் மகனது புதன்தசை குருபுக்தியில் குழந்தை பிறக்கும்.

வாஸ்துப்படி கடையில் மாற்றம் செய்ய 

வேண்டுமா ?

கோ. முத்துக்குமாரசாமி, புதுச்சேரி -9.

கேள்வி :

சனி
ரா,சுக்
சூ
ராசி
சந்
பு
செவ்
குரு
கே


ஆசானுக்கு சீடனின் பணிவான வணக்கங்கள். பதினேழு வருடம் பார்த்த வேலையை முதுகுவலி காரணமாக விட்டுவிட்டு நகையை அடமானம் வைத்து பால்கடை வைத்திருக்கிறேன். வியாபாரம் சரியில்லை. வாடகைக்கு கூட வருமானம் இல்லை. என் ஜாதகப்படி வியாபாரம் சரியாக வருமா? இல்லை வேலைக்கு செல்ல வேண்டுமா? நானும் மகனும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்பதால் வியாபாரம் டல்லாக இருக்கிறதா? கடையின் அமைப்பை அனுப்பி இருக்கிறேன். வாஸ்துப்படி ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? ஜாதகத்தில் முத்துக்குமரன் என்று உள்ளது. ஸ்கூல் சர்டிபிகேட்டில் முத்துக்குமாரசாமி என்று உள்ளது இது ஏதாவது கோளாறு செய்யுமா? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா? மனைவி பார்க்கும் கம்ப்யூட்டர் வேலையில்தான் குடும்பம் நடக்கிறது. யோசித்தால் சில நேரங்களில் இறந்துவிடலாமா என்று தோன்றுகிறது. உங்கள் கேள்வி - பதில்களுக்கு தீவிர ரசிகனான நான் பாதம் தொட்டு வணங்கி கேட்கும் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

17 வருடங்களாக வேலை பார்த்தபோது தோன்றாத பெயர்மாற்றமும், வாஸ்துவும் வேலையை விட்டுவிட்டு தொழில் வைத்தவுடன் பெயர் சரிதானா என்று நினைக்க வைத்து விட்டது. கஷ்டம் என்று வந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற மனநெருக்கடி வந்து விடுகிறது. உங்கள் அப்பாவும், தாத்தாவும் எந்த வாஸ்து பார்த்து கடையை வைத்தார்கள்?. அவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருந்தார்கள்? 20 வருடமாகத்தானே வாஸ்து வாஸ்து என்று அடித்துக் கொள்கிறீர்கள்?

வாஸ்து என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதுதானே தவிர அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது அல்ல. வாஸ்துபடி ஒரு வீடு கட்டினால் காற்றோட்டமுடன் நீர்வளமுடன் ஆரோக்கியமாக அந்த வீட்டில் இருப்பீர்கள். அவ்வளவுதான். அதிர்ஷ்டத்திற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் இல்லை. வாஸ்துப்படி மட்டுமே எல்லாம் நடக்கும் என்றால் வீடு கட்டும் பில்டர்கள் இந்த வீட்டில் குடியேறினால் உங்கள் மகளுக்கு திருமணமாகும். இந்த வீட்டில் வசித்தால் கோட்டீஸ்வரன் ஆவீர்கள் என்று விளம்பரம் செய்யலாமே? வாஸ்து வருவதற்கு முன்னால் நமது பாரம்பரியமிக்க கொத்தனார்கள் மனையடி சாஸ்திரப்படி அருமையாக வீடு கட்டி வாழையடி வாழையாக நமது முன்னோர்கள் அதில் வாழ்வாங்கு வாழத்தானே செய்தார்கள்? பெயர் மாற்றத்தினால் மட்டும் வாழ்க்கை மாற்றம் இருக்காது என்பதையும் ஏற்கனவே எழுதித்தான் இருக்கிறேன்.

உங்களுக்கு மிதுனலக்னம், கடகராசியாகி தற்போது வெள்ளைத் திரவங்களுக்கு அதிபதியான சந்திரனின் தசை நடப்பதால் பால்கடை வைத்திருக்கிறீர்கள். சந்திர தசை அடுத்த வருடம் முடிவடைந்து 2017 முதல் ஆறாமிடத்தில் தனித்து ஆட்சி பெற்ற செவ்வாயின் தசை ஆரம்பிக்க இருக்கிறது. இந்த செவ்வாய்தசை உங்களை கடன்காரனாக ஆக்கும். இதற்காகவே தற்போது கடன் வாங்கி பால்கடை வைத்திருக்கிறீர்கள். தொழில்ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இணைந்திருப்பதால் உங்களுக்கு செவ்வாய்தசை வரை சொந்தத்தொழில் ஒத்து வராது. அதுவரை மறுபடியும் வேலைக்கு போகவும்.

ராகுவைக் குரு பார்ப்பதால் ராகுதசை முதல் சொந்தமாக தொழில் செய்யலாம். அப்போதுதான் கடன் இல்லாமல் தொழில் விருத்தியாகி வருமானமும் வரும். மிதுனலக்னத்திற்கு செவ்வாய் நன்மைகளைச் செய்யமாட்டார். மகனுக்கும், உங்களுக்கும் ஒரே நட்சத்திரம் என்பது எந்தவகையிலும் பாதிப்புகளைத் தராது. மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் திக்பலம் பெற்று யோக ஜாதகமாக இருப்பதால் அவனின் தகப்பனராகிய நீங்கள் எந்தக்காலத்திலும் கெட்டுப்போக மாட்டீர்கள். ஏற்கனவே செய்துள்ள பரிகாரங்கள் போதும்.

டி. சதீஷ்குமார், சமயநல்லூர்.

கேள்வி :

சந்
பு
சூ
சுக்
கே
ராசி
செவ்,
குரு
சனி,ரா


பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் நேர்மையாக பணிபுரிந்தும் உயர் அதிகாரியால் வெளியேற்றப்பட்டேன். தந்தையுடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வருகிறேன். அரசுவேலைக்கு முயற்சி செய்கிறேன். கிடைக்குமா? சொந்த வீடு கட்டும் கனவு நனவாகுமா?

பதில்:

துலாம் லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் ஆட்சி பெற்று சந்திரனும், புதனும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதாலும், ஏழாமிடத்தில் சூரியன் உச்சமாகி வர்க்கோத்தமமுடன் செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதாலும் அடுத்த வருடம் ஜூன்மாதம் ஆரம்பிக்க இருக்கும். சூரியதசையில் அரசுவேலை கிடைக்கும். சொந்தவீடு கட்டுவீர்கள்.

ஜி. விஜயலட்சுமி, தஞ்சாவூர்.

கேள்வி :

கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். அவர் வெளிநாட்டில் ஓட்டல் வைத்திருக்கிறார். நான் அண்ணன் வீட்டில் இருக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் இருக்கிறதா? பெண் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டுகிறேன்.

பதில்:

மனதை உருக்கும் கடிதமும் எழுதி கன்னிலக்னம், சிம்மராசி ஞாயிற்றுக்கிழமை, பிறந்த நேரம் இரவு 11.15, இடம் தஞ்சாவூர் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டு பிறந்ததேதி, மாதம், வருடத்தை மட்டும் எழுத மறந்து விட்டால் நான் எப்படி அம்மா பதில் சொல்வது? குழந்தையின் பிறந்த நேரத்திலும் பகலா, இரவா என்று எழுத மறந்திருக்கிறாய். இதுபோன்ற தவறுகளால்தான் பதில் கொடுக்க நான் தேர்ந்தெடுத்தும் சில கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் போகிறது.

கே. தியாகராஜன், வில்லியனூர்.

கேள்வி :

சந்
சனி
கே
பு
ராசி
ல,சூ
குரு
சுக்
செவ்
ரா
சூ
பு

சுக்
ராசி
ரா
கே
குரு
செவ்
சனி
சந்


மூன்றரை வருடமாக சரியாக வேலை இல்லை.  மனைவி பிரிந்துவிட்டாள். தனியாக இருக்கிறேன். குழந்தை ஞாபகமாக இருக்கிறது. குழந்தையைக் கண்ணில் காட்டமாட்டேன் என்கிறாள். வாழமாட்டேன் என்று சொல்லி விட்டாள். ஜாதகம் பார்க்காமல் பெரியவர்கள் திருமணம் செய்து விட்டார்கள். கிராமத்துப்பெண், குடும்பத்துக்கு ஏற்ற பெண் என்று நினைத்தால் கல்யாணம் ஆனதில் இருந்தே பிரச்னைதான். சொந்தமாக வீடு இல்லை. பங்காளி பிரச்சினை. சொந்தம் இல்லை. பந்தம் இல்லை. வேலை இல்லை.  வாழ்க்கை இல்லை.  நீங்கள்தான் வழி சொல்ல வேண்டும் .

பதில்:

(கணவனுக்கு மகரலக்னம், மீனராசி. லக்னத்தில் சூரி, சுக், குரு. இரண்டில் புத. ஐந்தில் சனி. பனிரெண்டில் செவ், ராகு. மனைவிக்கு மிதுனலக்னம், துலாம்ராசி. லக்னத்தில் சுக். மூன்றில் செவ், குரு, சனி, ராகு. பனிரெண்டில் சூரி, புத.)

உங்களுக்கு சனியின் மகரலக்னமாகி லக்னத்தில் அட்டமாதிபதி சூரியன் இருந்து ராசியை பாதகாதிபதி செவ்வாயும் பார்ப்பதால் நீங்கள் செய்வது மட்டும்தான் சரி. மற்றவர் செய்வது எல்லாம் தப்பு என்று சொல்வீர்கள். உலகத்தில் யாரோடும் ஒத்துப்போக மாட்டீர்கள். அதனால்தான் வேலையில்லை சொந்தமில்லை வாழ்க்கை இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள்.

மனைவிக்கும் உங்களுக்கும் லக்னம் ராசி இரண்டுமே ஆறுக்கு எட்டு எனப்படும் சஷ்டாஷ்டக தோஷமாக அமைந்தது அந்தப்பெண்ணின் துரதிர்ஷ்டம். இதனால் இருவரும் எலியும் பூனையுமாகத்தான் இருப்பீர்கள். ஒரு சனியின் லக்னத்திற்கு இன்னொரு சனி அல்லது செவ்வாயின் லக்னத்தைச் சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும். எதையும் சந்தேகப்பார்வை பார்க்கும் உங்களுக்கு புத்திசாலித்தனமும் நல்லகுணமும் கொண்ட அந்தப் பெண் மனைவியானது அவளது முன் ஜென்மகர்மா. சுக்கிரனும், நீசகுருவும் லக்னத்தில் சேர்ந்திருப்பதால் உங்களால் எந்தப் பெண்ணுடனும் ஒத்துப் போக முடியாது.

உங்களுக்கு அஷ்டமச்சனியும் மனைவிக்கு ஏழரைச்சனியும் நடந்ததால் வேலையும் மனைவியும் இல்லாமல் போனது. ஜாதகம் பார்ப்பது என்பது நம்முடைய பலவீனங்களைத் தெரிந்து உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்வதற்காகத்தான். தைமாதத்தில் மனைவியிடம் போய் நடந்தவை எல்லாவற்றிற்கும் மன்னிப்புக் கேட்டு திரும்ப வரும்படி கூப்பிடுங்கள். வர மறுத்தால் கொஞ்சநாள் மனைவிக்கு நம்பிக்கை வரும்படி நடந்து காட்டி பிறகு போய் கூப்பிடுங்கள். வந்தபின் எல்லா விஷயத்திலும் மனைவியைக் கலந்து பேசி முடிவெடுத்து வாழ்க்கையை நடத்துங்கள். எல்லா இல்லைகளும் இப்போது இருக்கு என்றாகிவிடும்.

பி.ரங்கராஜு கோவை

கேள்வி


ரா
ராசி
சந்
செவ்
குரு
சுக்
சனி
சூ
பு


நல்ல குணநலமுடன் பிஇ படித்து சாப்ட்வேர் இஞ்சினியராக கோவை சிடிஎஸ்சில் இருக்கும் என் மகனுக்கு திருமணம் தட்டிப்போவதால் நானும் மனைவியும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். தாங்கள்தான் அவனது ஜாதகத்தை ஆராய்ந்து எப்போது திருமணம்? எப்படிப்பட்ட மனைவி அமைவாள் என்று சொல்ல வேண்டும்....

பதில்

(ரிஷபலக்னம். மகரராசி லக்னத்தில் ராகு ஐந்தில் சூரி புத ஆறில் சுக் சனி எட்டில் செவ் குரு)

மகனுக்கு ஏழாமிடத்தில் ராகுகேதுக்கள் சம்பந்தப்பட்டு ஏழுக்குடைய செவ்வாய் அஷ்டமாதிபதியுடன் இணைந்து எட்டில் மறைந்து ஏழுக்குடையவனையும் ராசிக்கு ஏழாமிடத்தையும் உச்சசனி பார்த்தது கடுமையான தாரதோஷம். லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையும் ராசிக்கு ஏழாம் வீட்டையும் செவ்வாய் பார்ப்பதும் குற்றம். ராசிக்கு ஐந்தில் ராகு அமர்ந்து குருவை சனி பார்த்து புத்திரதோஷம் இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது.

லக்னாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் சனியுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து பலவீனமாகி லக்னத்தில் ராகுவும் அமர்ந்ததால் சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களும் ராகுவிற்கான பரிகாரங்களும் செய்யுங்கள். அடுத்தவருடம் இறுதியில் அல்லது 2017ம் வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும். ஏழுக்குடையவன் வலுவானதால் மேம்பட்ட இடத்தில் இருந்து மனைவி அமைவாள். அழகிய வசதியான அன்னியப் பெண். அஷ்டமாதிபதி தசை நடந்து அடுத்து ஏழரைச்சனி நடக்கப் போவதால் உங்கள் மகன் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆவார். எனவே மருமகளும் வெளிநாட்டில் வசிக்கும் ஜாதக அமைப்பு உள்ளவள்.

No comments :

Post a Comment