Tuesday, October 13, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 59 (13.10.2015)

சி. சாந்தி, செந்தண்ணீர்புரம்.

கேள்வி :

சந்
பு
சுக்
           ராசி
சூ
ரா
கே
குரு
செவ்
சனி

பதினொரு வருடங்களாக மகனுக்கு பெண் பார்த்து வருகிறேன். வக்கீல் என்றாலே பெண்வீட்டார்கள் வேண்டாம் என்கிறார்கள். வக்கீல் படிப்புத்தான் பிரச்னையா? இல்லை ஜாதகத்தில் ஏதேனும் கடுமையான தோஷம் உள்ளதா? ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு மாதிரியாக சொல்கிறார்கள். மனவேதனையாக இருக்கிறது. எங்கள் காலத்திற்குள் இவருக்கு திருமணம் ஆகுமா? ஏன் திருமணம் தடைபடுகிறது? பரிகாரம் என்ன? எப்போது திருமணம் என்று சொல்ல தாழ்மையுடன் வேண்டுகிறேன். நாங்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பதில்:

(கும்பலக்னம், ரிஷபராசி, ஐந்தில் புதன், சுக். ஆறில் சூரி, ராகு. ஏழில் குரு. எட்டில் செவ், சனி.)

வக்கீல்கள் எல்லோரும் திருமணம் ஆகாமல்தான் இருக்கிறார்களா என்ன? தொழிலுக்கும், திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உங்கள் மகனுக்கு கும்பலக்னமாகி சனியும், செவ்வாயும் எட்டில் அமர்ந்து ஏழுக்குடைய சூரியன் ஆறில் மறைந்து ராகுவுடன் இணைந்து கடுமையான தாரதோஷம் இருப்பதால் திருமணம் தள்ளிப்போகிறது. குடும்பஸ்தானம் எனப்படும் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாயும் ராசிக்கு இரண்டாம் வீட்டை சனியும் பார்ப்பதாலும் இதுவரை குடும்பம் அமையவில்லை.

தற்போது ராகுதசையில் சூரியபுக்தி நடப்பதால் முறையான பரிகாரங்களை செய்யும்பட்சத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும். ரோகிணி நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும். சூரியபுக்தி தந்தையைப் பாதிக்கும் என்பதால் உடனடியாக ஶ்ரீகாளகஸ்திக்கு செல்வது நல்லது.

என். கனி, கடையநல்லூர்.

கேள்வி :

41 வயதாகியும் இன்றுவரை எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. மெடிக்கல், லாலாகடை, பிரிண்டிங் பிரஸ், கண் கண்ணாடிக்கடை என பல வேலைகளுக்கும் சென்று வந்துள்ளேன். பத்து ஆண்டுகளாக வேலை பார்க்கும் கண் கண்ணாடி கடையில் அவ்வப்போது கழற்றி விடுகிறார்கள். மூன்றுமுறை வெளியே போய் திரும்ப வந்து விட்டேன். கவலையும், நிம்மதியற்ற நிலையும் இருக்கிறது. எனக்கு எந்த வயதில் இருந்து யோகம் ஏற்படும்? சொந்தத்தொழில் செய்ய வாய்ப்புள்ளதா?

பதில்:

(மிதுனலக்னம், ரிஷபராசி. லக்னத்தில் சூரி, புதன், சுக், சனி. இரண்டில் செவ். ஆறில் ராகு. ஒன்பதில் குரு.)

மேம்போக்காகப் பார்த்தால் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சிபெற்ற யோகமான ஜாதகமாகத் தெரிந்தாலும் தற்போது நடக்கும் குருதசை குருபகவான் பாவகச் சக்கரத்தில் பத்தாமிடத்தில் அமர்ந்து கேந்திராதிபத்திய தோஷத்தை பெற்றதாலும் ராசிச்சக்கரத்திலும் குரு நீசச்செவ்வாயின் பார்வையை வாங்கியதோடு மட்டுமின்றி பத்தாமிடத்திற்கு சனிபார்வை பத்துக்குடையவனுக்கு செவ்வாய்பார்வை என்ற அமைப்புள்ளதாலும் உங்களின் தொழில் ஸ்தானம் வலுவற்றுப் போனது.

அதேபோல தொழிலின் மூலமாக நல்லவருமானம் வரவேண்டும் எனில் தொழில் ஸ்தானத்திற்கு ஐந்தாமிடமான தனஸ்தானமும் வலுவாக இருக்க வேண்டும். உங்களுக்கு பணவரவைக் குறிக்கும் இரண்டாமிடத்தில் நீசபங்கசெவ்வாய் அமர்ந்து அந்த வீட்டுக்கதிபதி பனிரெண்டில் மறைந்ததால் தனபாவமும் கெட்டுப் போனது. தைமாதத்திற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் கேதுபுக்தி முதல் மாற்றங்கள் இருக்கும். பின்யோகஜாதகம் என்பதால் 43 வயதிலிருந்து மிகவும் நல்லவிதத்தில் கவலையின்றி சந்தோஷமாக இருப்பீர்கள். நிரந்தர வருமானம் வரும். வாழ்வின் பிற்பகுதி மிகச்சிறப்பாக இருக்கும்.

ஆர். மீனாட்சி, கோவை.

கேள்வி :

சந்
ரா
சூ
குரு
         ராசி
பு
சுக்
செவ்
சனி
கே


இளையமகன் ஏழரை லட்சம் பேங்க்லோன் வாங்கி பைலட் டிரைனிங் படித்து முடித்தான். தற்போது வேலையில்லாமல் வங்கிக்கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் கிடைத்த வேலை செய்கிறேன் என்று துபாயில் கஷ்டப்படுகிறான். என் குடும்பம் எந்த சொத்தும் இல்லாத ஏழ்மையான குடும்பம். எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து படித்தோம் என்று கண்ணீர் வடிக்கிறான். என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும். பெரிய மகன் ஜாதகத்தை பலமுறை அனுப்பியும் நீங்கள் பதில் தரவில்லை. இளையவனுக்காவது பதில் கொடுங்கள். உங்கள் பதில்தான் என் வியாதிக்கு மருந்து.

பதில்

(கன்னிலக்னம், மீனராசி. இரண்டில் கேது. மூன்றில் சனி. நான்கில் செவ். ஆறில் குரு. பத்தில் சூரி. பதினொன்றில் புதன், சுக்.)

ஒருவர் வானில் பறக்கும் விமானப்பணியை செய்ய வேண்டுமெனில் ஸ்திர காற்றுராசியான கும்பம் வலிமையுடன் அமைந்து ராசிப்படியோ லக்னப்படியோ தொழில்ஸ்தானமான பத்தாம் பாவம் காற்றுராசியாக அமைந்திருக்க வேண்டும். இந்த விதிப்படி உங்கள் மகனுக்கு காற்றுராசியான மிதுனம் பத்தாமிடமானதால் அவரால் பைலட் படிப்பு படிக்க முடிந்தது. தற்போது வெளிநாட்டைக் குறிக்கும் விரயாதிபதியான சூரியன் பத்தில் அமர்ந்து சூரியதசை நடப்பதால் வெளிநாட்டில் பொருத்தமில்லாத வேலைபார்க்கிறார். சூரியதசை புதன்புக்தியில் இருந்து தற்போதைய நிலைமை மாறி நன்றாக இருப்பார். யோகஜாதகம் என்பதால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

கே. வைரவன் விருதுநகர்

கேள்வி

சந்
சனி,ரா
        ராசி
சுக்
பு
சூ
செவ்
குரு,கே


கடன் தொந்தரவால் சொந்தத் தொழிலை விடவேண்டியதாகி விட்டது. தற்போது மனைவி பெயரில் எல்ஐசி முகவராக இருக்கிறேன். மூன்று வருடங்களாக போதிய வருமானம் இல்லை. மனைவியின் நகையெல்லாம் அடகில் மூழ்கி விட்டது. இருபது வருடமாக கடன் மூலமாகவும் உறவினர் உதவியாலும் காலம் நகன்று விட்டது. இப்போது உறவுகள் விலகி நிற்கிறது. எனது குடும்பம் யாரையும் சார்ந்து இல்லாமல் சுயமாக வாழ முடியுமா? மீண்டும் சொந்தத்தொழில் செய்ய வாய்ப்புள்ளதா? எனக்கு எப்போது நல்லகாலம் பிறக்கும்?

பதில்

(கடகலக்னம் மீனராசி மூன்றில் குரு செவ், ஐந்தில் சூரி புத, ஆறில் சுக்,ஒன்பதில் சனி,ராகு)

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனம் அடைந்தாலே அந்த ஜாதகரால் தனித்து இயங்க முடியாது. லக்னாதிபதியும் கெட்டு அவயோகதசைகளும் நடந்தால் வாழ்க்கை கடன் நோய் தரித்திரம் என்றுதான் செல்லும். உங்களுக்கு லக்னாதிபதி சந்திரன் ராகுவுடன் மிகநெருங்கி இணைந்து அஷ்டமாதிபதி சனியுடனும் இருப்பதால் நீங்களே தன்னம்பிக்கை குறைவானவராகவும் எதையும் எதிர்மறையாகப் பார்ப்பவராகவும் இருப்பீர்கள். லக்னாதிபதி கெட்டதால் ஜாதகத்தில் இருக்கும் தர்மகர்மாதிபதி யோகம் கூட வேலை செய்யாமல் உங்கள் ராசிப்படி தொழில் அமைகிறது.

மனைவிக்கு ஏழரைச்சனியும் உங்களுக்கு ராசிக்கு ஆறுக்குடைய சூரியதசையும் நடப்பதால் இன்னும் ஒன்பது மாதங்களுக்கு சொந்தத்தொழில் செய்ய வேண்டாம். அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது. அப்போது உங்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்யுங்கள். தெரியாத தொழிலைச் செய்ய வேண்டாம். லக்னாதிபதி சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். இதுவரை நடந்த சனி புதன் கேது சுக்கிரன் என அனைத்தும் யோகமில்லாத தசைகள். அடுத்து ஆரம்பிக்க இருக்கும் சந்திரதசை லக்னாதிபதி தசை என்பதால் வாழ்வின் பிற்பகுதி யோகமாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

அணுக்கச்செல்வன் மேலப்பாளையம்.

கேள்வி

சந்
கே
சுக்
        ராசி
சூ
பு
சனி
ரா
ல,செவ்
குரு
சுக்
சூ,பு
கே
சனி
        ராசி
செவ்
சந்
குரு
ரா


பிள்ளைகளின் பிறந்த நேரத்தைக் குறிப்பிடாததால் கடந்த ஆகஸ்டு மாதம் எனது கேள்வி வெளியாகியும் தங்களின் விலைமதிப்பற்ற பதிலைப் பெற முடியவில்லை. பட்டப்படிப்பு முடித்த எனது மூத்தமகள் ஐஏஎஸ் ஆகவும் இளையமகள் ஆடிட்டர் ஆகவும் விரும்புகின்றனர். ஜாதகப்படி இது சாத்தியமாகுமா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

பதில்

பெரியவளுக்கு கன்னிலக்னமாகி நவாம்சத்தில் சுக்கிரனும் புதனும் உச்சம் பெற்ற நல்ல யோகஜாதகம். லக்னத்தில் செவ்வாய் குருவுடன் அமர்ந்து சூட்சும வலுப்பெற்றுள்ளதாலும் சூரியன் திக்பலத்திற்கு அருகில் உள்ளதாலும் அரசு உத்தியோகம் கிடைக்கும். தற்போது மூன்றில் உள்ள ராகுதசை நடப்பதால் சுயபுக்திக்குப் பிறகே வேலை கிடைக்கும்.

இளையவளுக்கு விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடப்பதால் இரண்டு வருடங்களுக்கு மட்டும் தடை இருக்கிறது. இளையவளின் லட்சியம் கண்டிப்பாக நிறைவேறும். இரண்டு குழந்தைகளுமே புதனின் லக்னத்தில் பிறந்து புதன் வலுப்பெற்றதால் மிகச் சிறந்த புத்திசாலிகள். இருவருமே உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள்.

கடன் தீர என்ன வழி?

ஒரு வாசகர் சேலம்

கேள்வி

சனி
சுக்
சந்
         ராசி
கே
பு
ரா
சூ
செவ்
குரு


ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைக்கிறேன் அய்யா... பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். நிம்மதி துளிக் கூட இல்லை. நல்லவேலையில் சேர்ந்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக வாங்கிய தொகை வளர்ந்து கொண்டே போய் விட்டது. வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா அல்லது வாழ்நாள் முழுக்க இப்படியே வட்டி கட்டிக் கொண்டு வறுமையில் துன்பப்பட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை...

பதில்

கவலைப்படாதீர்கள். உங்களால் கடனை முழுமையாக அடைத்து நிம்மதியாக வாழமுடியும். கடந்த ஒரு வருடமாக ஆறில் இருக்கும் சுக்கிரனின் புக்தி நடப்பதால் கடன் தொல்லை இப்போது உங்களின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். உங்கள் ஜாதகம் பவுர்ணமி யோகம் கொண்ட யோக ஜாதகம் என்றாலும் வீட்டில் மற்றவர்களின் ஜாதகத்தை நீங்கள் அனுப்பவில்லை. மனைவி குழந்தைகளுக்கு இப்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும் என்று கணிக்கிறேன். அதனால்தான் மிகுந்த அவஸ்தைப்படுகிறீர்கள்.

உங்கள் ஜாதகப்படியே உங்களுக்கு 2017 நவம்பருக்குப் பிறகு கடன்தொல்லை இருக்க வாய்ப்பில்லை. முழுமையாக அடைத்து விடுவீர்கள். உங்களுக்கு சனிதசை நடந்து கொண்டிருப்பதால் சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். நான்கு வாரங்களில் மாற்றம் தெரியும். கடன் தொல்லை மட்டுப்படும். நிம்மதி கிடைக்கும்.

எக்காரணம் கொண்டும் தனித்த சனி சந்நிதிகளில் சனிபகவானை வழிபடவோ சனிகோவில்களுக்குச் செல்வதோ வேண்டாம். சனியின் முன்னே போய் நிற்காதீர்கள். நவக்கிரகத்தில் உள்ள சனியைச் சுற்றுவது தப்பில்லை. அங்கே சனிக்கென்று தனியாக பவர் கிடையாது.
.

No comments :

Post a Comment