கேள்வி.
ஒரே மகளுக்கு எப்போது திருமணம்? மாப்பிள்ளை எந்தத் துறையில் இருப்பார்? எட்டில் செவ்வாய் இருப்பதால் மகளின் வாழ்க்கை கடைசிவரை சந்தோஷமாக இருக்குமா? எங்கள்
இருவரின் கடைசிக்காலம் எப்படி இருக்கும்? வாழ்வின் ஆதர்சமான ஒரே மகளைப் பற்றிய குருஜியின் அருள்வாக்குக்காக இந்த ஏழை ஆத்மாக்கள் வாராவாரம் செவ்வாய்தோறும்
தவறாமல் மாலைமலர் வாங்கி ஆறு மாதங்களாக ஏங்கித் தவிக்கிறோம்...
பதில்
செவ்வாய் எட்டில் இருந்தாலும் சுபத்துவமாகி சூட்சுமவலுப் பெற்று இருப்பதால் இந்த செவ்வாய் மகளின் வாழ்க்கையை ஒருபோதும் கெடுக்க மாட்டார். அடுத்தவருடம் ஏப்ரல்
மாதத்திற்கு மேல்தான் ஏழுக்குடையவனும் தாம்பத்ய சுகத்தைக் கொடுக்கும் சுக்கிரனும் சம்பந்தப்பட்ட அந்தரம் வருவதால் 2016 மே அல்லது ஜூனில் மகளுக்கு திருமணம்
நடக்கும்.
மாப்பிள்ளை மிதுனம் அல்லது கன்னிலக்னத்தில் பிறந்து சாப்ட்வேர் துறையில் வேலை செய்பவர். 2017 இறுதியில் தாயாவாள். மொத்தம் இரண்டு ஆண்குழந்தைகள். மகளுக்கு பெண்
வாரிசு இல்லை. 2019 ம் ஆண்டில் வெளிநாடு செல்வாள். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் 2021 முதல் பனிரெண்டாமிடத்தோடு சம்பந்தப்பட்டு சரராசியில் இருக்கும்
கிரகங்களின் தசை ஆரம்பிக்க இருப்பதால் மகளின் இரண்டாவது பிரசவத்திற்காகவும் பேரன்களுக்காகவும் நீங்கள் இருவருமே மேற்குத்திசை நாடு ஒன்றிற்கு அடிக்கடி பயணம்
செய்ய வேண்டியிருக்கும்.
மகளுக்கு வாழ்நாள் இறுதிவரை சரராசியில் எட்டு பனிரெண்டாமிடங்களோடு சம்பந்தப்பட்ட தசைகள் நடக்க உள்ளதால் அந்திமகாலம் வரை வெளிநாட்டில்தான் வசிப்பாள். உங்கள்
இருவரின் காலத்திற்குப் பிறகு மகள் இந்தியா வர வாய்ப்பில்லை.
மா. விஜய், திருச்சி
கேள்வி:
ல,ரா | |||
ராசி
|
|||
குரு
செவ் |
சுக்
கே |
சந்,சூ
சனி,பு
|
யோக சனிதசை 2003ல் ஆரம்பித்ததிலிருந்தே இன்றுவரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. வேலை, தொழில், திருமணம், வாகனம் எதுவும் கிடைத்து நான்கு மாதத்திலேயே
கைவிட்டு போய்விடும். போயும் விட்டது. ஏழரைச்சனியினால் படாத அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். திருமணமும் பத்திரிக்கை வரை அடித்து உறவினர்களுக்கு
கொடுத்தபின் நின்று போய்விட்டது. இனி திருமணம், புத்திர பாக்கியம் உண்டா? மீதியுள்ள சனிதசையும் அதனை அடுத்து வரும் தசைகளும் நன்றாக இருக்குமா? தொழில்
அமையுமா? என்னுடையது யோக ஜாதகமா? என்று விளக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
(ரிஷப லக்னம், துலாம் ராசி ஆறில் சூரி, புத, சனி. ஏழில் சுக், கேது. எட்டில் குரு, செவ்)
என்னுடைய சீடன் என்று எழுதியிருகிறீர்கள். ஆனால் பனிரெண்டு வருடங்களாக சனிதசை நடப்பதாக தவறாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான்கு மாதமாகத்தான் உங்களுக்கு
சனிதசை ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முன்பு வரை உங்களுக்கு எட்டுக்குடைய குருவின் தசைதான் நடந்து கொண்டிருந்தது.
ரிஷபலக்னத்திற்கு எட்டில் ஆட்சி பெறும் குரு வெளிநாடு, வெளிமாநில நன்மைகளைத் தவிர வேறு நல்லவைகளைச் செய்யமாட்டார். தவிர அஷ்டமாதிபதி தசை நடக்கும் பொழுது
கோட்சாரத்தில் ஏழரைச்சனியும் நடந்ததால் கடுமையான கெடுபலன்கள் நடக்கும். அதனால்தான் இதுவரை வேலையும் கிடைக்கவில்லை, பத்திரிக்கை அடித்தும் திருமணம் நடக்கவில்லை.
லக்னத்தை லக்னாதிபதி பார்த்த யோகஜாதகம் உங்களுடையது. யோகாதிபதி சனிதசையில் சுயபுக்தி முடிந்த பிறகு யோகம் செயல்பட ஆரம்பிக்கும். சுய புக்தியிலேயே திருமணம்
நடக்கும். ஏழரைச்சனி முடிந்த பிறகு நிரந்தரத் தொழில் அமையும்.
கே. செல்வராஜ், முகப்பேர்
கேள்வி:
சந்
குரு |
செவ்
கே |
||
ராசி
|
சனி
|
||
சுக்
|
|||
ல
ரா
|
சூ
பு |
மணமாகி ஆறுவருடமாகிறது. குழந்தை இல்லை எப்பொழுது கிடைக்கும்? மனைவி என் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை. சமயத்தில் என்னையே மரியாதை இல்லாமல்
பேசுகிறாள். திருமணத்திற்கு முன் நான் என் பெற்றோர்களின் மனம் புண்படும்படி நடந்துகொண்டேன். அதுதான் இதற்கெல்லாம் காரணமா? அடிக்கடி கோபம் வருகிறது,
உடல்நிலையும் பாதிக்கிறது. தந்தையிடமும் கோபப்படுகிறேன். வாழ்க்கையில் சுபிட்சம் எப்பொழுது வரும்? பெற்றோர்களை வைத்துக் காப்பாற்றுவேனா? என் தந்தை நான்
சொன்னால் நீ கேட்கமாட்டாய் நீயே குருஜியிடம் ஜாதகத்தை அனுப்பி சந்தேகத்தைக் கேட்டுத் தீர்த்துக்கொள் என்றார். ஆதலால் உங்கள் உதவியை நாடியிருக்கிறேன்.
பதில்:
(விருச்சிகலக்னம், மீனராசி ஐந்தில் குரு. ஏழில் செவ், கேது. ஒன்பதில் சனி. பத்தில் சுக், பதினொன்றில் சூரி, புத)
.விருச்சிக லக்னமாகி செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதால் முன்கோபமும் அவசரக்குடுக்கைத்தனமும் இருக்கும். அதேநேரத்தில் லக்னத்தை குருவும் பார்த்து
சூரியனும் சந்திரனும் பௌர்ணமியோகத்துடன் தர்மகர்மாதிபதி யோகம் வலுவாக இருப்பதாலும் யோகதசைகள் நடக்கவுள்ளதாலும் கடைசிவரை தாய் தந்தையரை வைத்துக்
காப்பாற்றுவீர்கள்.
மனைவி உங்களிடமும் உங்கள் பெற்றோரிடமும் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கிறார் என்றால் அக்கம்பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்றுகூட பார்க்காமல் எதையும்
எடுத்தெறிந்து பேசி மற்றவர் மனதைக் காயப்படுத்தும் உங்களது குணமே காரணமாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். செவ்வாய்க்கிழமைதோறும் பூந்தமல்லி
வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு இருபத்திநான்கு நிமிடம் கோவிலில் இருப்பது கோபத்தைக் குறைத்து நல்ல வழிகாட்டும். சூரியன் சனிபார்வையில் இருப்பதால்
வேலை சூரியதசை யோகங்களைத் தரவில்லை. டிசம்பரில் ஆரம்பிக்கும் சந்திரதசை மிகவும் நன்றாக இருக்கும். 2017ல் கையில் குழந்தை உண்டு.
ஜி. ரகுநாதன், ஆதனூர்
கேள்வி:
குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். வியாழன்தோறும் வரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடருக்கு அடிமையாகிவிட்டேன். ஒய்வுபெற்ற நான் தற்பொழுது வீட்டில் உள்ளவர்களால்
உதாசீனம், அவமானப்படுத்தப்பட்டு மன உளைச்சலில் இருக்கிறேன். இது எவ்வளவு நாள் நீடிக்கும்? எப்பொழுது தீரும்?
பதில்:
பிறந்த தேதியை குறிப்பிட்டுள்ள நீங்கள் நேரம் தராததால் என்னால் துல்லியமாக பதில் தர இயலாது. அதேநேரத்தில் நீங்கள் அஸ்வினி நட்சத்திரம் மேஷராசியாகி தற்பொழுது
உங்களுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் உங்களுடைய மன உளைச்சல் சனி முடியும்வரை நீடித்து 2017க்கு பிறகு கவலையின்றி இருப்பீர்கள். சனி நடப்பதால் வேலைக்குப் போகவேண்டி
இருக்கும். வேலை கிடைக்கும்.
ஆர். மல்லிகா, மேட்டுப்பாளையம்
கேள்வி:
சூ
|
பு
|
சுக் | செவ் |
ராசி
|
கே
குரு |
||
சந்,ரா
சனி
|
|||
ல
|
சுக்
|
கே | சூ | |
சனி |
ராசி
|
சந்
பு |
|
ல
|
செவ்
|
||
ரா
|
கணவர் தினமும் குடித்துக் குடித்து சண்டை போட்டே 2013 ல் இறந்துவிட்டார். மூத்தமகளுக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது தலையில் கேன்சர் கட்டி வந்து
படுத்தபடுக்கையாகி ஆப்ரேசன் செய்து மீண்டு வந்து நலமுடன் இருக்கிறாள். இவளுக்கு எப்பொழுது நல்லபடியாக திருமணம், குழந்தை பாக்கியம் நடக்கும்? இளையவளுக்கு
மாப்பிள்ளை தேடி வருகிறேன். இளையவளுக்கு முடித்துவிட்டுத்தான் பெரியவளுக்கு திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன் ஆப்ரேசன் செய்ததால் மூத்தவளை பக்கத்திலேயே
வைத்திருக்க வேண்டியிருக்கிறது. தனியாக வெளியில் அனுப்புவதில்லை. எனக்கு ரோடு தாண்டும்பொழுது வண்டி இடித்து கால் முறிந்து பிளேட் வைத்து இப்பொழுது நன்றாக
இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? எப்பொழுது விடிவுகாலம் வரும்? அம்மாவுடன் சேர்ந்து என் மகள்களும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
பதில்:
(பெரியபெண்ணிற்கு கன்னிலக்னம் மகரராசி ஐந்தில் சனி, ராகு. ஏழில் சூரி. எட்டில் புத. ஒன்பதில் சுக். பத்தில் செவ். பதினொன்றில் குரு. இளையவளுக்கு மகரலக்னம்
கடகராசி இரண்டில் சனி. நான்கில் சுக். ஐந்தில் கேது. ஆறில் சூரி. ஏழில் புத. எட்டில் செவ்)
பெரியவளுக்கு தற்பொழுது ராகுதசை நடக்கிறது. ராகுவிற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் ராகுதசை நன்மைகளைச் செய்வது கடினம். இங்கே சனியும், செவ்வாயும் ஆறு,
எட்டுக்குடையவர்களாகி ராகு சனியுடன் இணைந்து செவ்வாயின் பார்வையைப் பெற்றதால் ராகுதசை முற்பகுதி ஒன்பது வருடங்கள் நோய் போன்ற கெடுபலன்களையே செய்யும்.
பிற்பகுதியில் குழந்தை எந்தக் குறையுமின்றி நன்றாக இருப்பாள். ஏழுக்குடையவன் உச்சம் பெற்று புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றதால் திருமணமும், குழந்தைப்
பாக்கியமும் நிச்சயம் உண்டு. அதேநேரத்தில் சற்றுத் தாமதமாக ராகுதசை கேது புக்தியில் 28 வயது முடிந்த பிறகே திருமணம் நடக்கும்.
இளையவளுக்கு லக்னத்தைக் குரு பார்த்த யோகஜாதகம் என்றாலும் லக்னத்திற்கு இரண்டில் சனி, எட்டில் செவ்வாய் என்றாகி அதுவே ராசிக்கு இரண்டில் செவ்வாய், எட்டில் சனி
என்ற அமைப்பான தோஷம் இருக்கிறது. தற்பொழுது அவளுக்கு தாம்பத்யசுகத்தைத் தரும் சுக்கிரனின் தசை நடந்தாலும் சுக்கிரனுக்கு எட்டில் சஷ்டாஷ்டகமாக இருக்கும் ராகுவின்
புக்தி நடப்பதாலும் இப்பொழுது அவளுக்கு 22 வயதுதான் நடப்பதாலும் சீக்கிர திருமணம் நல்லதல்ல. பாதகாதிபதியின் வீட்டில் அமர்ந்து பாதகாதிபதியின் பார்வையையும் பெற்ற
ராகு கெடுதல் செய்வார். எனவே ராகுபுக்தி முடிந்தபின் திருமணம் செய்வதே நல்லது. பத்துப்பொருத்தம் மட்டுமல்லாது அனுபவமுள்ள ஜோதிடரிடம் அனுகூலப் பொருத்தமும்
கவனமாகப் பார்க்கவும்.
ஐந்து வயது மகன் எப்போது பேசுவான்?
எம். மகேந்திரன், நாமக்கல்
கேள்வி:
கே | |||
சூ,குரு
சுக்,பு |
ராசி
|
செவ்
|
|
சந்
|
|||
ல
ரா
|
சந்
|
மகன் எப்பொழுது பேசுவான்? எப்பொழுது மனநிலை தெளிவுபடும்? எனது ஜாதகத்தையும் இணைத்துள்ளேன். எனக்கு தொழில் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்.
பதில்:
(தனுசு லக்னம் சிம்மராசி லக்னத்தில் ராகு, மூன்றில் சூரி, சுக், புத, குரு. எட்டில் செவ். பத்தில் சனி)
மகனின் ஜாதகத்தில் பேச்சைக் குறிக்கும் வாக்குஸ்தானமான லக்னத்திற்கு இரண்டாமிடத்தை நீசசெவ்வாய் பார்த்து ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி அமர்ந்ததாலும், லக்னத்தில்
ராகு அமர்ந்து லக்னாதிபதி குரு ராகுவின் சாரத்திலும் சந்திரன் கேதுவின் சாரத்திலும் அமர்ந்து, குரு ஒரேடிகிரியில் சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகி, லக்னமும்
லக்னாதிபதியும் வலுவிழந்த நிலையில் இன்னும் இருபது வருடங்களுக்கு லக்னபாவி ஆறுக்குடைய சுக்கிரனின் தசை நடக்க இருப்பதாலும் நல்லபலன் ஒன்றும் சொல்வதற்கில்லை.
அதேநேரத்தில் குழந்தை பௌர்ணமியோகத்தில் பிறந்து சந்திரன் வலுப்பெற்று குருவைப் பார்ப்பதால் ஆயுளுடன் இருக்கும்.
உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு கடகலக்னமாகி இரண்டாம் வீட்டில் புத்திரக் காரகன் குருவும், புத்திர ஸ்தானாதிபதி செவ்வாயும் வக்ரம் பெற்று அங்கே லக்னாதிபதி
சந்திரனும் ஒரே டிகிரியில் ராகுவுடன் இணைந்து கூடவே சனியும் சேர்ந்திருப்பது கடுமையான புத்திரதோஷ அமைப்பு. மேலும், தற்பொழுது சந்திர தசை நடப்பதாலும் அடுத்து
குழந்தையை குறிக்கும் செவ்வாய்தசை நடக்க இருப்பதாலும் மகனை பற்றிய கவலை நீடித்து இருக்கும். சிம்மராசிக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொழில் ஸ்தானத்தில்
சனிபார்வை பதிவதால் இரண்டு வருடங்களுக்கு தொழில் மந்தமாக இருக்கும். அதன்பிறகு முன்னேற்றம் இருக்கும்.
No comments :
Post a Comment