Tuesday, October 20, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 60 (20.10.2015)

வி. என். லட்சுமிபதி, மஞ்சக்குப்பம்

கேள்வி:

சூ,பு
சனி
சுக்
செவ்
சந்
ரா
ராசி
கே
குரு


மகள், மருமகன், பேத்தி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். அங்கே வேலை நிரந்தரம் இல்லாமல், மாற்றி மாற்றி கிடைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கேயே அரசு வேலை நிரந்தரமாக கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்?

பதில்:

மருமகனுக்கு மிதுனலக்னம் மிதுனராசியாகி வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டுக்கதிபதி சுக்கிரன் பனிரெண்டில் ஆட்சிபெற்று தற்பொழுது சர ராசியான மேஷத்தில் இருக்கும் சனிதசை நடைபெறுவதாலும் அடுத்து சனியுடன் இருக்கும் புதன்தசை நடைபெற இருப்பதாலும் அந்திம காலம் வரை வெளிநாட்டிலேயே இருப்பார். மகளுக்கும் இதே அமைப்பு இருக்கிறது. மருமகனுக்கு சூரியன் உச்சம் என்பதாலும் மகளுக்கு ராசிக்கு பத்தில் சூரியன் இருப்பதாலும் இருவருக்குமே அரசு வேலை உண்டு. இருவரும் 2017 மே மாதத்திற்குப் பிறகு வேலை பற்றிய ஏற்றஇறக்கங்கள் இல்லாமல் நிரந்தரப் பணியில் இருப்பார்கள்.

ஜெ. ஸ்ரீதர், தூத்துக்குடி

கேள்வி:

செவ்
குரு
சுக்
ரா
ராசி
சந்
சூ,பு
கே
சனி


அரசு வேலைக்கு போட்டித்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். என் அன்புக் குடும்பத்தின் மேல் எனக்கு மிகுந்த பொறுப்பும் கடமையும் உள்ளது. அதை செம்மையாக நிறைவேற்றுவேனா? தங்கைக்கு நல்லதொரு இடத்தில் திருமணம் செய்து வைப்பேனா?

பதில்:

(மிதுனலக்னம் மகரராசி லக்னத்தில் சுக். மூன்றில் சூரி, புத, கேது. ஏழில் சனி. பத்தில் செவ். பனிரெண்டில் குரு)

இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்று குருபகவான் திக்பலத்திற்கு அருகில் இருப்பதாலும் ஆட்சிபெற்ற சூரியனின் பார்வையைப் பெற்ற ராகுவின் தசை நடப்பதாலும் பத்தாமிடத்தில் அதிகாரத்தைக் குறிக்கும் செவ்வாய் உள்ளதாலும் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு மேல் அரசுப்பணியில் இருப்பீர்கள். தங்கைக்கு நல்ல இடத்தில் மணம் முடிப்பீர்கள்.

மு. கந்தசாமி, புதுச்சேரி

கேள்வி:




சுக்
செவ்

சூ,ரா
சனி,பு
ராசி


சந்
குரு
கே


செவ்வாய்க்கிழமை மாலைமலர் வாசகன் நான். எட்டாவது வரை மட்டுமே படித்து பனிரெண்டு வயதில் ஊரைவிட்டு புதுவைக்கு வந்து பதினாறு வயதில் கடை தொடங்கி நாற்பத்தைந்து வயதில் முதலாளி என்ற முழு அந்தஸ்தை அடைந்தேன். அதற்கு முன் பெயரளவில்தான் முதலாளியாக இருந்தேன். பொய் சொல்லாதே, திருடாதே, ஏமாற்றாதே, கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறு, அப்படி நீ நடந்தால் உன் சந்ததி நன்றாக இருக்கும். உலகம் உன்னைப் போற்றும், என்று என் மனைவி சொல்லிக் கொடுத்ததின்படி இந்த 70 வயதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவி இறந்து விட்டார்கள். மகன், மகள்கள் நன்றாக இருக்கிறார்கள். நான் இறக்கும் முதல்நாள் வரை வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசை. 87 வயதில் புதன்தசை புதன்புத்தியில் புதன்கிழமை இரவில் தூக்கத்தில் இறைவனிடம் சேர்வேன் என்று நினைக்கிறன். இது சரிதானா? எதிர்காலத்தை தெளிவாகச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(கும்பலக்னம், சிம்மராசி, மூன்றில் சுக், செவ். ஐந்தில் சூரி, புத, சனி, ராகு. ஏழில் குரு)

மரணம் பற்றிய கேள்விகள் நிறைய வருவதாலும் பிறப்பும், இறப்பும் சோதிடனின் கணிப்பிற்கு அப்பாற்பட்டு பரம்பொருளின் முழு ஆளுகைக்கு உட்பட்டது என்பதாலும் அந்திமகாலம் பற்றிய கேள்விகளுக்கு பதில் தருவதை தற்பொழுது தவிர்த்து வருகிறேன். இருப்பினும் உங்களின் நிறைவாழ்க்கையைச் சொன்ன உங்கள் கடிதம் என்னை நெகிழ வைத்ததால் உங்கள் கணிப்பில் உள்ள சிறு தவறை மட்டும் திருத்த விரும்புகிறேன்.

கும்பலக்னத்திற்கு அஷ்டமாதிபதி புதன் ஐந்தில் இருந்தால் மாரகம் செய்யமாட்டார். இரண்டுக்குடைய குருபகவான்தான் மாரகாதிபதியாக செயல்படுவார். குரு உங்களுடைய ஜாதகத்தில் இன்னொரு மாரகஸ்தானமான ஏழில் அமர்ந்து விரயாதிபதி சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். சனியும், ராகுவும் இரண்டு டிகிரிக்குள் இணைந்திருக்கிறார்கள். இனிமேல் பதிலை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். தசாபுக்திகளை திருக்கணிதப்படி கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஜாதகப்படி கடைசிநாள்வரை வியாபாரம் செய்து கொண்டிருப்பீர்கள்.

பி. சிவகல்யாணசுந்தரம், கிணத்துக்கடவு.

கேள்வி:

சந்
கே
ராசி
குரு
   சூ,பு
செவ்,ல
சனி
ரா
சுக்

குருவிற்கு பணிவான வணக்கம். நானொரு ஜோதிட மாணவன். கோவிலில் அர்ச்சகராக பணி செய்கிறேன். கோவிலில் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், வருமானம் போதவில்லை. ஜோதிடம், ஆன்மிகம் போன்ற துறையில் எனக்கு வெற்றி பெறும் யோகம் உள்ளதா? அல்லது தெரிந்த வேலைக்கு சென்று குடும்பச்சுமையை போக்கட்டுமா? வழி காட்டுங்கள்.

பதில்:

(மகரலக்னம் மிதுனராசி. லக்னத்தில் சூரி, புத, செவ். ஏழில் குரு. எட்டில் சனி, ராகு. பனிரெண்டில் சுக்கிரன்)

லக்னாதிபதி கெட்டால் ராசிப்படி பலன்கள் நடக்கும் என்ற விதிப்படி உங்களின் லக்னாதிபதி சனிபகவான் எட்டில் மறைந்து ராகுவுடன் நெருங்கி இணைந்து பலவீனமாகி ராசியின் ஜீவனாதிபதி குரு உச்சம் பெற்று ராசிக்கு பத்தாமிடத்தைப் பார்ப்பதால் ஆலயப்பணி செய்வது உங்களுக்கு பொருத்தமானது. சூரியனும், சனியும் பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் அது ஒன்று, எட்டுக்குடையவர்களின் பரிவர்த்தனை என்பதால் சுபபரிவர்த்தனை ஆகாது. தற்பொழுது புதன்தசை நடப்பதால் ஜோதிடத்தையும் துணைத்தொழிலாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டிலும் போதுமான வருமானம் இனிமேல் கிடைக்கும்.

பெ. இளங்கோவன், புதுச்சேரி

கேள்வி:

சுக்
செவ்
சூ,பு
கே
ராசி
குரு
சனி
ரா
சந்


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனது குலதெய்வம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்வாக்கு சொல்கிறேன். எனது அருள் வாக்கு நீடிக்குமா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? அடுத்து வரும் ஏழரைச்சனியில் சந்திரபுக்தி வருவதால் பாதிப்பு ஏற்படுமா? பரிகாரம் ஏதாவது உண்டா?

பதில்:

(திருக்கணிதப்படி கடகலக்னம். தனுசுராசி ஏழில் குரு, சனி. எட்டில் சூரி, புத, கேது. பத்தில் சுக். பனிரெண்டில் செவ்)

லக்னத்திற்கு வாக்குஸ்தானதிபதியான சூரியன் அந்த வீட்டைப் பார்த்து, ராசிக்கு இரண்டிற்குடைய சனி சூட்சுமவலுவுடன் குருவுடன் இணைந்து சுபத்துவமும் அடைந்து இரண்டு ஆன்மீகக்கிரகங்களான குருவும், சனியும் லக்னத்தைப் பார்ப்பதால் என் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மலையனூர்த் தாயின் அருள்வாக்கைச் சொல்கிறீர்கள். அது பலிக்கவும், நீடிக்கவும் செய்யும்.

திருக்கணிதப்படி தற்பொழுது ராகுதசையில் சர ராசியான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனின் புக்தி நடப்பதால் கிழக்கிலுள்ள நாடு ஒன்றுக்கு அடுத்த வருடம் செல்வீர்கள். சந்திரபுக்தி நடக்கும் பொழுது எனது மானசீக குருநாதர் ஜோதிட பானு அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியம் அய்யா அவர்கள் சொல்லும் பரிகாரமான திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.

பாபு , விழுப்புரம்.

கேள்வி :

சனி
குரு
கே
ராசி
செவ்
ரா
சந்
சூ,பு
சுக்


தங்களுக்குப் பலமுறை கடிதம் எழுதி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை ஆவலுடன் மாலைமலர் வாங்கியும் ஏமாற்றம்தான் கிடைக்கிறது. எத்தனையோ ஏமாற்றங்களில் இதுவும் இறைவன் செயல்தான். பிளஸ் 2 படிக்கும் மகன் வரும் மார்ச்மாதம் தேர்வு எழுதி கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அவனுக்கு எந்தத்துறையில் எதிர்காலம் இருக்கும்? மருத்துவம் படிக்கலாமா? அரசுக்கல்லூரியில் இடம் கிடைக்குமா? மெக்கானிக்கல், ஐ.டி., இ.சி.இ. இவற்றில் என்ன படிக்கலாம் என்பதை அருள் கூர்ந்து சொல்ல வேண்டுகிறேன்.

பதில்:

(திருக்கணிதப்படி ரிஷபலக்னம், தனுசுராசி. நான்கில் செவ், ராகு. ஐந்தில் சூரி, புதன், சுக். பத்தில் குரு, கேது. பனிரெண்டில் சனி.)

மேம்போக்காகப் பார்க்கையில் பத்தாமிடத்தைச் செவ்வாய் பார்த்து பத்தில் குருவும் இருப்பதால் மருத்துவம் படிக்கமுடியும் என்று தோன்றினாலும் லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி சுக்கிரதசை நடப்பதாலும் சுக்கிரனுக்கு எட்டில் சஷ்டாஷ்டகமாக அமர்ந்த நீசசனியின் புக்தி 2016 வரை நடக்க இருப்பதாலும் தற்போது மகனின் தனுசுராசிக்கு ஏழரைச்சனி நடப்பில் உள்ளதாலும் நினைத்த படிப்பு அமையத் தடை இருக்கிறது.

அதே நேரத்தில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் இணைந்துள்ளது நல்ல யோகம் என்பதாலும் நவாம்சத்தில் சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளதாலும் ஏழரைச்சனி முடிந்த பிறகு மகனுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜாதகப்படி மகனுக்கு புதன் வலுப்பெற்றுள்ளதால் ஐ.டி துறையே ஏற்றது.

மனைவியுடன் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ முடியுமா?

கே. மாதேஸ்வரன், சேலம்

கேள்வி :

சந்
ராசி
ரா
கே
செவ்
சூ
பு
சுக்
குரு
சனி
ரா
ராசி
பு
சந்,கே
குரு,சூ
சுக்
சனி
செவ்


மணமாகி மூன்று வருடங்களாகிறது. ஆறுமாதம் மட்டும்தான் சந்தோஷமாக இருந்தோம். மனைவி அடிக்கடி சண்டை செய்து கொண்டு தாய்வீட்டுக்குப் போய் விடுகிறாள். சமரசம் செய்து கூட்டி வந்தால் மறுபடியும் சண்டை. மீண்டும் சமரசம். இப்பொழுது தனிக்குடித்தனம் வந்தால்தான் வருவேன் என்கிறாள். எனக்குத் தந்தை கிடையாது தாய், மணமாகாத தங்கை உள்ளார்கள். இப்பொழுதுதான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர் பணியில் சேர்ந்துள்ளேன். வேலைக்கு வாங்கிய கடன், வீட்டுக்கடன் உள்ள நிலையில் தனிக்குடித்தனம் சென்று சமாளிக்க முடியாது. மனைவியுடன் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ முடியுமா? கடன் எப்பொழுது தீரும்? எனக்கு எப்பொழுது சந்தோஷம் என்பதைக் கூறி ஆசிர்வதியுங்கள்.

பதில்:

எக்காரணம் கொண்டும் வயதான தாயையும், மணமாகாத தங்கையையும் விட்டுவிட்டு தனிக்குடித்தனம் செல்ல வேண்டாம் இது போன்ற சூழ்நிலைகளில் கணவனின் கடமையை விட ஒரு அண்ணனின் கடமையே முன் நிற்க வேண்டும்.

தவிர உங்களின் மேஷராசிக்கு அஷ்டமச்சனியும், மனைவியின் விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியும் நடப்பதால் 2017 வரை உங்கள் மனைவியின் குணம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. அதைவிட முக்கியமாக உங்கள் மனைவிக்கு எட்டுக்குடைய சூரியனின் தசையும் ஏழரைச்சனியும் நடப்பதால் அவர் சொந்த புத்தியில் இல்லை. அதோடு மனைவிக்கு மகரலக்னமாகி லக்னாதிபதி சனி உச்சம் என்பதால் யார் சொன்னாலும் கேட்காத கடுமையான பிடிவாதக்காரியாக இருப்பார். இப்படிப்பட்ட குணமுடைய பெண் பட்டுத்தான் திருந்துவார்.

2020 வரை நடக்க இருக்கும் சூரியதசை மனைவிக்கு நன்மைகளைச் செய்யாது என்பதோடு அதனையடுத்து நடக்க உள்ள நீச சந்திரதசையும் யோகதசை அல்ல என்பதால் சிலவற்றை கர்மாப்படி நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். நல்லமுடிவு எடுக்கும் ஆற்றல் வரும். 2018ல் கடன் தொல்லை இருக்காது.

No comments :

Post a Comment