Friday, June 3, 2016

கன்னி: 2016 ஜூன் மாத பலன்கள்

கன்னி:

மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதி சுக்கிரனுடனும் புத பகவான் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும்.

பத்தாமிடம் எனப்படும் ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் நிலைத்தன்மை பெறாத இளைய பருவ கன்னிராசிக்காரர்கள் இந்தமாதம் நிரந்தரமான வேலை, தொழில் அமைப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வேலை விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு பயணம் செல்லுதலும், அதன் மூலம் நல்லவிதமான வாழ்க்கை மாற்றங்களும் நடக்கும். இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. குறைகள் எதுவும் இல்லாத மாதம் இது. எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்

4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். மாதத் தொடக்கத்தில் ஒன்றாம் தேதி இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து 3-ம் தேதி இரவு 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment