Friday, June 3, 2016

துலாம்: 2016 ஜூன் மாத பலன்கள்

துலாம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். அதேநேரத்தில் முப்பெரும் பாபர்களான சூரியனுடன் இணைந்து சனி, செவ்வாயின் பார்வையில் இருப்பதால் கைக்கெட்டியும், வாய்க்கு எட்டாத நிலைமைகள் இந்த மாதம் துலாம் ராசிக்கு இருக்கும்.

ஏழரைச்சனியின் முடிவில் நீங்கள் இருப்பதால் ஏற்கனவே கிடைத்த கடுமையான அனுபவங்களினால் சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றத்திலும், பக்கத்தில் வைத்திருந்தால் ஆபத்துத்தான் என்று தெரிந்தும் ஒருவரை விலக்கமுடியாத அவஸ்தையிலும் இருப்பீர்கள். இது போன்றவர்களுக்கு நல்லதீர்வுகள் சாதகமான முடிவுகள் ஜூன்மாதம் நடக்கும் என்பதால் துலாம்ராசிக்கு துன்பங்கள் தீரும் மாதமாக இந்த மாதம் இருக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இப்போது வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.

நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்தமாதம் நன்மைகள் உண்டு. இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் இருக்கும். விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லவைகளாக நடக்கும். சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.

1,2,7,8,9,14,15,16,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம்தேதி இரவு 11 மணி முதல் 5-ம்தேதி இரவு 11.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் உச்சமாக இருப்பதால் பெரிய தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

No comments :

Post a Comment