Friday, June 3, 2016

விருச்சிகம்: 2016 ஜூன் மாத பலன்கள்

விருச்சிகம்:

பனிரெண்டு ராசிகளிலும் விருச்சிகராசிக்குப் பலன் எழுதும்போது மட்டும் அதிகமான கவனமும் கூடுதலான கணிப்பும் தேவைப்படும் அளவிற்கு விருச்சிகத்தின் நிலைமை தற்போது இருக்கிறது. என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் 80 சதவிகிதம் பேர் விருச்சிகராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள் என்பதை எழுதிக்கொண்டும் டி.வி. நிகழ்ச்சிகளில் சொல்லிக் கொண்டும் இருக்கிறேன்.

ஒரு சிறப்புப்பலனாக அனுஷநட்சத்திரக்காரர்களுக்கு ஏற்கனவே நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகத் துவங்கி,,இதுவரை இருந்த துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சனிபகவான் தற்போது உங்கள் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் கடுமையான மனஉளைச்சல்களைத் தரக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதுவாக இருந்தாலும் நடக்கும் ஜென்மச்சனி அடுத்த வருடம் விலகியதும் உங்களிடமிருந்து தற்போது பறித்துக் கொண்டிருக்கும் நிம்மதி உட்பட அனைத்தையும் சனிபகவான் இரட்டிப்பாகத் தருவார் என்பதால் எவ்விதமான கலக்கத்திற்கும் இடம் கொடாமல் தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டிய மாதம் இது,

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

1,2,3,9,11,12,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 11.30 மணி முதல் 7-ம்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment