Friday, June 3, 2016

சிம்மம்: 2016 ஜூன் மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும் அவரையும் ராசியையும் சனிபகவான் பார்ப்பதும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் ஜூன் மாதம் பின்னடைவுகளைத் தரும் அமைப்பாக இருக்கும். அதேநேரத்தில் எதுவும் கைமீறிப் போகாத அளவுக்கு கட்டுக்குள்ளும் இருக்கும்.

ஒரு சிலருக்கு அலுவலகங்களில் வேலையை விட்டு விடும்படி நிர்ப்பந்தங்கள் இருக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருப்பது நல்லது. அதேநேரத்தில் நடப்பவைகள் அனைத்தும் உங்கள் எதிர்கால நன்மைக்காகவும் அர்த்தாஷ்டமச் சனி முடிந்த பிறகு உங்களை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நல்லவிதமாக நிலை கொள்ள வைக்கும் என்பதாலும் கவலைகளுக்கு இடமில்லை. வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

1,2,3,7,8,9,11,12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம்தேதி அதிகாலை 2 மணி முதல் 29-ம்தேதி அதிகாலை 6 மணி வரை சதந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.

No comments :

Post a Comment