Tuesday, 22 September 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 56 (22.9.2015)

எஸ். முருகதாஸ் பாண்டிச்சேரி .

கேள்வி :

கே
சூ
பு
செவ்
சுக்
ராசி
குரு
சந்
சனி
ரா


திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பின் பிறந்த ஆண்குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர் என் மகன் குடிப்பழக்கம் உள்ளவனாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறினார். இதைக்கேட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வயது நாற்பது ஆனாலும் எனக்குக் குடிப்பழக்கம் இல்லை. தயவு செய்து பதில் சொல்ல வேண்டுகிறேன்...

பதில்:

(கன்னிலக்னம் தனுசுராசி லக்னத்தில் ராகு மூன்றில் சனி எட்டில் சூரி ஒன்பதில் புத செவ் பத்தில் சுக் பதினொன்றில் குரு)

குடிப்பழக்கத்திற்கு காரணமான சனிபகவான் லக்னாதிபதி புதனைப் பார்ப்பதால் அந்த ஜோதிடர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால் லக்னாதிபதி புதன் தர்மகர்மாதிபதி யோகத்துடன் சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையைப் பெற்று, சனியை உச்சம் பெற்ற குருபகவான் பார்த்து புனிதப்படுத்தியதை அந்த ஜோதிடர் கணிக்கத் தவறி விட்டார்.

லக்னாதிபதி வலுப்பெற்று ராசிநாதன் உச்சமாகி ராசியைச் சுபர் பார்த்த உங்கள் மகன் குடிப்பழக்கத்தைக் கற்றுக்கொள்ளத் துளியும் வாய்ப்பில்லை. அடுத்தடுத்து யோகதசைகள் நடைபெற உள்ளதால் உங்கள் மகன் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக வருவான். கவலை வேண்டாம்.

ஒரு அரசியலாளன். சென்னை.

கேள்வி.

ஜெயிலுக்குப் போவேனா?

பதில்

போக மாட்டீர்கள்.

மு.பழனிவேல் மதுரை

கேள்வி

சனி
ரா
ராசி
கே
சுக்
சூ,பு
குரு
சந்
செவ்


இந்த நாற்பத்தி ஐந்து வயதுவரை வாழ்க்கையில் நல்லவனாகத்தான் வாழ்கிறேன். என்னிடம் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக போலீஸ், வக்கீல், கோர்ட், வறுமை, தோல்வி என்று ஏராளமான துன்பங்களைச் சந்தித்து வருகிறேன். துன்பம் போய் இன்பம் எப்போது?

பதில்

(விருச்சிக லக்னம் கன்னிராசி லக்னத்தில் சுக் நான்கில் ராகு ஆறில் சனி பதினொன்றில் செவ் பனிரெண்டில் சூரி புத குரு)

கடந்த 2001 முதல் நீசவக்ரச் சனியின் பார்வையைப் பெற்று பனிரெண்டில் மறைந்து நீச சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகி எட்டுக்குடைய புதனுடன் சேர்ந்து பகைவீட்டில் அமர்ந்து ஆறாம் வீட்டைப் பார்க்கும் குருதசை நடந்ததால் இத்தனை தொல்லை. அடுத்த வருடம் ஆரம்பிக்கப்போகும் சனிதசை குருவின் பார்வையில் இருப்பதால் இத்தனை இம்சைகள் இல்லாமல் முன்னேற்றமாக இருக்கும்.

ஆர். பாக்கியலட்சுமி பாண்டிச்சேரி

கேள்வி

கே
சனி
ராசி
ல,சுக்
சந்
குரு,சூ
பு,செவ்
ரா
சந்
குரு
ரா
ராசி
கே
சனி
சுக்
பு,சூ
செவ்


தங்களின் பதில்களை மாலைமலரில் தவறாமல் படித்து வருபவர்களில் நானும் ஒருத்தி. கணவரின் உதவியின்றி வீட்டுவேலை செய்து பிள்ளைகளை ஆளாக்கினேன். எம்எஸ்சி படித்த மகளை அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அண்ணனின் சம்மதத்தோடு முடிவு செய்து திருமணத்தை இரண்டு வருடம் தள்ளி வைத்தோம். மருமகன் வேலை செய்துகொண்டே வக்கீலுக்குப் படிக்கிறார். தகப்பனுக்கும் மகனுக்கும் உறவு சரியில்லாததால் அண்ணன் இப்போது திருமணத்திற்கு தடையாக இருக்கிறார். நாங்கள் விதைத்த ஆசையில் மகளும் மருமகனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இப்போது திடீரென என் மருமகனின் ஜாதகம் சரியில்லை. சர்ப்பதோஷம் உள்ளது. பொருத்தம் இல்லை என்று பிரச்னை கிளம்புகிறது. அய்யா... தங்கள் வாக்கை இறை வாக்காகக் கருதுகிறேன். மகளுக்கு எப்போது திருமணம் செய்விக்கலாம்? மருமகனின் வேலை எதிர்காலம் எப்போது முழுமைப்படும்? மகள் அவரிடம் நன்றாக வாழ்வாளா?

பதில்

(திருக்கணிதப்படி ஆணுக்கு கன்னி லக்னம் ரிஷபராசி லக்னத்தில் சனி ஏழில் குரு பத்தில் சூரி புத செவ் பதினொன்றில் சுக்... பெண்ணுக்கு மகரலக்னம் மகரராசி லக்னத்தில் சுக் இரண்டில் சனி மூன்றில் கேது பனிரெண்டில் குரு சூரி புத செவ்)

இருவருக்கும் பொருத்தம் நன்றாக உள்ளது. இருவருக்குமே சர்ப்பதோஷம் இல்லை. மகளுக்கு ஏழுக்குடையவன் ஏழைப் பார்த்து ஏழாமிடத்திற்குச் சுபச்சுக்கிர பார்வை. மருமகனுக்கு ஏழுக்குடையவன் உச்சமாகி ஏழாமிடத்தில் குருபகவான் அமர்வு.

மருமகனுக்கு வக்கீல் தொழிலுக்குரியவனும் வாக்குஸ்தானதிபதியுமான சனிபகவான் குருபார்வை பெற்று பத்தாமிடத்தைப் பார்த்து ராசிப்படி வாக்குஸ்தானாதிபதி புதன் உச்சமாகி வாக்குஸ்தானத்தில் குரு அமர்ந்து ராசிக்குப் பத்தாமிடத்தைப் பார்த்ததால் இன்னும் சில வருடங்களில் பிரபலமான வக்கீல். பிறகு நீதிபதியாகி நீதித்துறையில் உயர்ந்த இடம்.. நடக்கும் குருதசையும் அடுத்து நடக்க இருக்கும் குருபார்வை பெற்ற சனிதசையும் இதை உறுதி செய்கிறது.

மருமகனுக்கு தர்மகர்மாதிபதியோகமும் மகளுக்கு பரிபூரண விபரீத ராஜயோகமும் அமைந்துள்ளதால் இருவரும் வாழ்க்கையில் இணைந்து நல்ல நிலையில் இருப்பார்கள். மகளுக்கு ராகுதசையில் தாம்பத்ய சுகத்தைத் தரும் சுக்கிரபுக்தியும் மருமகனுக்கு குருதசையில் குடும்பாதிபதி சனிபுக்தியும் நடப்பதால் 2016 ல் திருமணம் நடக்கும்.

ப. தினகரன் சென்னை-85

கேள்வி

சந்
குரு
கே
சூ,பு
சுக்
ராசி
செவ்
சனி
ரா


குடும்ப சூழ்நிலை காரணமாக முப்பத்தி ஒன்பது வயதாகி கடந்த ஒன்றரை வருடங்களாக பெண் பார்த்து வருகிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. எப்போது திருமணம் நடக்கும்?

பதில்

(மிதுனலக்னம் மீனராசி இரண்டில் செவ் சனி பதினொன்றில் குரு கேது பனிரெண்டில் சூரி புத சுக்)

குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் நீச செவ்வாய் சனி அமர்ந்து, ராசிக்கு எட்டில் ராகு, சுக்கிரன் அஸ்தமனம் என கடுமையான தாரதோஷமும் ஐந்துக்குடைய சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு எட்டில் மறைவு, ஐந்தில் ராகு, புத்திரகாரகன் குருவிற்கு சனிபார்வை என புத்திர தோஷமும் உள்ளதால் முறையான பரிகாரங்களை செய்யும் பட்சத்தில் நடக்கும் கேது தசையில் சுக்கிரனின் வீட்டில் உள்ள ராகுவின் புக்தியில் அடுத்தவருடம் மே மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.

என். தியாகராஜன் கடம்பத்தூர்

கேள்வி.

பு
சூ,ல
சு,செவ்
ராசி
ரா
கே
சந்
சனி
குரு


திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. எப்போது குழந்தை பிறக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? அரசியலில் அதிக நாட்டம் உண்டு. வெற்றி கிடைக்குமா? வேலை இல்லை. எப்போது கிடைக்கும்? எப்போது நல்ல எதிர்காலம் உண்டாகும்?

பதில்

(மேஷலக்னம் துலாம்ராசி லக்னத்தில் சூரி சுக் செவ் நான்கில் ராகு ஆறில் குரு சனி பனிரெண்டில் புத)

குழந்தை பற்றிய கேள்விக்கு கணவன் மனைவி இருவரின் ஜாதகத்தை வைத்துத்தான் துல்லியமாகப் பதில் சொல்ல முடியும். புத்திரகாரகன் குருபகவான் ஆறில் சனியுடன் இணைந்து நீசபுதனின் பார்வை வாங்கி பலவீனமானது தாமத புத்திரபாக்கியத்தைக் குறிக்கும் அமைப்பு.

அதேநேரம் புத்திரஸ்தானாதிபதி சூரியன் உச்சமானதாலும் குரு பரிவர்த்தனையானதாலும் நிச்சயம் 2017க்கு மேல் புத்திரபாக்கியம் உண்டு. சூரியன் உச்சமாகி பவுர்ணமி யோகத்தில் பிறந்ததால் அரசியலில் வெற்றி கிடைக்கும். கோட்சாரத்தில் துலாம் ராசிக்கு ஆறுவருடங்களாக ஏழரைச்சனி நடப்பதாலும் ஜாதகப்படி நீசபுதனின் தசை நடப்பதாலும் எந்த நன்மைக்கும் தடை உண்டு. சனி முடிந்ததும் குழந்தையும் வேலையும் நல்ல எதிர்காலமும் கிடைக்கும்.

கே. சம்பத் விருத்தாசலம்

கேள்வி

சுக்
சூ
பு
ரா
ராசி
சந்
கே
குரு
செவ்
சனி


நான் மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் எனக்கு இன்னும் பெண் அமையவில்லை. நிரந்தர வேலையும் கிடைக்கவில்லை. திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் நடந்து விட்டது. சிலநேரம் துறவறம் செல்லலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறது. இந்த வருடத்திற்குள் திருமணம் நடக்குமா? அரசு வேலை கிடைக்குமா?

பதில்.

(விருச்சிகலக்னம் தனுசுராசி ஆறில் சுக் ஏழில் சூரி புத எட்டில் ராகு பதினொன்றில் செவ் சனி பனிரெண்டில் குரு)

மூல நட்சத்திரம் என்பதை விட செவ்வாய் சனி சேர்ந்திருப்பதாலும் ராசிக்கு ஏழிலும் லக்னத்திற்கு எட்டிலுமாய் ராகு இருப்பதாலும் குரு சுக்கிரன் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதாலும்தான் இன்னும் திருமணம் ஆகவில்லை. 2017 ம் வருடம் சந்திரதசை குரு புக்தியில் திருமணம் நடக்கும். ஏழரைச் சனி நடப்பதால் அரசுவேலை தாமதமாகும்.

பிறந்த ஜாதகமா? ருதுஜாதகமா? எது சரி?

ஆர். லதா கொன்னக்காடு

கேள்வி

எனக்கு பிறந்த ஜாதகம் எழுதவில்லை. ருது ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கலாமா? ஒரு சில ஜோதிடர்கள் பிறந்த ஜாதகம்தான் திருமணத்திற்கு அவசியம் எனவும் சிலர் ருது ஜாதகத்தை வைத்துத்தான் பொருத்தம் பார்க்க வேண்டும் எனவும் மாறுபட்ட கருத்துக்களைச் சொல்கின்றனர். ருதுஜாதகத்தை வைத்துப் பார்க்கலாம் என்றால் எனது ருது ஜாதகப்படி எப்போது திருமணம் ஆகும்? எந்தத் திசையில் வரன் கூடி வரும் என்று மாலைமலர் வாசகர்களுக்கு கலங்கரை விளக்கமாய் திகழும் குருஜி அய்யாவின் பாதம் பணிந்து கேட்கிறேன்...

பதில்

பிறந்த ஜாதகம் மட்டுமே ஒருவரின் துல்லியமான பலன்களைச் சொல்லும். படைப்பின் முதன்மைச் சக்தியான ஒரு பெண் தாயாவதற்குத் தகுதி பெறும் உன்னத நிகழ்வான பருவமடைதல் எனும் மாற்றம் நடைபெறும் அந்த நொடி முதல் ஒரு தாய் பிறக்கிறாள் என்பதன் அடிப்படையில் அந்தக் காலத்தில் ருதுஜாதகம் கணிக்கப்பட்டு பலன்களும் பார்க்கப்பட்டன.

அந்தக்காலத்தில் தாத்தா பாட்டி பெரியப்பா சித்தப்பா சித்தி அத்தைகள் இருந்த ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒரு குழந்தை பக்குவத்திரட்சியில் வரும்போதே வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் எப்போது பருவமடைவாள் என்று பெரியவர்கள் கண்கொத்திப் பாம்பாய் கவனிப்பார்கள்.

கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்து பெரியவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு நாம் அபார்ட்மென்ட் கூடுகளில் வசிக்கும் இந்தக்காலத்தில் தகப்பனும் தாயும் அரக்கப்பரக்க குழந்தையை ஸ்கூலில் விட்டு விட்டு ஆளுக்கொரு திசையாக வேலைக்குச் சென்று விட பள்ளியில் விளையாடும்போது பருவ மாற்றம் பெறும் குழந்தை பள்ளியிலும் அதை மறைத்து வீட்டிலும் அடுத்தநாள் சொல்லும் இந்தக் காலத்தில் ருதுவான நேரத்தை எப்படி துல்லியமாகக் கண்டு பிடிப்பீர்கள்? பிறந்தஜாதகம் மூலமே அனைத்தையும் துல்லியமாக கணிக்க முடியும்.

No comments :

Post a Comment