Tuesday, September 29, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 57 (29.9.2015)

கமலினி துரைரத்தினம் லண்டன்

கேள்வி

ஜோதிட உலகின் விடிவெள்ளியே... லண்டனில் இருந்தாலும் இணையம் வழியாக உங்களின் கேள்விபதில் ராசிபலன் மற்றும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரை படிப்பதோடு இங்கே ஒரு குழுவாக உங்களின் மதிப்பும் ஞானமும் உள்ள பதில்களை விவாதித்து தெளிவும் பெறுகிறோம். கணவரை இழந்த எனது மகளுக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும்?

பதில்

மகளுக்கு மிதுனலக்னம் தனுசுராசியாகி தற்போது இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்கதிபதி செவ்வாயின் தசை நடப்பதால் இதன் கடைசி புக்தியான குடும்பாதிபதி சந்திரனின் புக்தியில் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் ஏழுக்கதிபதி குருவின் அந்தரத்தில் 2016ம் வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடக்கும்.

குணசீலன் , ஆத்தூர்

கேள்வி :

சுக்
சூ
கே
பு
சந்
சனி
ராசி
செவ்
குரு
ரா
கே
சனி
ராசி
பு,சூ
சுக்
குரு
ரா
சந்
செவ்


வேற்றுமதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நானும் ஒரு வருடமாக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக என்னை விட்டு பிரிந்து போய் விட்டாள். சொந்த மாமனை திருமணம் செய்யப் போவதாக சொல்கிறாள். அவள்தான் முதலில் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி என்னுடன் பழகினாள். என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்ய நினைப்பது ஏன்? என்னைக் காதலிப்பதற்கு முன் அவள் நல்லவளாக இருந்தாளா? அல்லது வேறு யாரிடமாவது இப்படி இருந்தாளா? மாமனைத் திருமணம் செய்வாளா? அல்லது மறுபடி என்னிடம் வருவாளா? நான் தேடி சென்றாலும் அவள் விலகிச் செல்வது ஏன்? நான் அவளைத் திருமணம் செய்வேனா? அவளை முழுவதுமாக மறக்க என்ன வழி? இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளது. ஆனால் மனக்கஷ்டம் அதிகமாக உள்ளதால் இதை மட்டும் கேட்கிறேன். தயவு செய்து பதில் கூறுங்கள்.

பதில்:

எல்லாம் விதி. இதுபோன்ற ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருப்பதும் விதி.

உங்கள் இருவருக்கும் இருபது வயது. உனக்கு மிதுன லக்னமாகி குருதசையில் சுயபுக்தி நடக்கிறது. சுக்கிரன் உச்சமாகி சந்திரன் காமத்தைக் குறிக்கும் ஏழாமிடத்தோடு சம்பந்தப்பட்டதால் ஒரு கன்னிப் பெண்ணிடம் உடல்சுகம் கிடைக்க வேண்டும் என்பது அமைப்பு.

பெண்ணிற்கு மகரலக்னம் கன்னிராசியாகி ராகுதசையில் சுக்கிரபுக்தி நடப்பு. ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் கேது இருக்கிறார்.. ஆறு எட்டுக்குடைய சூரியன் புதனுடன் இணைந்து ஏழில் அமர்ந்த சுக்கிரன் தனது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் சுக்கிரபுக்தியில் அந்த பெண்ணின் மனதை ஆக்கிரமித்து தடுமாற வைத்தார்.

ஏழரைச்சனியில் ஒழுக்கம் கெட வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் தலையெழுத்து. சனி முடிந்ததும் உன் காதல் உண்மையல்ல என்று விழிப்பு வந்து விலகிப் போய் விட்டாள். நடந்தது அனைத்தும் பூர்வஜென்ம கர்மா எனும் சென்ற பிறவியின் தொடர்ச்சி. வேறு என்ன சொல்வது? நான் என்ன பதில் சொன்னாலும் வரும் டிசம்பர்மாதம் வரை இது போன்ற கேள்விகளை மனதில் வைத்து உழப்பிக் கொண்டுதான் இருப்பாய். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுக்க சரியாகி விடுவாய். மீண்டும் உன் வாழ்வில் அந்தப் பெண் இல்லை.

எஸ் .ஜெனார்த்தனன், சென்னை.

கேள்வி :

ரா
செவ்
குரு
ராசி
சந்
சூ
பு
சனி
சுக்
கே


ஜோதிடத்தின் ஞான உருவமேபி. படித்த நான் நிரந்தர வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். வேலை, திருமணம் நன்றாக அமையுமா? நல்ல மனைவி அமைவாளா? இது யோகஜாதகமா? இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. வாழ்க்கை நன்றாக  அமையுமா? தங்களின் மானசீக சீடனுக்குப் பதில் தர வேண்டுகிறேன்.

பதில்:

(மிதுனலக்னம், மகரராசி. ஆறில் சுக், சனி. ஏழில் சூரி, புதன். எட்டில் சந். ஒன்பதில் குரு. பத்தில் செவ், ராகு)

லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்து குருபகவானும் லக்னத்தைப் பார்த்த யோக ஜாதகம். பத்தில் செவ்வாய் திக்பலமாக இருப்பதால் நடைபெறும் ராகுதசை புதன் புக்தியில் வரும் நவம்பர் மாதத்திற்கு பின் ஏப்ரலுக்குள் வேலை அமையும். வேலைக்கு பிறகு சுக்கிரபுக்தியில் முப்பது வயதில் திருமணம் நடைபெறும். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்க உள்ளதால் பின்யோக ஜாதக அமைப்பைக் கொண்ட நீங்கள் முப்பத்தி ஐந்து வயதிற்குப் பிறகு வாழ்க்கையில் சகல பாக்கியங்களையும் பெற்று யோகவாழ்வு வாழ்வீர்கள்.

பி . ஆர் . தமயந்தி , துவாக்குடிமலை .

கேள்வி :

சந்
ரா
ராசி
சுக்
செவ்
குரு
கே
சூ
சனி
பு


குருஜி அவர்களுக்கு வணக்கம். என்னுடைய கடைசிப் பெண்ணிற்கு சரியாகப் பொருத்தம் பார்க்காமல் 2012- ல் திருமணம் செய்து நான்கு மாதங்களில் பிரச்னையாகி அழைத்து வந்து விட்டேன். பேச்சுவார்த்தையில் பலனில்லாமல் போலீசு கோர்ட்டு என அலைந்து விவாகரத்து பெற்று விட்டோம். அவளுக்கு மறுவிவாகம் நடக்குமா? எப்போது நடக்கும்?

பதில்:

(மீனலக்னம், மீனராசி. ஆறில் சுக், செவ். ஏழில் புத. எட்டில் சூரி, சனி. ஒன்பதில் குரு, கேது.)

லக்னமும், ராசியும் ஒன்றாகி எட்டில் உச்சசனி அமர்ந்து சுக்கிரனும், செவ்வாயும் ஒரேடிகிரியில் நெருங்கி இணைந்து பாதகாதிபதி புதன் தனித்து பாதகஸ்தானத்தில் உச்சம் பெற்ற அமைப்புள்ள இந்தப் பெண்ணிற்கு அஷ்டமச்சனி நடக்கும் போது திருமணம் செய்ததால் முதல் வாழ்க்கை சிக்கலாகிப் போனது. இரண்டாவது திருமணம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து நவம்பருக்குள் நடைபெறும். இரண்டாவது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எஸ் .கே.பி.கருப்பண்ணசாமி, கேசரிமங்களம்

கேள்வி :

சந்
ரா
ராசி
சூ
பு
குரு
சுக்
கே
செவ்
சனி,ல


பிறந்தது முதல் இன்பம், மகிழ்ச்சி என்ற வார்த்தை என் வாழ்க்கையில் இல்லவே இல்லை. உலகிலேயே துன்பம், துயரம், வேதனை, கஷ்டநஷ்டம், பொருள் இழப்பு, அவமானம், கெட்ட பெயர், விரையங்கள் என அனைத்தையும் சந்தித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். இங்குள்ள ஜோதிடர்கள் என் ஜாதகம் மிகவும் மோசமானது. கடைசிவரை துன்பத்தை மட்டுமே சந்திக்க வேண்டும். அனைத்துக் கிரகங்களும் மோசமாகவே உள்ளது. இவ்வளவு மோசமான ஒரு ஜாதகத்தை பார்த்ததே இல்லை என்றும், அகாலமரணம் அடைவீர்கள் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் கடந்த காலத்தில் நடந்தவைகளைப் பார்க்கும்போது அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. எனவே உண்மை நிலையை தாங்கள் சொல்ல வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

(துலாம் லக்னம், மேஷராசி. லக்னத்தில் சனி, செவ். மூன்றில் சுக், குரு. நான்கில் சூரி, புதன். எட்டில் ராகு.)

கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல ஜாதகப்படி மோசமாக எதுவும் வாழ்க்கையில் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் லக்னத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றுசேர்ந்து அதில் சனி உச்சமானதால் கடுகை பூசணிக்காயாக்கும் உங்கள் குணமும் ஊரோடு ஒத்துப் போகாமல் எதிலும் விதண்டாவாதமும், குற்றமும் காணும் உங்கள் குணமும் தெரிகிறது.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் சந்தோஷமான வாழ்க்கையே நம் அனைவருக்கும் பரம்பொருளால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் வாழும் விதத்தில்தான் எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு கெடுதலாகத் தெரியும் ஒன்று இன்னொருவருக்கு நல்லதாகப்படும். வாழ்வை மோசமாகவே பார்த்தால் அனைத்தும் மோசம்தான். ஏழ்மையிலும் கடுமையான சூழல்களிலும் நிதானத்தை தவறவிடாமல் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு கிடைத்ததை வைத்து முன்னேறிய எத்தனையோ பேர் உங்கள் கண் முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

லக்னத்தில் சனி, செவ்வாய் அமர்ந்து ராசியைப் பார்த்து ராசி, லக்னம் இரண்டும் பாபக்கிரகங்களின் பிடியில் அமைந்ததால் உங்களுடைய பிரச்னைகள் அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே காரணமாக இருப்பீர்கள். ஜாதகப்படி லக்ன சுபர்களை விட லக்னபாவிகள் அம்சத்தில் வலுத்ததால் இப்போது சில பிரச்னைகள் இருக்கும்.

ஆனால் மோசமான ஜாதகம் அகாலமரணம் என்பதெல்லாம் அதிகப்படியான வார்த்தைகள். என்னிடம் பதில் வாங்கவேண்டும் என்பதற்காக நீங்களே சேர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் அஷ்டமச்சனி முடிந்ததும் தீர்க்காயுளுடன் நன்றாக இருப்பீர்கள்.

குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியுமா?

அ. லலித்குமார் சென்னை

கேள்வி:

தவறாமல் ஞாயிறுதோறும் மாலைமலரில் உங்களை ராசிபலன் படிக்கிறேன். குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஸ்திரமான வேலை இல்லை. அம்மாதான் ஏதோ வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பா வேலைக்குச் செல்லவில்லை. கணவரை விட்டுப் பிரிந்த அக்காவும் குழந்தையுடன் எங்களுடன்தான் இருக்கிறாள். நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் நல்லவேலை கிடைக்கவில்லை. அரசுவேலை கிடைக்குமா? யாருடைய உதவியும் எங்களுக்கு இல்லை. கடவுளும் எங்களை வறுமையில் வாடவைத்து வேடிக்கை பார்க்கிறார். அடிக்கடி யாரோ என்னைக் கொல்வது போலத் தோன்றுகிறது. மிகவும் பயமாக உள்ளது. என் ஆயுள் எவ்வளவு? நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியுமா?

பதில்.

வெறும் மேஷராசி சிம்மலக்னம் என்பதை வைத்துக் கொண்டு நீ கேட்டிருக்கும் இத்தனை கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாதுதான். ஆனால் ஒன்று சொல்கிறேன். எப்போது குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதார நினைத்து உன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி இதுபோல கடிதம் எழுதினாயோ உன்னைப் போல ஒரு அக்கறையுள்ள துடிப்பான இளைஞனை பரம்பொருள் ஒருநாளும் கைவிட மாட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தியைப் பார்த்தால் ஆயிரம் வேலை உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நினைத்த வேலை கிடைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காதே. முதலில் கிடைக்கும் வேலையில் உன் முழுத்திறமையைக் காட்டி அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்தால் எங்கும் நீ கவனிக்கப்பட்டு உயர்த்தப்படுவாய்.

ஏழையாய் பிறப்பது குற்றமல்ல. ஏழையாய் இறப்பதே குற்றம் என்றொரு வாசகம் இருக்கிறது. சுற்றி உள்ள எதிலும் குறை கண்டு சோம்பலாகி விடாதே. வாழ்க்கையை ஜெயித்தவர்கள் அனைவரும் முதலில் கிடைத்த வேலையை பிடித்துக்கொண்டு அதில் ஆரம்பித்து முன்னேறியவர்கள்தான். நடிகர் கமலஹாசன் “பாத்ரூம் கழுவுபவனாக நீ இருந்தாலும் உலகிலேயே நீதான் சிறந்த பாத்ரூம் கழுவுபவன் என்று பெயர் எடுக்க வேண்டும்” என்று தனது தாய் அறிவுரை சொன்னதாக ஒருமுறை மேடையில் சொன்னார். இதுபோன்று ஒருதுறையில் முனைப்புடன் வேலைசெய்பவன் நிச்சயம் அதில் பெரியநிலைக்கு வந்தே தீருவான்.

உனது மேஷராசிக்கு இன்னும் இரண்டு வருடங்களில் நீ நன்றாக உயர்நிலைக்கு வந்தே ஆகவேண்டும் என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு அதில் உன் திறமையைக் காட்டு. மிகவும் உயர்ந்த நிலைக்கு கண்டிப்பாக வருவாய்.

No comments :

Post a Comment