Tuesday, September 15, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 55 (15.9.2015)

வி. மனோகரன், உறையூர்.

கேள்வி :

செவ்
கே
ராசி
சந்
ரா
குரு
சனி,சு
சூ
பு


தினமும் மனக்குழப்பத்தில் வாழ்க்கையை ஓட்டும் எனக்கு ஆயுள்பலம் எவ்வளவு? . டி. எம். மில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் எனக்கு சொந்த வேலை அமையுமா? பிறந்தது முதல் வாழ்க்கையில் போராட்டம்தான். குடிப்பழக்கம் வேறு உள்ளது. இதை நிறுத்த பரிகாரம் என்ன? ஆறில் குரு, சனி, சுக்கிரன், எட்டில் கேது, பனிரெண்டில் யோககாரகன் செவ்வாய் என அனைத்துக் கிரகங்களும் மறைவிடங்களில் உள்ளன. அடுத்து வரும் ஆறில் அமர்ந்துள்ள சனிதசை எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படி?

பதில்:

கடக லக்னம், சிம்ம ராசி. இரண்டில் ராகு. நான்கில் சூரி, புதன். ஆறில் சுக், குரு, சனி. பனிரெண்டில் செவ்.

லக்னாதிபதி சந்திரன் நான்கு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த தனாதிபதி நீசமாகி யோகாதிபதிகளான தர்மகர்மாதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் ஆறு, பனிரெண்டில் மறைந்த அமைப்புள்ள ஜாதகம்.

பிறந்ததிலிருந்து நீச சூரியதசை, அடுத்து நீசனின் வீட்டில் அமர்ந்த சந்திரதசை, அதன்பின் பனிரெண்டில் மறைந்து சனிபார்வை பெற்ற செவ்வாய்தசை அடுத்து நீசனின் வீட்டில் அமர்ந்த ராகுதசை, தற்போது ஆறுக்கதிபதியான சனியுடன் சேர்ந்த குருதசை என வாழ்நாள் முழுக்க யோகதசைகளே வராத அதிர்ஷ்டம் இல்லாத இந்த நிலைமை பூர்வ ஜென்ம கர்மவினையால் வந்ததுதான்.

லக்னாதிபதி கெட்டு லக்னத்தைச் சுபர் பார்க்கவில்லை என்றாலே மனதை கட்டுக்குள் வைக்க முடியாமல் கெட்ட பழக்கங்கள் இருக்கும். லக்னாதிபதியை வலுப்படுத்தி கொள்வதன் மூலம் கெட்டபழக்கங்களைக் கைவிட முடியும். சந்திரனுக்குடைய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும்.

அடுத்து வருகிற சனிதசை ஆறு, பனிரெண்டுக்குடையவர்கள் சம்பந்தம் பெற்ற பாபக்கிரகம் என்பதால் விபரீதராஜ யோகத்தை செய்யும். எனவே சனிதசை யோக தசைதான். ஆனால் அதுவும் 64 வயதிற்குப் பிறகு வருகிறது. என்ன பிரயோஜனம்? சொந்தவீடு வாய்ப்பு இல்லை. பங்கமடைந்த தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் கடைசி வரை ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று சாப்பாட்டுக் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். எட்டுக்குடையவன் எட்டைப் பார்த்ததால் தீர்க்காயுள்.

என். ரேவதி, சேலம் – 1

கேள்வி:


சந்
ராசி
ரா
கே
செவ்
சூ
ல,பு
சுக்
குரு
சனி
ரா
சந்
ராசி
செவ்
சூ
சுக்
குரு
கே
சனி
பு


என் தம்பிக்கு திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. குழந்தை இல்லை. இருவரின் ஜாதகம் அனுப்பியுள்ளேன் உங்கள் பதிலாவது காலதாமதம் இல்லாமல் வரட்டும். குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா?

பதில்:

கணவனுக்கு துலாம் லக்னம், மேஷராசியாகி, லக்னத்திற்கு ஐந்திற்குடைய புத்திர ஸ்தானாதிபதி சனிபகவானும் புத்திரக்காரகன் குருபகவானும் பனிரெண்டில் மறைந்து ராசிக்கு ஐந்திற்குடைய சூரியன் ராசிக்கு எட்டில் மறைந்தது கடுமையான புத்திரதோஷம்.

மனைவிக்கு கடகலக்னம், மிதுனராசியாகி லக்னத்திற்கு ஐந்திற்குடைய செவ்வாய் நீசமாகி புத்திரக்காரகன் குருபகவான் ராகு, கேதுக்களுடன் சம்பந்தப்பட்டு ராசிக்கு ஐந்தில் சனி அமர்ந்ததும் புத்திரதோஷம். கணவனுக்கு அஷ்டமச்சனி முடிந்த பிறகு 2018-ல் முறையான பரிகாரங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கும்.

டி. மணி, சங்ககிரி

கேள்வி:

ரா
செவ்
சூ
பு
ராசி
சனி
சுக்
சந்
குரு
கே


ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கு ஜோதிடம் உண்மைதான் என்பதை மிகத் துல்லியமாக புரியவைத்த குருஜி அவர்களுக்கு வணக்கம். சினிமாவில் முயன்று தோற்றுப் போய்விட்டாலும் மீண்டும் நம்மால் முடியும் என்று சதாகாலமும் சினிமா சிந்தனையுடனேயே வாழ்ந்து வருகிறேன். என்னுள் நடிப்பாற்றலும் இயக்கும் ஆற்றலும் ஒளிந்திருப்பதை நன்கு அறிவேன். சினிமாவில் சாதனை படைக்கும் காலம் எப்பொழுது? தோல்விக்கு காரணமான திக்குவாய் எப்பொழுது சரியாகும்? கடந்த ஐந்து வருடங்களாக நல்ல தூக்கமில்லை, நிம்மதி இன்றி தவிக்கிறேன். எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

சிம்மலக்னம், மீனராசி ஏழில் குரு, ஒன்பதில் சுக் பத்தில் சூரி, கேது பதினொன்றில் புத, சனி பனிரெண்டில் செவ்.

சூரக்கோட்டையில் பிறந்தவர்கள் அனைவரும் நடிகர்திலகமாகவும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாராகவும் ஆவதென்பது சிரமமான காரியம்தான். ஒரு துறையில் ஒருவரின் புகழும் உச்சநிலையும் அவரவரின் பூர்வ ஜென்ம கர்மவினையைப் பொறுத்தது.

உங்களுக்கு சுக்கிரதசை நடந்து கொண்டிருந்தாலும் மனைவிக்கும் இளைய மகனுக்கும் விருச்சிகராசியாகி மூத்தமகனுக்கு தனுசுராசியாகி குடும்பத்தில் அனைவருக்கும் ஏழரைச்சனி நடப்பதால் உங்கள் லட்சியங்களுக்கு முட்டுக்கட்டை இருக்கும். மேலும், நடக்கும் தசாநாதன் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசமானதும் உங்களின் லக்னத்தையும் ராசியையும் சனி பார்ப்பதும் லட்சியத்தை அடையத் தடை செய்யும்.

ஆனால் படைப்பின் விசித்திரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.

உங்கள் மூத்தமகனுக்கு சிம்மலக்னமாகி லக்னத்தை சூரியனும் புதனும் பத்தாமிடத்தில் திக்பலத்தோடு உள்ள செவ்வாயும் பார்ப்பதோடு லக்னாதிபதியை மூன்றில் அமர்ந்த குருபகவான் ஐந்தில் அமர்ந்த சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகி பார்ப்பது ராஜயோக அமைப்பு. மேலும் சினிமாவில் ஜெயிக்கத் துணையாக இருக்கும். ராகுதசை சரியான பருவத்தில் அவனுக்கு வருவதும் ஆச்சர்யமான விஷயம். பரம்பொருள் என்ன நினைத்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்?. நீங்கள் நினைப்பதை மகன் ரூபத்தில் சாதித்துக்கொள்ள முடியும்.

பா. மணிகண்டன், வலங்கைமான்

கேள்வி:

சூ
பு
சுக்
செவ்
சந்
ராசி
குரு
கே
சனி
ரா


தீராத வயிற்றுவலி ஏற்படுகிறது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும் காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயித்த திருமணமா?

பதில்:

விருச்சிக லக்னம் கும்பராசி மூன்றில் சனி, ராகு ஐந்தில் சூரி, ஆறில் புத, ஏழில் சுக், எட்டில் செவ், ஒன்பதில் குரு.

ஆறுக்குடைய செவ்வாயும் எட்டுக்குடைய புதனும் பரிவர்த்தனையானதால் அவரவர் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையாகி நோய் ஸ்தானாதிபதி வலுப்பெற்றார் என்ற அமைப்பில் தற்பொழுது சனிதசையில் புதன் புக்தி நடப்பதால் ஏதாவது ஒரு நோய் இருந்தே தீரும். அடுத்த வருடம் ஜூலை மாதம் நோய் தீரும். 2019 ல் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். நிச்சயித்த திருமணம்.

கே. ராஜா, நாகர்கோவில்

கேள்வி:

கே
செவ்
சனி
ராசி
சந்
சூ
சுக்,ல
ரா,குரு
பு


ஆசானுக்கு வணக்கம். மாலைமலரில் தொடர்ந்து கேள்வி பதில் படித்து வரும் எனக்கு உங்கள் பதில்கள் வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருகின்றது. என் மகனைப் பற்றிய உங்கள் பதில் எனக்கு வழிகாட்டியாக அமையும். பி.ஏ படித்த மகன் வக்கீலுக்குப் படிக்க வேண்டும் என விரும்புகிறான். வக்கீல் தொழில் அவனுக்கு சிறப்பாக அமையுமா? அல்லது அரசியல், சினிமாவில் வெற்றி அடைய முடியுமா?

பதில்:

துலாம் லக்னம் சிம்ம ராசி, லக்னத்தில் சுக், குரு, ராகு. ஐந்தில் சனி, ஒன்பதில் செவ், பதினொன்றில் சூரி, பனிரெண்டில் புதன்.

வக்கீல் தொழில் என்பது குற்றம் செய்த கட்சிக்காரனை அவன் தவறு செய்யவில்லை என்று பொய் சொல்லிக் காப்பாற்றுவது. இதற்குப் பொய் சொல்ல வைக்கும் கிரகமான சனிபகவான் தொழில்ஸ்தானமான பத்தாமிடத்தோடும் வாக்குஸ்தானமான இரண்டாமிடத்தோடும் சுபத்துவமாகி தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் மகனுக்கு சனிபகவான் ஆட்சிநிலையில் ஐந்தில் குரு பார்வையுடன் சுபத்துவமாகி தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனையும் வாக்கு ஸ்தானத்தையும் பார்த்து ஜாதகமும் யோக அமைப்பில் இருப்பதால் பிரபலமான வக்கீலாக வருவார் என்பதோடு சூரியனும் சிம்மத்தில் வலுப்பெற்று திக்பலத்திற்கு அருகில் இருப்பதால் பிற்காலத்தில் தேர்ந்த அரசியல்வாதியாகவும் வருவார்.

கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?

எஸ். சத்தியபாமா, கொரட்டூர்.

கேள்வி:


ரா
ராசி
சுக்
செவ்
குரு,கே
சந்
சனி
சூ
பு
செவ்
குரு
ரா
ராசி
கே
சனி
சூ,பு
சந்
சுக்


எங்கள் திருமணத்தின் பொழுது கணவருக்கு எனக்கும் ஜாதகம் பொருந்தவில்லை. மீறி திருமணம் செய்தால் கணவரின் உயிருக்கு ஆபத்து என்றார்கள். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. ஒரு மகன் இருக்கிறான். சமீபகாலமாக என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏதேனும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எனவே எங்களது ஜாதகத்தை பார்த்து கணவரின் ஆயுள் எப்படி? எங்கள் எதிர்காலம் எவ்வாறு அமையும்? உண்மையில் எனக்கும் கணவருக்கும் எத்தனை பொருத்தம் உள்ளது என்பதற்கு பதில் அளித்து என் பயத்தைப் போக்குங்கள் குருஜி.

பதில்:

கணவனுக்கு கும்பலக்னம், விருச்சிகராசி, ஏழில் சுக், செவ், எட்டில் சூரி, புத, ஒன்பதில் சனி, பத்தில் குரு, கேது.

மனைவிக்கு கடகலக்னம், துலாம் ராசி, மூன்றில் சுக், நான்கில் சூரி, புத, ஆறில் சனி, எட்டில் ராகு, ஒன்பதில் செவ், பதினொன்றில் குரு.

திருமணத்திற்கு பத்துப்பொருத்தம் பார்ப்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதையும் தாண்டி ஜாதக அனுகூலப் பொருத்தம் பார்ப்பதே முக்கியமானது. பத்துப் பொருத்தங்களைப் பார்ப்பதற்கு ஜோதிடர் தேவையில்லை. அதற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி எனும் பத்துரூபாய் புத்தகம் போதும் என்று அடிக்கடி எழுதி வருகிறேன்.

பொருத்தங்கள் இல்லை என்றாலும் ஜாதகப்படி இருவரின் குணநலன்கள் ஒத்துப் போனாலும், இருவரும் தீர்க்காயுளுடன் யோகமாக வாழ்வார்கள் எனும் அமைப்பு இருந்தாலும் இருவருக்கும் திருமணம் செய்ய நான் பரிந்துரைக்கவே செய்கிறேன். தமிழ்நாட்டில் மட்டுமே ரஜ்ஜுப்பொருத்தம் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ரஜ்ஜு இல்லையென்றால் கூட சில நிலைகளில் இருவரையும் இணைக்கலாம். பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட எத்தனையோ தம்பதிகள் நீடித்த ஆயுளுடன் சகல பாக்கியங்களுடன் நன்றாகவே வாழ்கிறார்கள்.

உன் கணவனுக்கு கும்பலக்னமாகி, லக்னாதிபதியும் ஆயுள்காரகனுமாகிய சனி பகவான் எவ்வித பங்கமும் இன்றி உச்சம் பெற்று எட்டுக்குடைய ஆயுள் ஸ்தானாதிபதி புதபகவானும் உச்சமாகி லக்னத்தைச் சுக்கிரன் பார்ப்பதால் தொண்ணுறு வயதை நெருங்கி தீர்க்காயுள் வாழ்வார். உன் மகனின் ஜாதகத்தில் குருபகவான் ஒன்பதுக்குடையவனாகி தந்தைஸ்தானமான ஒன்பதாம் வீட்டை பார்ப்பதும் இதை உறுதி செய்கிறது.


உன் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டில் ராகு இருந்தாலும் அவரை எட்டுக்குடைய சனி பார்ப்பதும் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு இருப்பதும் லக்னத்திற்கு ஏழாமிடத்தைக் குரு பார்ப்பதும் உன் மாங்கல்ய பலத்தைத் தெளிவாக்குகின்றன. உனக்கும் கணவனுக்கும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் இது போல தேவையற்ற உணர்வுகள் உன்னைப் பயமுறுத்துகிறது.


உன் கணவனுக்கு தற்பொழுது நடக்கும் சுக்கிரதசை யோகதசை என்றாலும் அடுத்து வரும் சந்திரபுக்தி 2017 ஜூலை மாதம் முடிந்தவுடன் யோகம் செயல்பட ஆரம்பிக்கும். அதே நேரத்தில் உனக்கு தற்பொழுது நடக்கும் எட்டுக்குடைய சனிதசை முடிவடைந்தவுடன் உனக்கும் யோகம் ஆரம்பிக்கவுள்ளது. எனவே, 2018 முதல் சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு உண்டு.

உனக்கும் உன் கணவனுக்கும் எத்தனை பொருத்தம் உள்ளது என்பதை உனக்குப் பேரன் பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

No comments :

Post a Comment