Tuesday, September 8, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 54 (8.9.2015)

எஸ். சரவணன், விருதுநகர்.

கேள்வி :

சுக்
குரு
கே
சந்
ராசி
சனி
சூ
செவ்
பு
ரா


19 ஆண்டுகளாக சனிதசையில் படாதபாடு பட்டு விட்டேன். முதல் திருமணம் விவாகரத்தாகி தற்போது இரண்டாவது திருமணம் மூலம் பெண் குழந்தை உள்ளது. ஆண்வாரிசு கிடைக்குமா? நிரந்தரமான வேலை இல்லை. அரசுவேலை கிடைக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். மூன்றுமுறை அரசுத்தேர்வு எழுதியும் பயனில்லை. மேலும் சில ஜோதிடர்கள் வெளிநாடு செல்வீர்கள் என்று மூன்றுவருடங்களாக சொல்லி வருகிறார்கள். போகமுடியவில்லை. உண்மையிலேயே எனது எதிர்காலம் எப்படித்தான் உள்ளது? ஆண்வாரிசு எந்த வயதில் கிடைக்கும்? வாழ்க்கை செட்டிலாகுமா? நான்குபேர் போற்றும் அளவிற்கு வாழ்வேனா?

பதில்:

(சிம்மலக்னம், மிதுனராசி, ஐந்தில் புத, ஆறில் சூரி, செவ். எட்டில் சுக். ஒன்பதில் குரு, கேது. பனிரெண்டில் சனி.)

சிம்மலக்னத்திற்கு சனி ஆறுக்குடையவனாவதால் நன்மைகளைச் செய்யமாட்டார். அதிலும் அவர் பனிரெண்டில் மறைந்து ஆறாமிடத்தையும் இரண்டாம் இடத்தையும் பார்த்ததால் குடும்பத்தில் பிரிவு, குழப்பம், கடன் தொல்லை, பொருளாதார சிக்கல் போன்றவைகளைத்தான் சனிதசையில் கொடுத்திருப்பார்.

ஜாதகப்படி ஆண்வாரிசு உண்டு. எப்போது என்பது மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தால்தான் சொல்ல முடியும். சூரியன் ஆறில் மறைந்து சனிபார்வை பெற்றதால் அரசு வேலைக்கு இடமில்லை. ஜீவனாதிபதி வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாமிடத்தில் உச்சமாகி எட்டுக்குடையவனின் பார்வைபெற்ற புதன்தசை நடப்பதால் 2016 மேமாதம் ஆரம்பிக்க இருக்கும் கேது புக்தியில் வெளிநாட்டில் இருப்பீர்கள். புதன்தசை லக்னாதிபதி சூரியனுக்கு நண்பர் என்பதாலும் ராசிநாதன் என்பதாலும் நல்ல பலன்களைத் தரும். லக்னாதிபதி சூரியன் மறைவு பெற்று பகை வீட்டில் இருப்பதால் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

ஆர். மல்லிகா, கோயம்புத்தூர்.

கேள்வி :

கே
குரு
ராசி
செவ்
சனி
பு
சந்,சூ
சுக்
ரா


இந்த முறையாவது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். மகனுக்கு திருமணமாகி ஏழு வருடமாகிறது. ஆறுவயதில் மகன் இருக்கிறான். மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. இவன் தரமாட்டேன் என்கிறான். பிரிந்தவர்கள் சேர்வார்களா? அல்லது மகனுக்கு இரண்டாம் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா? இவன் பிரச்சினையால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன்.

பதில்:

(சிம்ம லக்னம், துலாம் ராசி. இரண்டில் ராகு. மூன்றில் சூரி, சுக். நான்கில் புதன். பதினொன்றில் குரு. பனிரெண்டில் செவ்).

இதுபோன்ற வாழ்க்கைப் பிரச்சினைக் கேள்விகளுக்கு மனைவி, மகன் ஜாதகமும் இருந்தால்தான் துல்லியமான பதில் சொல்ல முடியும். குறிப்பாக உங்கள் பேரனுக்கு தகப்பனுடன் இருக்கும் யோகம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் உங்கள் மகனுக்கு ஆறு வருடமாக ஏழரைச்சனி நடக்கிறது. மருமகள், பேரன் ராசி என்னவென்று தெரியவில்லை. அவர்களுக்கும் சனி இருந்தால் பிரிவுதான் நடக்கும்.

மகனுக்கு ஏழாமிடத்தைச் சனி பார்ப்பதும் ராசிக்கு ஏழுக்கதிபதி நீசம் பெற்றதும் இரண்டில் ராகு இருப்பதும் தாரதோஷ அமைப்பு என்பதால் இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. நடைபெறுவது சனிதசை என்பதால் 2016-க்கு மேல் பிரிவு உண்டாகும். 2018-ல் சனிதசை, புதன்புக்தியில் மகனுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும்.

ஜெயராமன், தாத்தையங்கார்பேட்டை

கேள்வி :

கே
ராசி
சூ
குரு
சனி
சந்,பு
சுக்,செ
ரா


67 வயதாகும் நான் 3 பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்திருக்கிறேன். மூத்த பெண்ணிற்கு திருமணம் செய்ய விரும்புகிறேன். வரன் சரியாக அமையவில்லை. உறவினர்களால் அவமானப்படும் நிலையில் இருக்கிறேன். மகளின் திருமணம் எப்போது நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பதில்:

(ரிஷப லக்னம், சிம்ம ராசி. மூன்றில் சூரி, குரு. நான்கில் புதன், சுக், செவ். எட்டில் ராகு. ஒன்பதில் சனி)

மகளுக்கு சந்திர தசையில் குடும்பாதிபதி புதனின் புக்தி நடப்பதால் வரும் தை மாதத்திற்கு பிறகு சித்திரைக்குள் திருமணம் நடக்கும் என்பதால் தீவிரமான முயற்சிகளை செய்யுங்கள்..

எஸ். பாலகணபதி, கீரனூர்.

கேள்வி :

செவ்
கே
சந்
ராசி
சனி
ரா
பு
சுக்
சூ
குரு


காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது தந்தை இறந்து விட்டார். அப்பாவின் தொழிலை ஒருவரிடம் நம்பி ஒப்படைத்ததும் அவர் எங்களை ஏமாற்றி விட்டார். சூழ்நிலை காரணமாக படிப்பை முடித்து விட்டு அப்பாவின் தொழிலைப் பார்த்து வருகிறேன். ஆனால் எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் இல்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலைக்குப் போக ஆசைப்படுகிறேன். நான் இப்பொழுது என்ன செய்ய?. அப்பா தொழிலை விட்டு வேலை தேடப் போகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? ஒரு யோசனை கூறுங்கள்.

பதில்

(மகர லக்னம் கும்பராசி லக்னத்தில் சனி ஐந்தில் செவ் கேது ஒன்பதில் சூரி குரு பத்தில் புத சுக்)

விரும்பிய துறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே வெற்றியாளன் ஆகிறான். துளியும் விருப்பம் இல்லாத தந்தையின் தொழிலை நீ செய்ய வேண்டாம். லக்னாதிபதி வக்ரச்சனி லக்னத்தில் இருந்து செவ்வாய் பார்வை பெற்றதால் கோபமும் அவசரமும் கொண்ட பிடிவாதக்காரன் நீ. அதேநேரத்தில் சனி சூட்சுமவலுவும் குருபார்வையும் பெற்றதால் அதிர்ஷ்டக்காரன்.

ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதாலும் அடுத்து புதன்தசை சுக்கிரதசை நடக்க உள்ளதாலும் மிகவும் பிரமாதமாக வருவாய். வாழ்க்கையில் ஒரு குறையும் இன்றி மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பாய். தற்போது சனிதசையில் பனிரெண்டில் இருக்கும் ராகுபுக்தி நடப்பதால் வெளிமாநிலம் வெளிநாடு தொடர்பான வேலை கிடைக்கும். அதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். வேலையும் உடனே கிடைக்கும். பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் உன் வாழ்க்கை அமையும்.

மு.கோவிந்தசாமி வேலூர்

கேள்வி


சந்
குரு
ராசி
கே
சுக்
ரா
பு
சனி
சூ
செவ்


தொண்ணூறு வயதாகும் எனக்கு பேத்தியின் திருமணம் பார்க்க ஆசையென்று ஜாதகம் அனுப்பி செவ்வாய்தோறும் பதிலுக்கு காத்திருந்ததுதான் மிச்சம். அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமா அசலா? எந்த திசையில்? என்ன உத்தியோகம்? அரசு வேலையா தனியார் கம்பெனியா? வரன் எப்படிப்பட்டவன்? குடும்பம் எப்படி? வரன் தானாக அமையுமா? தேடிச்செல்ல வேண்டுமா? என்பதைக் கூறி படாதபாடு பட்டுத் தவிக்கும் இந்த முதியவனுக்கு வழி காட்ட வேண்டுகிறேன்....

பதில்

வயதானவர்கள் சிலருக்கு முன்னுரிமை கொடுத்து பதில் தந்ததும் எல்லோரும் அதேபாணியில் கேள்விகளை அனுப்ப ஆரம்பித்து விட்டீர்கள். வரும் கேள்விகள் பலவற்றை அனுப்புவது நிஜமாகவே தாத்தாக்கள்தானா என்று எனக்கு சந்தேகம் வந்து விட்டது.

வேணிப்பிரியாவிற்கு மிதுனலக்னம் ரிஷபராசியாகி லக்னத்தில் குருவும் ஏழில் புதனும் பரிவர்த்தனையான யோகஜாதகம். நல்லகுணங்கள் கொண்ட புத்திசாலியான பெண். ஆனால் ராசிக்கு ஏழில் சூரியன் செவ்வாய். எட்டில் சனி என்பதோடு லக்னத்திற்கு ஏழில் சனி என்ற அமைப்பும் சுக்கிரன் எட்டில் ராகுவுடன் இணைந்ததும் கடுமையான தாரதோஷ அமைப்புக்கள்.

குடும்ப ஸ்தானத்தில் ராகுகேதுக்கள் சம்பந்தப்பட்டு குடும்பாதிபதி விரய ஸ்தானத்தில் உள்ளதால் தாமத திருமணமே இந்த பெண்ணிற்கு நல்லது. இன்னும் இரண்டு வருடம் கழித்து இருபத்தியெட்டு வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கும். சரியான பருவத்தில் திருமண காலத்தில் அவளின் ரிஷபராசிக்கு அஷ்டமச்சனி நடக்கும் என்பதால் பொருத்தம் பார்ப்பதில் அதிக கவனம் தேவை. அந்த நேரத்தில் ஏழரைச் சனி அஷ்டமச்சனி நடக்கும் வரனைச் சேர்க்க வேண்டாம்.

தாமத திருமணம் என்றாலும் திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும். அந்நிய வரன்தான். பிறந்த இடத்திலிருந்து வடக்கு வடகிழக்குத் திசையில் வரன் அமையும். தனியார் துறையில் நல்ல வரனாக இருப்பார். தேடித்தான் செல்ல வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் ஒருவரை நம்பியே வாழ வேண்டுமா?

ஒரு வாசகர், சேலம்.

கேள்வி :

குரு
ரா
சந்,சூ,பு
சனி,சுக்
ராசி
செவ்
கே


ஜோதிடமுனிவருக்கு வணக்கம். பள்ளிப்படிப்பு சரியாக ஏறாமல் பிளஸ்டூ இரண்டுமுறை பெயிலாகி பிறகு ஓராண்டு பார்மஸி படிப்பை ஐந்தாண்டு படித்து பெற்றோருக்குச் சொந்தமான இடத்தில் தாயார் பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறேன். தாய் தந்தை துணையாக இருக்கிறார்கள். திருமணமாகி மகன், மகள் உள்ளனர். என் பெற்றோருக்கு பிறகு என் நிலைமை எவ்வாறு இருக்கும்? என் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் ஐந்து கிரகங்கள் மறைந்துள்ளதால் வாழ்நாள் முழுவதும் ஒருவரை நம்பியே வாழ வேண்டுமா? என் இறப்பு எப்பொழுது என்பதைத் தெரிவிக்கவும்.

பதில்

(கடகலக்னம் கும்பராசி இரண்டில் செவ் ஐந்தில் கேது எட்டில் சூரி புத சுக் சனி பத்தில் குரு)

லக்னாதிபதி சந்திரன் எட்டில் மறைந்து அமாவாசை யோகத்தில் ஒளியிழந்து புனர்பூயோகத்தில் அஷ்டமாதிபதி சனியுடனும் இணைந்து வாழ்நாள் முழுவதும் யாராவது ஒருவர் பின்னால் இருந்து ஸ்க்ரூ கொடுத்து இயக்கிக்கொண்டே இருக்க வேண்டிய தன்னம்பிக்கை இழந்த அமைப்புள்ள ஜாதகம். அதேநேரம் குருபார்வை பெற்ற ராஜயோகாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்த கிரகங்களைப் பார்த்தது மிகப் பெரிய பலம். லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர்பார்வை இல்லாதது பலவீனம்.

லக்னம் ராசி இரண்டிற்கும் பத்தாம் வீடு செவ்வாயின் வீடாகி லக்னத்திற்கு பத்தில் குரு அமர்ந்து ராசிக்குப் பத்தில் கேது இருந்து ராசிக்கு பத்தை செவ்வாய் பார்த்ததால் மருந்துக்கடை வைத்திருக்கிறீர்கள். லக்னாதிபதி சந்திரன் வலுவாக இருந்திருந்தால் பெரிய மருத்துவராகி கிளினிக் வைத்திருப்பீர்கள்.

லக்னாதிபதி பலமாக இல்லாததால் ஐம்பது வயதாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனபிறகும் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்கிறீர்கள். சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். நீங்களே உங்களைக் கவனித்துக் கொள்வீர்கள்.

மனைவிக்கும் கடக லக்னமாகி லக்னாதிபதி சந்திரன் குருபார்வையில் இருந்து செவ்வாய் உச்சமாகி லக்னத்தைப் பார்ப்பதால் உங்கள் பெற்றோருக்குப் பிறகு மனைவி அனைத்தையும் வழி நடத்துவார். மனைவியின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றதும் இதை நிரூபிக்கிறது. மனைவிக்கு ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும்.

எதையும் நல்லதாக எதிலும் பாசிடிவைப் பார்க்கும் எண்ணத்தையும் செயலையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இதுபோல பெற்றோரும் மனைவியும் மருந்துக்கடையும் இல்லாமல் ரோட்டில் சுற்றும் ஏராளமானவர்கள் உங்கள் கடைக்கு வெளியில் இருக்கிறார்கள். அஷ்டமாதிபதி சனி ஆட்சி பெற்றதால் நீண்ட ஆயுள் வாழுவீர்கள். இறப்பு எப்போது என்று இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

No comments :

Post a Comment