கேள்வி:
சூ,பு
சுக்,கே
|
ல,குரு
சனி
|
||
இராசி
|
|||
செவ்
|
சந்
|
||
ரா
|
74 வயதான நான் பிறந்தது முதல் இன்றுவரை எவ்வித கஷ்டமும் இல்லாமல் வாழ்கிறேன். சுமார் நாற்பது வருடத்திற்கு முன் ஒரு பிரபல ஜோதிடர் என்னுடைய ஜாதகத்தை
துரதிர்ஷ்ட ஜாதகம் என்று சொன்னார். இடையில் சில விபத்துக்களில் தப்பித்து உயிர் பிழைத்துள்ளேன். மற்றபடி இப்போதும் நல்ல வருமானம், நல்ல உடல்நிலை. மீதியுள்ள
ஆயுளுக்கும் இதே நிலை தொடருமா? என்னுடைய ஆயுள் எவ்வளவு? குருஜியிடம் தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன்.
பதில்:
மேஷலக்னம், சிம்மராசி, லக்னத்தில் குரு, சனி. ஆறில் ராகு, பத்தில் செவ்வாய். பனிரெண்டில் சூரியன், புதன், சுக்கிரன். (8.4.1941, 7.44 காலை, ராசிபுரம்)
அனைத்தையும் அருளிய பரம்பொருளுக்கு நன்றி செலுத்துங்கள். லக்னாதிபதி செவ்வாய் உச்சமாகி என்னுடைய சூட்சுமவலுத் தியரிப்படி சந்திரனாலும், சனியாலும் சூட்சும
வலுப்பெற்ற யோகஜாதகம். அதேபோல லக்னத்தில் நீசமாக இருக்கும் சனியும் சூட்சுமவலு அடைந்தார். செவ்வாயே எட்டுக்குடையவனுமாகி உச்சம் பெற்றதாலும் ஆயுள்காரகன் சனி
அம்சத்தில் உச்சம் பெற்றதாலும் தீர்க்காயுள்.
இன்னும் நீண்டகாலம் ஆரோக்கியத்துடனும். நிம்மதியுடனும் லக்னத்தில் உள்ள குரு,சனி இணைவால் ஆன்மிக உணர்வுடன் இறைபணிக்காக வாழப்போகும் உங்களுக்கு அந்திம காலத்தை
இந்த எளிய ஜோதிடன் சொல்வதை விட உரிய நேரத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளே புலப்படுத்துவார்.
செ. பிரசாந்த், திருநெல்வேலி.
கேள்வி:
கே
|
|||
சூ,பு
|
இராசி
|
||
சுக்
செ,சனி
|
குரு
|
||
ரா
|
சந்
|
ல
|
23 வயதாகிறது. இதுவரை அனுபவிக்காத துன்பங்களே இல்லை. நல்ல மதிப்பெண்களுடன் டிப்ளோமோ படித்துள்ளேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. எதிர்காலத்தை நினைத்தால்
பயமாக இருக்கிறது. எப்பொழுது நல்லவழி பிறக்கும்? வேலை, திருமணம் எப்பொழுது?
பதில்:
கன்னிலக்னம், துலாம்ராசி, நான்கில் ராகு, ஐந்தில் சுக்கிரன், செவ்வாய், சனி, ஆறில் சூரியன், புதன், பனிரெண்டில் குரு. (23.2.1992, 7.55, இரவு, நெல்லை)
இந்த வயதிற்குள் அப்படி என்னப்பா பெரிய சோதனைகளை அனுபவித்துவிட்டாய்? ஜாதகத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே. எல்லோரும் கேட்கிறார்களே என்று நீயும்
கேட்கிறாய் போலத் தெரிகிறது. வாழ்க்கையின் முதல்படியிலேயே நீ இன்னும் கால் வைக்கவில்லை. அதற்குள் துன்பங்களைப் பற்றிப் பேசாதே. நல்லமுறையில் அனைத்தையும்
அனுபவிக்கப் பிறந்தவன் நீ. உனது துலாம்ராசிக்கு ஏழரைச்சனி முடிந்ததும் நீ கேட்பது எல்லாம் கிடைக்கும். கவலைப்படாதே.
குருமங்கள யோகம் ஏன் வேலை செய்யவில்லை?
ஆர். ரவிச்சந்திரன், சென்னை - 92.
கேள்வி:
சுக்
|
செவ்
|
||
பு
கே
|
இராசி
|
||
சூ,சனி
|
ரா
|
||
குரு
|
ல
|
சந்
|
என் ஜாதகத்தை பார்ப்போர்கள் எல்லோரும் குருமங்களயோகம் உள்ளது என்று புகழ்கிறார்கள் ஆனால் இன்றளவும் என்னால் ஒரு பிடிமண் கூட சொந்தமாக வாங்க முடியவில்லை.
தொழிலும் சுமார்தான் என்ன காரணம்? இப்படியே தொடருமா?
பதில்:
விருச்சிகலக்னம், கன்னிராசி, இரண்டில் குரு, மூன்றில் சனி, நான்கில் புதன், கேது, ஐந்தில் சுக்கிரன், எட்டில் செவ்வாய். (6.2.1961, 2.00 இரவு, காரக்பூர், மே.வ)
எந்த ஒரு யோகமும் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்தால் வேலை செய்யாது. அதேபோல லக்னாதிபதி வலுவிழந்தாலும் யோகத்தை அனுபவிக்க முடியாது. உங்களுக்கு குருமங்கள
யோகத்தைத் தந்த செவ்வாய் லக்னாதிபதியாகி எட்டில் மறைந்து வக்ரம் பெற்று சுபத்துவம் பெறாத ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்ததால் யோகம் வேலை
செய்யவில்லை.
பத்தாம் வீட்டில் ராகு அமர்ந்து பத்துக்குடையவன் சனியுடன் இணைந்து, பத்தாம் வீட்டை எட்டுக்குடையவன் பார்த்து ராசிக்கு பத்தில் செவ்வாயும் அமர்ந்ததால் உங்களால்
தொழிலில் பிரகாசிக்க முடியவில்லை. அதே நேரத்தில் லக்னத்திற்கு பத்தையும், ராசிக்கு பத்தையும் குரு பார்த்ததால் தொழில் என்று ஒன்று அமைந்து ஏதோ
ஓடிக்கொண்டிருக்கும்.
சுதாகர், கீழமணக்குடி.
கேள்வி:
சூ,சந்
செவ்,பு
|
சுக்
|
ரா
|
|
இராசி
|
|||
ல
|
|||
கே
|
குரு
|
சனி
|
எனக்கும், எனது வருங்கால மனைவிக்கும் பிரச்னை அடிக்கடி வருகிறது. எங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும்? எனது குடும்பத்துடன் என் வருங்கால மனைவி எப்படி
இருப்பார்?
பதில்:
உங்களுக்கு சிம்மலக்னமாகி, பெண்ணிற்கு மகரலக்னமாகி லக்னங்கள் சஷ்டாஷ்டகம் எனப்படும் ஆறுக்கு எட்டு தோஷமானதால் இருவருக்கும் ரசனைகளில் வேறுபாடு இருக்கும்.
உங்களுக்கு விஜய் பிடித்தால், அவருக்கு அஜீத் பிடிக்கும் நேரெதிராக இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் சனி உச்சமானதால் உங்களை விட மேம்பட்ட
அதிர்ஷ்டமுள்ள மனைவி கிடைப்பாள்.
பெண்ணின் ஜாதகத்தில் உச்ச குரு லக்னத்தைப் பார்ப்பது அவர் மிகுந்த நல்ல குணங்களைக் கொண்ட அருமையான பெண் என்பதை உறுதி செய்கிறது. உங்களின் மேஷராசிக்கு அஷ்டமச்சனி
நடப்பதால் சனி முடிந்த பிறகு உங்களின் வாழ்க்கை அனைத்து விதங்களிலும் மேன்மையாக இருக்கும்.
பி. கே. தங்கவேல், திருச்செங்கோடு.
கேள்வி:
சனி
|
|||
குரு
கே
|
இராசி
|
||
செவ்,ரா
ல |
|||
சந்
|
சூ,பு
சுக்
|
ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகன் யாரையும் மதிக்காமல் எதிர்த்து பேசுகிறார். வாகனம் மற்றும் தீயில் சாகசம் செய்கிறார். ஆயுள் எப்படி?
பதில்:
சிம்மலக்னம், விருச்சிகராசி லக்னத்தில் செவ்வாய், ராகு. மூன்றில் சூரியன், புதன், சுக்கிரன். ஏழில் குரு, கேது. ஒன்பதில் சனி (25.10.1998 இரவு 1.41,
திருச்செங்கோடு)
லக்னாதிபதி நீசம் பெற்று ஆயுள்காரகனும் நீசம் பெற்று, ஆயுள் ஸ்தானாதிபதி அந்த பாவத்துக்கு விரயத்தில் திக்பலம் இழந்து லக்னத்தில் ராகு அமர்ந்த ஜாதகம். தற்பொழுது
ஏழரைச்சனியும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் சொன்னாலும் உங்கள் மகன் கேட்கமாட்டார். எவருடைய அறிவுரையையும் ஏற்கமாட்டார். லக்னாதிபதி சூரியனை
வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்வதோடு சனிக்கிழமைதோறும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.
வி. பாண்டி, மதுரை.
கேள்வி:
கே
|
செவ்
சுக்
|
சூ,பு
குரு
|
|
இராசி
|
சனி
|
||
சந்
|
|||
ல
|
ரா
|
ஆட்டோ ஓட்டுகிறேன் கடன் தொல்லை அதிகமானதால் விஷம் குடித்து காப்பாற்றப்பட்டேன். பிறந்தது முதல் நிம்மதியில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
எங்கே போய் ஜாதகம் பார்த்தாலும் யாரும் உண்மை நிலையை சொல்வது இல்லை. என்னால் குடும்பத்தில் நிம்மதியும் இல்லை. படிப்பறிவும் இல்லை. குருஜி அவர்களே என்னை
தெளிவுபடுத்துங்கள்.
பதில்:
துலாம்லக்னம், மகரராசி, ஆறில் கேது, ஏழில் புதன், சுக்கிரன், செவ்வாய். எட்டில் சூரியன், குரு. பத்தில் சனி. (6.6.1977, பகல் 4 மதுரை)
துலாம் லக்னத்திற்கு குருவின் தசை வரக்கூடாத தசை என்று அடிக்கடி எழுதுகிறேன். பதினான்கு வருடங்களாக குருதசை நடக்கிறது. இன்னும் இரண்டு வருடங்கள் பல்லைக்
கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய முன்கோபத்தையும், அசட்டுத்துணிச்சலையும் திருத்திக் கொள்ளுங்கள். நான் கோபக்காரன் இல்லை என்று சொல்லாதீர்கள்
ஜாதகம் பொய் சொல்லாது.
2017ல் ஆரம்பிக்கவிருக்கும் சனிதசை லக்னப்படி ராஜயோகாதிபதியாகவும், ராசிநாதனாகவும் இருப்பதால் மிகப்பெரிய யோகம் செய்யும். அதனையடுத்து வரும் புதன்தசையும் யோகதசை
என்பதால் இனிமேல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவே இருப்பீர்கள்.
தம்பிக்கு திருமணம் செய்யாவிட்டால் தாய் தந்தை உயிருக்கு ஆபத்தா?
ஆர். சகிலா, திருச்சி - 4.
கேள்வி:
ரா
|
|||
இராசி
|
சந்
|
||
குரு
ல
|
செவ்
சுக்
|
||
பு,கே
சனி
|
சூ
|
என் தம்பிக்கு வரும் தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறாவிட்டால் என் அப்பா, அம்மா உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று இங்குள்ள ஜோதிடர் சொல்கிறார். பயமாக
உள்ளது. என் பெற்றோர்களின் ஆயுள் எப்படி? ஆயில்யம் நட்சத்திரம் தோஷமானதா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா?
பதில்:
மகரலக்னம், கடகராசி, லக்னத்தில் குரு, நான்கில் ராகு, ஏழில் சந்திரன், எட்டில் சுக்கிரன், செவ்வாய், ஒன்பதில் சூரியன். பத்தில் புதன், பதினொன்றில் சனி.
(9.10.1985 2.45 பகல், திருச்சி)
ஜோதிடத்தில் பலன் மட்டும்தான் சொல்லமுடியும். கதை சொல்ல முடியாது. மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் செத்துப் போவார்கள் என்று ஜோதிடத்தில்
சொல்லப்படவில்லை. அதேபோல சமீபத்தில் தாய், தந்தையரை இழக்கும் அமைப்பும் உங்கள் தம்பியின் ஜாதகத்தில் இல்லை.
தாயாரைக் குறிக்கும் நான்காம் பாவத்தில் ராகு இருந்து எட்டில் செவ்வாயுடன் மறைந்த சுக்கிரனின் தசையில் ராகுபுக்தி நடந்தாலும் மாதாகாரகன் சந்திரன் ஆட்சிவலுவுடன் இருப்பதாலும், நான்காம் இடத்திற்கு பாக்யாதிபதி புதனின் பார்வை இருப்பதாலும் தாயாருக்கு ஒன்றும் ஆகாது. ஆயில்யம் உள்பட எந்த நட்சத்திரமும் தோஷமில்லை. எட்டில் செவ்வாய் இருந்தாலும் அந்த இடம் சிம்மமாகி சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் செவ்வாய் தோஷமும் இல்லை..
எஸ். மணிமேகலை, புதுச்சேரி.
கேள்வி:
ரா
|
|||
இராசி
|
சந்
|
||
செவ்
|
|||
பு
கே
|
ல,சூ
குரு,சு
|
சனி
|
என்னுடைய தம்பிக்கு இரண்டு ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குருபலன் எப்பொழுது வருகிறது? எப்பொழுது திருமணம் கைகூடும்?
பதில்:
விருச்சிகலக்னம், கடகராசி. லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், குரு. மூன்றில் செவ்வாய், எட்டில் ராகு, பனிரெண்டில் சனி. (6.12.1982 6.45 காலை, பாண்டி)
வரும் ஜூலைமாதம் முதல் குருபலன் ஆரம்பிக்கிறது. 2016 ஏப்ரலுக்குள் திருமணம் கைகூடும்.
அருமை, அருமை அய்யா
ReplyDelete