கேள்வி:
ரா
ல
|
குரு
|
சந்
|
|
ராசி
|
|||
சூ
செவ்
|
|||
சனி
|
பு,சு
கே
|
ஜோதிடத்தின் சக்கரவர்த்தியே. உங்களின் ஈடு இணையற்ற கணிப்புத் திறமைக்கு தலை வணங்குகிறேன். 19-8-2014 மாலைமலரில் பெங்களூரில் பணிபுரியும் என் ஒரே மகள்
பிரியாவின் கல்யாணம் பற்றிய கேள்விக்கு அவள் வேற்று மத பையனை விரும்புவதாக பதில் கொடுத்திருந்தீர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. என் மனைவிக்கு
இது முன்பே தெரிந்திருக்கிறது என்பதுதான் கொடுமை. அந்தப் பையன் கிறிஸ்துவன். நான் சாப்பிடும்போது முட்டை என்று சொன்னாலே வாந்தி எடுத்து விடுவேன். வீடு
நரகமாக இருக்கிறது. மகளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டேன். சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறாள். அவள் ஜாதகப்படி என்ன நடக்கும்?
பதில்:
மீன லக்னம் ரிஷப ராசி இரண்டில் குரு ஆறில் சூரி செவ் ஏழில் புத சுக் கேது ஒன்பதில் சனி (13-9-87 7.15 இரவு நாமக்கல்)
எல்லாம் வல்ல பரம்பொருளை கந்தன் என்று சொன்னால் என்ன? கர்த்தன் என்று சொன்னால் என்ன? இடையில் சில எழுத்துக்கள்தானே வித்தியாசம்? உலகின் உன்னத மதமான எனது மேலான
இந்து மதம் அன்பையும் சகிப்புத் தன்மையையும் பரந்த மனதையும்தானே போதிக்கிறது?
இன்பர்மேஷன் கொடுக்கும் கலிகாலத்தில் பெர்மிஷன் கேட்டு பட்டினி கிடக்கும் மகளை நினைத்து பெருமைப்படுங்கள். அவளது ஜாதகப்படி ஏழாமிடத்தில் இருக்கும் கேதுவாலும் நடக்கும் ராகு தசையாலும் ராசிக்கு ஏழில் இருக்கும் சனியாலும் இந்த அமைப்பு உருவானது. அவளது விருப்பப்படியே உங்கள் சம்மதத்துடன் அவள் திருமணம் நடக்கும்.
ஆர்.
ரமேஷ்,
துறையூர்.
கேள்வி
:
சுக்,பு
சூ
|
செவ்
ரா
|
ல
|
|
ராசி
|
|||
குரு
|
|||
கே
சந்,சனி
|
மரைன் என்ஜினீயரிங் முடித்து விட்டு கப்பலில் பொறியாளராக வேலை செய்கிறேன்.
ஆறு மாதங்களாக உயர் பதவிக்காக மேற்படிப்பு பரீட்சை எழுதி பாஸ் பண்ண முடியவில்லை.
முயற்சி செய்தும் பலன் இல்லை. எப்போது முடிப்பேன்? இரண்டு வருடங்களாக கடுமையாக பெண் பார்த்தும் வரன் அமையவில்லை.
கிரக நிலைகள் சரியாக உள்ளதா?
எதிர்காலம் எப்படி?
பதில்
:
மிதுன லக்னம், துலாம் ராசி. ஆறில் சனி. எட்டில் குரு. பத்தில் சூரி, புத, சுக். பதினொன்றில் செவ், ராகு. (6.4.1985, 11.30 காலை, துறையூர்.)
லக்னாதிபதி புதன் நீசமாகி வலுவிழந்து ராசிப்படி பத்தாமிடம் கடலைக் குறிக்கும் ஜல ராசியான கடகமாகி செவ்வாய் பார்வை பெற்றதால் கப்பலில் வேலை. நீச குருவின் தசை
நடந்து ஏழரைச் சனியும் நடப்பில் உள்ளதால் தேர்வில் பாசாக முடியவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகு முடிப்பீர்கள்.
ராசிக்கு இரண்டில் சனி. ஏழில் செவ்வாய், ராகு. லக்னபடி ஏழுக்குடையவன் எட்டில் மறைந்து நீசம். அனைத்திற்கும் மேலாக உச்ச சுக்கிரன் வக்ரமாகி கடுமையான தார தோஷ
அமைப்பு உள்ளதால் 33 வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பின்பு எதிர்காலம் நன்றாக இருக்கும்.
எஸ்.
ஜெயசந்திரன்,
உடுமலைப்பேட்டை.
கேள்வி
:
ரா
|
ல
|
||
ராசி
|
செ
|
||
சூ,பு
சுக்
|
|||
குரு
கே
|
சனி
|
சந்
|
திருமணம் நடக்குமா?
நடக்காதா?
பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் எதனால் தடை? ஏதாவது தோஷமா?
அல்லது பூர்வ புண்ணிய பாவமா?
பதில்
:
மிதுன லக்னம், கன்னி ராசி. இரண்டில் செவ். மூன்றில் சூரி, சுக். நான்கில் புத. ஐந்தில் சனி. ஆறில் குரு, கேது. (8.9.83, 2.31 அதிகாலை, தூத்துக்குடி.)
இந்த ஜாதக அமைப்புபடி நீங்களே ஜோதிட ஆர்வமுள்ள ஒரு குட்டி ஜோதிடராகத்தான் இருப்பீர்கள். லக்னத்திற்கு இரண்டில் நீச செவ்வாய். ராசிக்கு இரண்டில் உச்ச சனியாகி
ஏழுக்குடைய குரு ஆறில் மறைந்து ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் பெற்றதும். சுக்கிரன் வக்ரம் பெற்றதும் தார தோஷ அமைப்பு. அனைத்திலும் மேலாக லக்னாதிபதி புதன் உச்ச
நிலையில் வக்ரம் பெற்று நீச வலுப் பெற்றதால் திருமணம் புத்திர பாக்யங்களில் தடை இருக்கும்.
நடைபெறும் ராகு தசை சுக்கிர புக்தி சந்திர அந்திரத்தில் 19.7.2016 முதல் 18.10.2016க்குள் 2016ம் வருடம் ஆவணி மாதம் திருமணம் நடைபெறும்.
வாழ வழி உள்ளதா? சாகத்தான் வேண்டுமா?
எஸ்.
சத்யா,
சென்னை
-24.
கேள்வி
:
சனி
ரா
|
|||
சுக்
|
ராசி
|
||
சந்
சூ,பு
|
|||
ல
|
செவ்
|
குரு
கே
|
குரு
|
கே
|
||
சந்
ல
|
ராசி
|
சூ
|
|
பு,
சுக்
|
|||
ரா
|
செ
சனி
|
கே
|
சந்
|
||
ராசி
|
குரு,ல
|
||
சுக்
செவ்
|
|||
சூ
பு
|
சனி
|
ரா
|
ல,சூ
செவ்
|
பு
சுக்
|
சந்
|
|
ராசி
|
ரா
|
||
கே
|
|||
குரு
சனி
|
எல்லா நகைகளும் போய்விட்டது.
ஊரை சுற்றிக் கடன்.
பெற்றதாய் உட்பட யாரும் பேசுவது இல்லை.
வாடகை,
சாப்பாட்டுக்கு வழியில்லை.
“குழந்தைகளின் ஜாதகம் சரியில்லை.
எனவே வரும் ஏப்ரல்
1-ந் தேதி எங்காவது ஓடிவிடுவேன்.
இனி வாழ்க்கையே இல்லை” என்று கணவர் விரக்தியில் பேசுகிறார்.
அவர் ஓடிவிட்டால் கடன்காரர்களுக்கு பதில் சொல்லி இரண்டு பெண் குழந்தைகளுடன் என்னால் வாழ முடியாது. சாவதைத் தவிர வேறு வழியில்லை.
வாழ வழி உள்ளதா?
அல்லது சாகத்தான் வேண்டுமா?
உங்கள் பதிலில்தான் எல்லாமே உள்ளது
.
பதில்:
மூத்த பெண்ணிற்கு கும்ப லக்னமாகி, லக்னத்தை புதன், சுக்கிரன் பார்த்தும் லக்னாதிபதியை குரு பார்த்தும் இளைய பெண்ணிற்கு கடக லக்னமாகி லக்னத்தில் உச்ச குரு
அமர்ந்து லக்னாதிபதியை உச்ச செவ்வாய் பார்த்தும் அமைந்த ராஜயோக ஜாதகத்தைக் கொண்ட குழந்தைகளை வைத்துக் கொண்டு சாகப் போகிறேன் என்கிறாயே .அம்மா? இது தெய்வத்திற்கே
அடுக்குமா?
குழந்தைகள் ஜாதகம் இப்படி என்றால் உன் கணவனின் ஜாதகம் விருச்சிக லக்னமாகி. சூரியனும் சந்திரனும் மூன்றில் இணைந்து அவர்களை செவ்வாயும் குருவும் பார்த்து
தர்மகர்மாதிபதி யோகம் கொண்ட இன்னொரு யோக ஜாதகம். சாகும் அளவிற்கு இப்போது என்ன நடந்துவிட்டது? கணவனுக்கு நடந்த சனி தசை அஷ்டமாதிபதி புதன் புக்தியில் ஆரம்பித்து
இன்று வரை தொழில் சரியில்லாமல் போய் கடன் வந்துவிட்டது. அவ்வளவுதானே?
இதோ இப்போது நடக்கும் சுக்கிர புக்தி 23.1.2017-ல் முடிந்து சூரிய புக்தி ஆரம்பித்தவுடன் நன்றாகத் தொழில் நடந்து கடனை எல்லாம் அடைத்து போன நகையை விட இரண்டு
மடங்கு நகை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொள்ளத்தானே போகிறாய்? இதற்கெல்லாம் குழந்தையுடன் செத்துப் போவேன் என்றால் உலகத்தில் ஒரு பெண் கூட உயிருடன் இருக்க
மாட்டேளே?
கடன் தொல்லைக்காக ஊரை விட்டு ஓடிப்போக வேண்டும் என்று நினைத்தால் எந்த ஆம்பளையும் ஊரில் இருக்க முடியாது.. மூன்று மாதகைக் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்
இப்படி நினைக்கலாமா? உன்னுடைய ஜாதகப்படி லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று லக்னத்தில் ஒரு உச்ச கிரகமும் அமர்ந்ததால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் உன்னால்
சாதுர்யமாக சமாளிக்க முடியும். கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசி கடனை தீர்க்கும் வழியை யோசித்து கடனை அடைத்து 2017-ல் குழந்தைகளோடு என் ஆபீசுக்கு வருவீர்கள்.
அப்போது குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக இருப்பார்கள் என்ற பலனைச் சொல்கிறேன்.
எஸ். நாகரெத்தினம், திருப்பூர்.
கேள்வி:
சூ,செவ்
பு,சந்
|
ல
சுக்
|
ரா
|
|
ராசி
|
|||
கே
|
குரு
|
சனி
|
என் மகனுக்கு திருமணம் நிச்சயமாகி பத்திரிகை அடித்து எல்லா ஏற்பாடுகளும் செய்து இரண்டு நாட்களுக்கு முன் பெண்ணுக்கு பதினாறு வயதுதான் ஆகிறது என்று பெண்ணின்
பெரியப்பா கொடுத்த புகாரினால் நின்று விட்டது. ஏன் இப்படி நடந்தது? தோஷமா? எப்போது திருமணம்?
பதில்:
ரிஷப லக்னம் மேஷ ராசி லக்னத்தில் சுக் இரண்டில் ராகு ஆறில் சனி ஏழில்
குரு பனிரெண்டில் சூரி புத செவ் (14-4-83 8.40 காலை திருப்பூர்)
ராசிக்கு ஏழில் சனி ராசியில் செவ்வாய் ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைவு ஏழில் அஷ்டமாதிபதி குடும்ப வீட்டில் ராகு என கடுமையான தாரதோஷம் இருப்பதால் தடை ஏற்பட்டது.
ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். ஜூலை மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும்.
பி. சதீஷ்குமார், கும்பகோணம்.
கேள்வி:
கே
குரு
|
செவ்
|
சனி
|
|
சூ
|
ராசி
|
||
சந்,பு
சுக்
|
|||
ல,
ரா
|
பல தொழில் செய்து எல்லாம் நஷ்டம். கோழிப் பண்ணை மளிகை ஹோட்டல் எல்லாம் பிரச்னை. இப்போது கழுத்து வரை கடன். வேலைக்குப் போகிறேன். என்ன செய்தால் மீண்டும் தலை
நிமிர்ந்து வாழ்வேன்? என்ன தொழில் செய்யலாம்? கடலூரில் மீண்டும் சென்று வாழலாமா?
பதில்:
துலாம் லக்னம் மகர ராசி நான்கில் சுக் புத ஐந்தில் சூரி ஏழில் குரு கேது பத்தில் சனி (26-2-76 10.50 இரவு சிதம்பரம்)
கடந்த காலத்தில் ஆறுக்குடைய குருவின் சாரமும் பார்வையும் பெற்று நடந்த ராகு தசையால் கடன் தொல்லை வந்தது. இப்போது கடன் ஸ்தானாதிபதியான குருவின் தசையே நடந்து
கொண்டிருக்கிறது. மகர ராசிக்கு அடுத்து ஏழரைச்சனி வர இருப்பதால் சொந்தத் தொழில் வேண்டாம். கடனில்தான் மாட்டுவீர்கள். வேலைக்குப் போங்கள். அடுத்து வரும் சனிதசை
உங்களுக்கு யோக தசை. வாழ்வின் பிற்பகுதியில் சாதிக்கும் ஜாதகம். கடலூருக்குப் போவதில் தடை இல்லை .
சுக்கிர நீசத்தால் தாம்பத்யத்தில் குறை வருமா?
எம். பாஸ்கரன், சாலிகிராமம்.
கேள்வி:
கே
|
|||
ராசி
|
சூ,
குரு
|
||
சனி,ல
பு
|
|||
சந்,ரா
செவ்,சு
|
என்னுடைய ஜாதகத்தை பார்ப்பவர்கள் நாக தோஷம் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் கன்னியில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லையென்று
சொல்கிறார்கள். காளஹஸ்தி, புற்றுக்கோவல், வாழைமரம், திருநள்ளாறு, திருவிடந்தை என எல்லா பரிகாரமும் செய்து விட்டேன். 36 வயதாகியும் திருமணம் இல்லை.
சுக்கிரன் நீச்சம் அடைந்ததால் தாம்பத்யத்தில் குறை ஏற்படுமா? குருவைச் சரணடைகிறேன். உங்களின் தீவிர ரசிகனுக்கு வழிகாட்டுங்கள்..
பதில்:
சிம்ம லக்னம் கன்னி ராசி. லக்னத்தில் சனி புத, இரண்டில் செவ் சுக் ராகு, பனிரெண்டில் சூரி குரு(8-8-78 8.10 காலை மதுராந்தகம்)
போகம் வீரியம் சுகம் மூன்றுக்கும் அதிபதிகளான சந்திர, சுக்கிர, செவ்வாய் மூவரும் ராகுவுடன் இரண்டு டிகிரிக்குள் கிரகணமாகி தாம்பத்ய சுகத்தை கொடுக்கும் சுக்கிரன்
நீசமாகி இவர்களை வழிநடத்தும் லக்னாதிபதி சூரியன் வலுவிழந்து கடந்த ஏழு வருடங்களாக ஏழரைச்சனியும் நடந்து எந்த சுகமும் கிடைக்காத ஜாதகம். இரண்டில் செவ்வாய் ராகு
அமர்ந்து ஏழை சனி பார்த்ததும் தோஷம்.
ஆனால் ராசிக்கு ஏழுக்குடைய குருபகவான் உச்ச வர்கோத்தமம் பெற்றதும் குடும்பாதிபதி திக்பலம் பெற்றதும் களத்திர ஸ்தானாதிபதி தன் வீட்டைப் பார்த்ததும் நிச்சயம்
திருமணம் நடக்கும் அமைப்புக்கள். சுக்கிரன் நீசமானது தாமதமாக தாம்பத்திய சுகம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறதே தவிர அதில் குறை இருக்காது. இதுவரை நீங்கள்
செய்தது முறையான பரிகாரங்கள் இல்லை. பரிகாரங்களை இங்கே எழுத இடம் போதாது. 2017ல் திருமணம் நடக்கும்.
குருஜியிடம் கேள்வி பதில் பகுதியில் தொடர்புகொள்வது எப்படி?
ReplyDeleteமாலை மலர் செய்தித்தாள் வாங்கி படியுங்கள்
Deleteமாலை மலர் செய்தித்தாள் வாங்கி படியுங்கள்
Delete