“வேறு வகையான சில தளங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஈர்ப்பு, ஒரு ஜோதிடப் பக்கத்திற்கு அதுவும் ஒரு பிராந்திய மொழி ஜோதிடத்தளத்திற்கு இருப்பதை முதன்முதலாகப் பார்க்கிறேன்” என்று என் இணையப் பக்கத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் சொல்வதைக் கேட்டு நெகிழ்ந்து நிற்கையில் இந்த உயர்வுக்குக் காரணமான இருவரை நினைத்துப் பார்க்கிறேன்.
ஒருவர், என் போன்ற ஏராளமானோரின் வாழ்க்கை வழிகாட்டியும், மேன்மைமிக்க மனிதரும், “ஆழ்வார்க்கடியான்” என்று கவிஞர் வாலியின் திருவாயால் அழைக்கப்பட்டும், எழுதப்பட்டவருமான மூத்தபத்திரிக்கையாளர் மை.பா. நாராயணன் அவர்கள்.
இவரே என் கைகளைப் பிடித்து இழுத்துப்போய், “சுவாமிநாதா... ஒரு ஜோதிடப் புதையலை உன்னிடம் தருகிறேன். உபயோகப்படுத்திக்கொள்” என்று இன்னொரு கரங்களிடம் ஒப்படைத்தவர்.
பெற்றுக் கொண்டவர் தற்போது முகநூலில் பிச்சைஐயர் சுவாமிநாதன் என்ற பெயரில் “மகாபெரியவரின் மகிமைகளை” பரப்பும் பணியினை தலைமேல் தாங்கி உலகெங்கும் ஓடிக்கொண்டும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மகாபெரியவரின் மகிமைகளை உள்ளம் உருக சொல்லிக் கொண்டும் இருக்கும் அன்றைய திரிசக்தி ஜோதிட ஆன்மீக இதழ்களின் ஆசிரியர் திரு. பி.சுவாமிநாதன் அவர்கள்.
கண்கள் பனிக்கும் இந்த நாளில் இருவரையும் நிறுத்தி வைத்து சாஷ்டாங்கமாக இவர்களின் பாதங்களை நமஸ்கரிப்பதைத் தவிர்த்து வேறு என்ன என்னால் செய்ய முடியும்..?
No comments :
Post a Comment