உலகின் உன்னத மதமான நமது மேலான இந்துமதம் இல்லற இன்பத்தின் மூலமான பரம்பொருளைக் காணுதலையும், இல்லறம் காணா நேரடி துறவறத்தின் மூலமாக பரம்பொருளைக் காண்பதையும் அனுமதிக்கிறது.
இதில் பகவான் ராமகிருஷ்ணர் முதல் வகையையும் மகாபெரியவர் இரண்டாம் வகையையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரின் அவதார ஜாதகத்திலும் மீனத்தில் சுக்கிரன் உச்சம்தான். ஆனால் மகாபெரியவருக்கு உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்து, போகஸ்தானாதிபதி சந்திரன் நீசம் பெற்றதால் நான் ஒருமுறை அந்த தெய்வத்தைப் பற்றி குறிப்பிட்டதைப் போல “காமாட்சி என்ற பெயரைத் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாதவர்.”
பகவான்ராமகிருஷ்ணர் இல்லறம் கண்டவர். அன்னையை தேவியின் வடிவாக தரிசித்தவர். அவருடைய சில ஆத்ம பரிசோதனைகள் நாம் அறிந்தவை. அவருக்கு சுக்கிரன் உச்சம் என்றாலும் அம்சத்தில் நீசம் என்பதால் சுக்கிரன் முற்றிலும் வலுவிழக்கத்தான் செய்தார். என்ன.. உச்சமாகி பின் வலுவிழந்தார்.
நவாம்சத்தில் ஒரு கிரகத்தின் நிலையே இறுதி நிலை. ஜோதிட விதிகளை உங்கள் இஷ்டம் போல நீங்கள் வளைத்துக் கொள்ளக் கூடாது. சுக்கிரனைப் பற்றி நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் தவறானவை. உதாரணமாக சிறு குழந்தைகளை யாரும் காதலிக்க மாட்டார்கள். அன்பு செலுத்துவார்கள். அன்புக்கு சுக்கிரன் தேவையில்லை. அன்பு குருபகவான் சம்பந்தப் பட்டது.
உதாரணமாக, அசுரகுருவான சுக்கிரன் தருவது சிற்றின்பம்.... தேவகுருவான குருபகவான் தருவது பேரின்பம்.
இதன் சூட்சும விளக்கம் என்னவென்றால்...
மனிதனுக்கு கிடைக்கும் இன்பங்களில் ஆண் பெண் உறவின் உச்சநிலையில் சில நொடிகள் ஏற்படும் இன்பமான, எண்ணங்கள் அற்ற பரவசநிலையே முதன்மையானதாக கருதப்படுகிறது.
இந்த சில நொடி இன்பத்தை அதாவது சிற்றின்பத்தை காமத்தின் மூலமாகத் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் தரும் இந்த இன்பத்திற்கு துணை வேண்டும்.
ஆனால் இதே இன்பத்தை ஒரு மனிதன் பெண்ணின் துணையின்றி தவம் குண்டலினிசக்தி போன்ற மெய்ஞான அனுபவங்களின் மூலமாக நினைத்த போது பெற்று நீண்ட நேரம் அனுபவிப்பது பேரின்பம்.
ஞானிகள் தன்னிலை மறந்த பரவசநிலையில் பரம்பொருளுடன் ஒன்றும் போது இதையே அனுபவிக்கிறார்கள். இதை அருளுபவர் தேவகுருவான குருபகவான்.
எனவேதான் சுக்கிரபலம் ஒரு இல்லறவாசிக்கே தேவை என்றும், துறவறம் காண்போருக்கு குருபகவானின் பலம் தேவை என்றும் சொல்லப்பட்டது.
முகநூலில் இதற்குமேல் சுருக்கமாக என்னால் விளக்க முடியாது. போகப் போக சூட்சுமங்களை உணருவீர்கள்
Very nice explanation Sree Aadithya Guruji
ReplyDeleteNandri Nandri
ReplyDelete29/3/1984 காலை 4.47
ReplyDeleteகும்ப லக்னாம் கும்ப ராசி லாக்நத்தில் சுக்ரன் சந்திரன் 2 இல் சூரியன் 3 இல் புதன் 4 இல் ராகு 5,6,7,8, சுத்தம் 9 இல் சனி 10 இல் செவ்வாய் கேது 11 இல் வியாழன்
இந்த ஜாதகர் சின்ன வயதில் தந்தையை ஈழ்ந்தார் இவருடைய வாழ்கை எப்படி இருக்கும் திருமண வாழ்கை பட்திரி கூறுங்கள் குருஜி
pls answer ji
ReplyDeletevery good explain ji
ReplyDeleteThanks for Great Explanation !!!
ReplyDelete