ஒரு ஜோதிடன் தன்னை “ஜோதிடனாக உணர்தல்” என்பது ஒரு பெருமைக்குரிய நிகழ்வு.
ஏனெனில் அந்த நிமிடமே உங்களின் வாக்குப் பலிதம் உங்களை உன்னத ஜோதிடராக நிரூபிக்கும்.
வளரும் ஜோதிட ஆய்வாளர்கள் பிற ஜாதகங்களை ஆராய்வதை விட முதலில் தன்னுடைய ஜாதகத்தை ஆராய்வதே நல்லது. ஏனெனில் உங்கள் ஜாதகம் உங்களிடம் பொய் சொல்லாது.
ஒவ்வொரு மணிநேரமும் அந்தந்த ஹோரைகளில் உங்களுக்கு நடக்கின்ற சம்பவங்கள், பணம் வரும் நேரம், காதல் அனுபவங்கள், சண்டைகள், மனமும் புத்தியும் தடுமாறும் விஷயங்கள் என கிரகங்களால் நடத்தப்படும் சில அற்புதங்களை நீங்கள் உங்கள் ஜாதகத்தை வைத்தே துல்லியமாக கணிக்க முடியும்.
இதற்கு நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு என்ன தசாபுக்தி அந்தரம் நடக்கிறது என்பதோடு மட்டும் அல்லாமல் சித்திரம் சூட்சுமம் பிராணன் என அந்தரத்தை ஒன்பது பங்காக பிரித்தல், அதனையும் ஒன்பது பங்காக பிரித்தல் என உள்ளே சென்று இப்போது நான் எந்த எந்த கிரகங்களின் ஆளுமையில் இருக்கிறேன் எனக்கு என்ன நடக்கும்? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரும் போது ஜோதிடம் இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்கு சொல்லித்தரும்.
உதாரணமாக பயணம் சம்பந்தப்பட்ட ஒரு கிரகத்தின் ஹோரையில் நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ போய்க்கொண்டிருக்கும்போதோ, பணம் வரும் ஹோரையில் அது கிடைக்கும்போதோ ஜோதிடத்தின் அற்புதத்தை அனுபவித்து சிலிர்ப்பீர்கள்.
இது போல கணிப்பதற்கு முயலும்போது இயல்பாகவே அன்றைய நட்சத்திரம் என்ன? எப்போது துவங்கி எப்போது முடிகிறது என்பது போன்ற பஞ்சாங்க விஷயங்களையும் மனதில் நிலை நிறுத்தும் பழக்கமும் வந்து விடும்.
சரி... இப்போது நண்பர் செந்தில்குமாரின் கேள்வியான “முதன் முதலாக” எப்போது ஜோதிடராக உணர்ந்தீர்கள் என்பதற்கு வருவோம்...
என்னுடைய சிறு வயதில் எங்கும் எப்போதும் கையில் ஜோதிடப் புத்தகமாக திரியும் போது நண்பர்களால் இகழப்பட்டு கேலி செய்யப்படுவேன்.
என்னுடைய இருபத்தியொரு வயதில் ஒரு நாள் இரவு ஒரு குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென என் எதிர் வீட்டு நண்பன் மூர்த்தி “ டேய் ஜோசியரே.. உனக்கு இப்போ என்னடா நடக்கும் ? சொல்லுடா..” என்றதற்கு இன்றோ நாளையோ என்னை தேளோ பாம்போ கடிக்கும் என்றேன். நண்பர்கள் குழு கிண்டலடித்துக் கலைந்தது.
பெற்றோர்கள் ஊரில் இல்லாமல் நானும் எனது தம்பியும் மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்று இரவு இரண்டு மணியளவில் எனது வேஷ்டியில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்து தன்னிச்சையாக இடது கையால் தள்ளி விட்ட போது அந்த தேள் என் கையில் கொட்டியது.
தம்பியை எழுப்பி எதிர் வீட்டில் மூர்த்தி அண்ணனை உடனே கூட்டி வா (மருத்துவ உதவிக்காக) என்று அனுப்பி அவன் வந்து டிவிக்கு அடியில் நகர்ந்து கொண்டிருந்த அந்த தேளையும், துடித்துக் கொண்டிருந்த என்னையும் பார்த்த அந்த பார்வையில் என்ன முதன்முதலாக ஜோதிடனாக உணர்ந்தேன்
guruji you are really great.
ReplyDeletethanks & regards
Saravanan
குருஜி எனது வினாவிற்க்கு பதில் செய்ததை விட “எப்போது ஜோதிடனாய்” உணர்ந்தோம் என்று சொல்லிய விதமே மிக அருமை..
ReplyDeleteஇப்படி ஒரு கேள்வியை நிச்சயமாக யாரிடம் வரும்ன்னு தெரியாது.. உங்களின் பல கட்டுரை வாசித்து இருக்கிறேன்.. நானே இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு பதிலும் வாங்குவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை..நன்றி குருஜி