Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 4


வாசகர்களின் கேள்விகளுக்கு 

    "ஜோதிட மகாகுரு"
"ஜோதிடக்கலை அரசு"
   
ஆதித்ய குருஜி                                                                                      பதில்கள்


R. பாஸ்கரன்
பெங்களூர்-60

கேள்வி:

இது எனது சகோதரன் ஜாதகம். 13 வருடங்களாக இவருக்கு திருமணம் செய்ய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத பரிகாரங்கள் பாக்கியில்லை. இவருக்கு திருமண வாழ்க்கை என்ற ஒன்று உண்டா? உண்டு எனில் எப்போது அமையும்?

பதில்:

துலாம் லக்னம். மேஷ ராசி. அஸ்வினி நட்சத்திரம். செவ்வாய் தசையில் சனி புக்தி நடப்பு.

ராசி கட்டத்தில் எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும், பாவகத்தின் படி களத்திர ஸ்தானாதிபதி செவ்வாயும், களத்திரகாரகன் சுக்கிரனும் எட்டில் மறைவு. ஏழாமிடத்தில் ராகு. அவருக்கு ஐந்தாமிட சனி பார்வை

சனி
சந்,ரா
சுக்
சூ,செ
குரு
ராசி
புத(வ)
லக்,கேது
ஒரு கிரகம் ராசிப்படி எப்படி இருந்தாலும் பாவகத்தில் உள்ள வீட்டுப் பலனையே செய்யும் என்ற ஜோதிட விதிக்கு இந்த ஜாதகம் நல்ல உதாரணம். 

சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் அவர் ஆட்சியாக இருக்கிறார். அதோடு செவ்வாய் ஏழாமிடத்தில் உள்ள மேஷ ராகு சாரத்தில் இருப்பதாலும் முறைப்படியான பரிகாரங்களுக்குப் பின் செவ்வாய் தசையிலேயே உங்கள் சகோதரனுக்கு திருமண வாழ்க்கை உண்டு.

ராகுவிற்கான பரிகாரங்களை ஸ்ரீ காளஹஸ்தியிலும், செவ்வாய் ப்ரீத்தியான விஷயங்களையும், சுக்கிர ப்ரீத்தியும் செய்ய வேண்டும். மேலும் மகான் ஸ்ரீ முரளிதர சுவாமிகளைத் தொடர்பு கொண்டு ஜென்ம நட்சத்திரம் அன்று வேலூர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் “கந்தர்வ ராஜ ஹோமம்” செய்வது நல்லது.



K.S. சேஷகிரி,
92,தர்பல்லாஹில்ஸ்
விசாகப்பட்டினம்-530003.

கேள்வி:

என் கடன் தொல்லை எப்போது தீரும்?

பதில்:

துலாம் லக்னம். சிம்மராசி. உத்திரம் நட்சத்திரம். சனிதசையில் சுக்கிரபுக்தி நடப்பு.

லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் குரு பகவான் நட்பு வலுவுடன் அமர்ந்து அவரது ஆறாம் வீடான மீனத்தை பார்த்து அந்த இடத்தை வலுவாக்குகிறார். குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஜீவனாதிபதி சந்திரனுடன் இணைந்து பதினோராம் இடத்தில் அமர்ந்து குருவையும், குருவின் வீடான ஆறாமிடத்தையும் பார்க்கிறார்.

ராகு
ராசி
சனி
சுக்
செவ், சந்
சூ,பு
குரு
லக், கேது
ஆறாமிடத்திற்கு வேறு எந்தவித கெட்ட தொடர்புகளும் இல்லாததால் அந்த ஸ்தானம் வலுப்பெற்றது. மேலும் துலாம் லக்னத்திற்கு வரவே கூடாத குருதசையும் உங்களை மீளாத கடனில் சிக்க வைத்திருக்கும்.

தற்போது பத்தாமிடமான கடகத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கிறது. சனியையும் கடன் ஸ்தானாதிபதி குரு பார்க்கிறார். மேலும் குருவுக்கும், சனிக்கும் சாரம் தந்த புதனும் குருவின் வீடான தனுசில், சனிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார்.

இப்படி நடைபெற்ற, நடைபெறும் தசாநாதர்கள் இருவரும் ஆறாமிடத்தை தொடர்பு கொண்டு ஆறாமிடமும் அதன் அதிபதி குருபார்வை பெற்று வலுவானதால் கடன் தீராது. கடைசி வரை இருக்கும்.







வை. லோகநாத அய்யர்,
187B/1 நடராசபுரம் 5வது தெரு,
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்.

கேள்வி:

பதினெண்கீழ் சித்தர்கள் வழிபாடு செய்யும் நான், நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றும் வாழ்நாள் முழுவதும் வறுமையில்தான் இருக்கிறேன். என் எதிர்காலம் எப்படி இருக்கும்? மரணம் எப்போது? சித்திரா பௌர்ணமியில் பிறந்தும் ஏன் இந்த நிலை?

பதில்:

மிதுனலக்னம். திருக்கணிதப்படி துலாம்ராசி. சித்திரை நட்சத்திரம். புதன் தசை, சுய புக்தி நடப்பு. (5-5-1955. 9.25am சென்னை) 

இதுபோன்ற ஜாதகநிலை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.ஏறக்குறைய ஸ்ரீராமபிரான் போன்றதுதான் உங்கள் நிலைமை

சுக்
சூ
செவ்
பு
லக், கேது
ராசி
குரு
ராகு
சனி
சந்
ஐந்து கிரகம் உச்சம் பெற்றும் ராமபிரான் அவதாரமாகத்தானே நம்மால் ஆராதிக்கப்படுகிறார்? மனித வாழ்வின் சராசரி சுகங்களை அவர் அடைந்ததே இல்லையே......!

அரசனாக முடிசூடி அதிகாரம் செய்ய வேண்டிய வயதில் 14 வருடம் காடுகளில் திரிய வேண்டியதாயிற்று... மனைவியோடு வாழ முடியவில்லை ..... 

குழந்தைகள் போருக்கு வந்து எதிரே நிற்கும் போதுதான் தன் குழந்தைகள் என்றே தெரிய வந்தது. அது போலத்தான் உங்கள் கதையும்.

உச்சனை உச்சன் பார்த்தால் இருவருமே வலிமை இழப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சூரியன் சனி நால்வரும் உச்சம். குறிப்பாக மிதுன லக்னத்திற்கு உச்சமாகக் கூடாதவரான குருவும் உச்சம் பெற்றதாலும் குருதசையிலேயே உங்களுக்கு மனைவியையும் கொடுத்துப் பிறகு கெடுத்திருப்பார்.

ஏழாமிடத்தில் ராகு இருப்பதினால் குருதசை ராகு புக்தியில் இளமையிலேயே நீங்கள் மனைவியை பிரிந்திருக்கவேண்டும் அல்லது இழந்திருக்கவேண்டும் என்று கணிக்கிறேன்.

ஜாதகப்படி உச்ச சுக்கிரனை உச்ச குரு பார்த்ததால் நீங்கள் இளமையிலிருந்து தனியாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து நடந்த சனிதசையும் ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று உச்ச சூரியனின் பார்வை பெற்றதால் உங்களுக்கு யோகம் செய்திருக்க வாய்ப்பில்லை. சனியுடன் சந்திரன் இணைந்ததால் கடந்த 19 வருடங்களாக ஆன்மீகத் தேடலில் மனம் போயிருக்கும்.

தற்போது உச்ச சூரியனின் சாரம் பெற்று பனிரெண்டாமிடத்தில் செவ்வாயுடன் இணைந்த லக்னாதிபதியின் தசை ஆரம்பித்துள்ளது. புதன் திக்பலத்திற்கு அருகில் உள்ளதாலும் எட்டாமிடம் வலுப்பெற்றதாலும் உங்களுக்கு மரணம் இப்போது கிடையாது. புதன் தசை ஓரளவு நன்றாக இருக்கும். குரு, சனி தசைகளை போல சங்கடங்கள் நிச்சயம் இருக்காது.

பொருள் வளம் இல்லை என்றாலும், அள்ள அள்ளக் குறையாத அருள்வளம் ஏராளமாக அமையப் பெற்ற ஜாதகம் உங்களுடையது. சென்ற பிறவிக்கடனை கழிப்பதற்காக இந்தப் பிறவியில் உங்களுக்கு இந்த அவஸ்தை. அடுத்த பிறவியில் அனைத்தும் சித்திக்கும். இறைவழிபாடு உங்களை என்றும் காக்கும்.



ஸ்ரீ நிவாசன்
திண்டல்
ஈரோடு – 2

கேள்வி:

இந்த ஜாதகர்களை இணைக்கலாமா? ஏழாம் அதிபதி 8ல். இரண்டுக்குடையோன் 12ல். 5ல் சனி,கேது புத்திரதோஷமா? இருவரின் அன்யோன்யம் எப்படி இருக்கும்? திருமணம் செய்தால் நன்றாக இருப்பார்களா? ஜோதிடத்தின் தாயான குருஜி அவர்கள் பதில் தரவேண்டும்.

பதில்:

ஏற்கனவே உங்களின் கேள்விகளுக்கு விரிவான பதில் சொல்லி விட்டேன். திரும்ப திரும்ப கேட்டாலும் பதில் ஒன்றுதான்.



அ.தியாகராசன்,
S/O அருணாசலம்,
ஓமலூர், சேலம்- 636455.

கேள்வி:

தங்களின் கேள்வி-பதில் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்து பலரின் துன்பங்களை நீக்கி வருகிறது. அதில் நானும் ஒருவனாக இருக்க ஆசை. எனது தொழில் நிலை என்ன? கடன் அடையுமா? மூன்றில் குரு மரணம் தருவாரா? ஜோதிடம் வருமா ?அஷ்டமச் சனி நல்லது செய்யுமா? ராசிக்கல் எது? எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்யவேண்டும்? தயவு செய்து என் வாழ்வு சிறக்க வழிகாட்டுங்கள் அய்யா.......

பதில்:

மகர லக்னம், மீனராசி, ரேவதி நட்சத்திரம். சந்திரதசையில் சனிபுக்தி.
(18-9-1959. 4.00pm சேலம்.)

லக்னாதிபதி சனி பனிரெண்டில் மறைந்து, ஐந்து பத்துக்குடைய சுக்கிரன் எட்டில் மறைந்து வக்ரமாகி, ஒன்பதுக்குடைய புதன் உச்சமானாலும் ஒரே டிகிரியில் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்று ராகுவுடனும், செவ்வாயுடனும் மிக நெருங்கி உச்சபங்கமாகி சனி பார்வையையும் பெற்ற ஜாதகம்

சந்,கேது
ராசி
லக்
சுக்,(வ)
சனி
குரு
சூ,பு,செ,ரா
குரு பதினொன்றில் அமர்ந்து ராசியையும், புத்திர ஸ்தானத்தையும் மனைவி ஸ்தானத்தையும் பார்த்த ஒரே ஒரு நல்ல அமைப்புள்ள ஜாதகம்.

பிறந்தது முதல் 16 வயது வரை பாக்யாதிபதி புதன்தசை. பிறகு 23 வயது வரை கேதுவும் அதன்பிறகு சரியான இளமைப்பருவத்தில் எட்டில் மறைந்த சுக்கிரதசையும் 43 முதல் 49 வரை மகரலக்னத்திற்கு வரவே கூடாத பாக்யங்களைக் கெடுத்த சூரிய தசையும் தற்போது சந்திர தசையும் நடக்கிறது.

என்ன தொழில் உருப்படியாக நீங்கள் பார்த்திருக்க முடியும்?

தொழில் ஸ்தானாதிபதியும் எட்டில் மறைந்து லக்னாதிபதியும் வலுவிழந்ததால் எதிலுமே நிலையாக இருந்திருக்க மாட்டீர்கள் எதையும் சரியாகச் செய்தும் இருக்க மாட்டீர்கள் என்பதுதான் நிஜம். யார் சொன்னாலும் கேட்கவும் மாட்டீர்கள்.

கடன்கள் நிரந்தரமாக அடையவேண்டும் என்றால் யோகதசைகள் நடைபெற வேண்டும். ஆயுளைப் பற்றிய கவலை வேண்டாம். நீடித்த ஆயுள் உண்டு. புதன் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் உள்ளதால் ஜோதிட அறிவு வரும். ஆனால் வாக்கு ஸ்தானாதிபதி சனி பனிரெண்டில் மறைந்து வாக்கு வீட்டை பார்ப்பதால் பலன் சொல்வதில் தடுமாற்றமும் தயக்கமும் இருக்கும்.

தற்போது அஷ்டமச் சனியோடு சந்திரதசையும் நடப்பதால் சிரமமாகத்தான் இருக்கும். சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். சனிக்கும் சுக்கிரனுக்கும் பிரீத்தியான பரிகாரங்கள் செய்ய வேண்டும். நேரில் வந்து கேளுங்கள். இங்கே எழுத இடம் போதாது.



V.R. சுப்பிரமணியன்,
ஊர் பெயர் இல்லை.

கேள்வி:

சனிதசையில் பொருளாதார உயர்வு எப்போது? வீடு விரிவாக்கம் செய்யலாமா? கடன் ஒழியுமா? என்ன துணைத்தொழில் செய்யலாம் ? வணங்க வேண்டிய தெய்வம், கோவில் என்ன?

பதில்:

மகர லக்னம். மகரராசி. திருவோணம் நட்சத்திரம். சனிதசை சுயபுக்தி.

லக்னாதிபதி சனி மூன்றில் குரு வீட்டில் உச்ச சுக்கிரனுடன் சூட்சும வலு பெற்று அமர்ந்தும், பத்துக்குடையவன் உச்சம் பெற்று ஒன்பதாமிடத்தை பார்த்தும், பாக்கியாதிபதி ஜீவனஸ்தானத்தையும் பார்த்த தர்மகர்மாதிபதி யோகம் உள்ள நல்ல யோக ஜாதகம்

சனி,சுக்
சூ,செ, பு
ராகு
குரு
ராசி
லக்
சந்
கேது
சூரியன் உச்சமாகி செவ்வாய் புதனுடன் இணைந்து பத்தாமிடத்தை பார்ப்பதால் அரசு உத்தியோகத்தில் இருப்பீர்கள். மூன்றுக்கதிபதி குரு ஆறில் அமர்ந்து ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதும் இதை உறுதி செய்கிறது.

சனிதசை கேதுபுக்தி முதல் பொருளாதார உயர்வு இருக்கும். ஆறாமிடத்திற்கு ஆறான பதினொன்றில் அமர்ந்து தசாநாதனுக்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது புக்தி முதல் கடன்கள் அடைபடும். வீடு விரிவாக்கம் இப்போதே செய்யலாம்.

துணைத் தொழிலாக சனிதசை நடப்பதாலும் தசாநாதன் சுக்கிரனுடன் இணைந்து ஜலராசியில் இருப்பதாலும் பெட்ரோல் சம்பந்தப்பட்டது, டயர், தேயும் அழியும் பொருள்கள், வீணான பொருட்கள், நீசத் திரவங்கள் மற்றும் சுக்கிரன் சம்பந்தப்பட்ட தொழில் செய்யலாம். பெண் தெய்வ வழிபாடு சிறந்தது.


 
K.S. சதாசிவம்.
கிருஷ்ணாபுரம் மெயின் ரோடு,
காமராஜர் சாலை
மதுரை-9.

கேள்வி:

டிராவல்ஸ் தொழில் ஒத்து வருமா? புதுக்கார் வாங்கலாமா? பழைய காரா? நல்ல டிரைவர்கள் அமைவார்களா? மாற்றுத் தொழில் என்ன? எதிர்காலம் எப்படி?

பதில்:

கன்னி லக்னம், மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரம், சனிதசை, கேது புக்தி நடப்பு (20-9-73 6.05 am மதுரை)

லக்னாதிபதி புதன் உச்சமாகி லக்னத்தில் அமர்ந்து சூரியனுடன் சேர்ந்தாலும் அஸ்தமனமாகாமல், இரண்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றும், ஐந்துக்குடைய சனி பத்தில் சந்திரன் கேதுவுடன் அமர்ந்தும், குரு நீசவக்ரம் பெற்று லக்னத்தையும் பார்த்த அருமையான ஜாதகம்

செவ்
சந்,ச,கேது
ராசி
குரு
ராகு
சுக்
லக்,சூ,புத
வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். புதன் பத்தாமிடத்தில் அமர்ந்த லாபாதிபதி சந்திரன் சாரம் பெற்று லக்னத்தில் திக்பலமுடன் இருப்பதால் புதன் தசையில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள். அதற்கான சூழ்நிலைகள் இப்போதே சனிதசையில் உருவாகும்.

புதனே லக்னாதிபதியும் ராசினாதனும் என்பதால் புதன்தசை நன்கு யோகம் செய்யும். மேலும் சாரம் தந்தவர் பெருங்கேந்திரமான பத்தில் தசாநாதனுக்கு கேந்திரத்தில் இருப்பதாலும் நன்மை அதிகமாகும்.

சரி.... இப்போதைய கேள்விக்கு வருவோம். 

சனிதசை சுக்கிர புக்தியில் வரும் அக்டோபருக்கு மேல் பழையகார்கள் வாங்கியும் டிராவல்ஸ் நடத்தலாம். பொதுவாக சனி பத்தில் இருந்தாலே நிம்மதியாக சொந்தத் தொழில் செய்ய விடமாட்டார்.

ஆனால் உங்கள் விஷயத்தில் அவர் கேதுவுடன் ஒரு டிகிரி இடைவெளியில் இணைந்து சூட்சும வலுபெற்றதால் தொழிலில் இடையூறு செய்யமாட்டார்.

(செப் 2012 மாத இதழில் வெளிவந்தது)

2 comments :

  1. every idea and thinking and research is right on your part many perplexed when their planets r powerful kenthra konas achi ucham however they find miserable life

    each one has to realise which planets to be powerful which is not and also the right dasa which is very important

    my fatherinlaw 23 4 1925 simma lagna sun ucham juru moola trikonam mercury neecha bangam saturn ucham guru moon mars and jupiter aspect each from 5 and 11 th house

    he had worst life with children one married another without children wife very touch a good vey good person central govt clerk for 37 years got good pension died 10 10 2010 on 2 years koma sinus piles weak body suffered very greatly except good govtr job regular monthly income and pension every other thinkgs he failed miserably health wife andchildred

    prime life afte jupiter dasa birth 8 years saturn exalted dasa for 1933 to 1952 miserable poor finance big family then mercury from 8th house neecha dasa the best financiar for leo lagna 2 11 th house then comes kethu dasa from 6th house frfom saturn house who is powerful in 3rd house

    then comes venus dasa from 9th bhadaka house with powerful enemy sun aspected by another anemy of lagnathipathi saturn venus in fire house mesha she is a flower however aspected by jupiter from 5th house

    then sun dasa 9th house bhathaka and with enemy venus and saturn

    then comes moon in 11th with mars aspected by jupiter however tghe dispositor of moon mercury in 8th here while running moon dasa moon shall be in virgo from hastha star its dispositor in 7th he dies after 2 years in coma

    naturally high expectation failed due to dasa and wrong planets powerful and and running saturn mercury dasa from 12th house moon from progression from jupiter star then tosaturn mer 12th to leo lagna

    the progression of dasa from 2 3 4 th house and also the dasa nathans cooperative to lagnathi pathi like 3 / 11 and from 5 9 3 11 2 10 will be good and nice

    pls give examples long married life 90 85 etc and good job zero to hero hero to zero financially beautiful healthy etc such horoscopes r to be framed to learn and the preyers

    every one should have good education uninterupted then good decenet with high benefits job then should be beautiful then good health neat dress height colour then good wife accomodable respectable very helpful then long healthy lived parents good children healthy good finance and good nice house honest sin ere straight forward gentleman respected y all enjoy life well good food wife travel etc etc etc.......such horoscopes may please be discussed in length SIR SIR SIR .........WITH MY HIGH HIGH REGARDS SAIRAMAN sairaman53@yahoo.com

    ReplyDelete
  2. Sir simma lagna uthiram-2 kanni rasi
    Lagnathil kethu
    Kanniyil chandran
    Dhanusil Sani vakram
    Magrathil chevvai
    Meshathil guru suryan Bhutan ithil guru bhuthan asthangam
    Rishabathil sukran
    Kumbathil rahu
    Epdi irukum sir marriage life

    ReplyDelete