கைப்பேசி : +91 8286 99 8888
சிம்மம்:
மாத முற்பகுதியில் சூரியன் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களுக்கு கெடுதல்கள் இல்லாத மாதமாக இருக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. குரு ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ராசி வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகலமும் இப்போது கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் இப்போது வெற்றியாகும். சிம்மத்தினர் அனைவருமே புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.
இளைய
பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள்
இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது
அவசியம். கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப்
பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது
நல்லது. கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம்
மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில்
பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம்
போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment