ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
கன்னி:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் அதி நட்பு வலு பெற்றாலும், உங்களின் அவயோக கிரகமான செவ்வாயுடன் அவர் இணைந்திருக்கிறார். அதேநேரத்தில் புதன் குருபார்வைக்குள் வருவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களில் சிலருக்கு சென்ற மாதம் முழுவதும் கணவன் மனைவிக்குள் மனக் கஷ்டங்களும் போராட்டங்களும் இருந்தது. அது இப்போது தீரும். முக்கிய பலனாக சிலருக்கு தந்தையின் வழியில் மன வருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
விட்ட
குறை தொட்ட குறையாக சென்ற மாதம் போல ஈகோ பிரச்னையால் மாத பிற்பகுதில் கணவன்,
மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம்
என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின்
கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால்
மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில்
நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள்
கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா
விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment