கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
கும்ப ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக ஐம்பது வயதினைக் கடந்தவர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல வருமானம் இருக்கும். ஜனனகால ஜாதகப்படி யோக தசா, புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு கொரோனாவால் வந்துள்ள முடக்கத்தையும் மீறி நன்மைகள் உண்டு. இளைய பருவத்தினர் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ வெற்றியாக முடியும். மனதில் உற்சாகம் இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், சஞ்சலப்பட்டுக் கொண்டும் இருந்தவர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும். சுக்கிரன் வலுவுடன் இருப்பதால் பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளுக்கு தகவல் வரும்.
வேலை வாங்கித் தருவதாக
எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம்
இருக்கிறது. மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும்
பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு
பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறு விஷயத்திற்கு
கூட நீங்கள் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக
இருங்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் அதில் அர்த்தம்
இருக்கிறது. ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment