Saturday, June 26, 2021

மகரம்: 2021 ஜூலை மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மகரம்:

 மகரத்திற்கு வேலை, தொழில் போன்றவைகளிலும் குடும்பத்திலும் மாற்றங்கள் நடக்கக் கூடிய மாதம் இது. சிலருக்கு இடமாறுதல் இருக்கும். பெரும்பாலான மகரத்தினருக்கு குடும்பம், வேலை, தொழில் போன்றவைகளில் ஊர்மாற்றம், இடமாற்றம், தொழில்மாற்றம் போன்றவைகள் உண்டு. மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் மகரத்தின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.

ஒரு குறிப்பிட்ட பலனாக ராசியில் சனி அமர்ந்து அவரை செவ்வாயும் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குறிப்பாக உங்களில் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். சிறு விஷயத்திற்கு கூட பொறுமைஇழந்து எரிச்சல் படுவீர்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஏற்கனவே பிடிவாதக்காரராகிய நீங்கள் தற்போது அதிகமான கோபத்திற்கு ஆளாக கூடிய சில சம்பவங்கள் நடக்கும். எதிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. சிலருக்கு மாத பிற்பகுதியில்  நல்ல பலன்கள் இருக்கும். முற்பகுதியில் சிறிது அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிவுக்கு வரும்.

கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும்.  இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி  நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம்.

2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 -ம்தேதி அதிகாலை 3.14 மணி முதல் 15 -ம்தேதி இரவு 9.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். 

No comments :

Post a Comment